வியாழன், 17 டிசம்பர், 2020

பெரியார், அண்ணா, கலைஞர் பாதையை உதாசீனம் செய்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஈழமே சாட்சி! ஏமாந்து விடாதீர்கள் மக்களே!

மக்கள் பெரிதும் சிந்தனை சோம்பேறிகளாக இருக்கிறார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது . கண்முன்னே தெரியும் திராவிட இயக்க வரலாறு தெரியாது . தமிழகம் முன்பு எப்படி இருந்தது என்று படித்து அறியும் ஆவல் இல்லை . 

கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் ஏதோ பாலாறும் தேனாறும் ஓடியது போன்றும் திராவிட கட்சிகளால்தான் இன்று தாழ்ந்து போயிருப்பது போலவும் பேசிகிறார்கள் ஒரு வேளை இப்படி பேசினால் பிறர் தன்னை ஒரு அறிவாளியாக கருதக்கூடும் என்ற கோமாளித்தனமோ தெரியவில்லை.

பழைய கறுப்பு வெள்ளை திரைப்படங்களை பார்த்தாலே தெரிந்து விடும் அன்று நிலவிய கொடுமையான வறுமை.

ஒட்டி உலர்ந்த உடலும் .. காணும் இடம்தோறும் அழுகும் தூசியும் நிரம்ப பெற்ற தெருக்களும் எந்தவித நம்பிக்கைகளும் அற்ற மனிதர்களுமாக அன்றய தமிழகம் இருந்தது .
ஆண்டான் அடிமைகளுக்குள் மறைக்கவே முடியாமல் காட்சி அளிக்கும் குரூர வித்தியாசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
 
ஏழைமக்களின் வறுமையை அது ஏதோ இறைவன் தந்த வாழ்க்கை முறை என்று கற்பிதம் செய்த பார்பனீயத்தின் திட்டமிட்ட சுரண்டலால் ஆயிரமாண்டுகளாக எலும்பும் தோலுமாக சுருங்கி போன மக்கள் கூட்டம்தான் அன்று இருந்தது
பார்ப்பனர் அல்லாதோரின் விழுப்புணர்ச்சியால் மட்டுமே எல்லா புரட்சி விதைகளும் தமிழகத்தில் முளைக்க தொடங்கின .. அவற்றின் பெரும்பாய்ச்சல்தான் பின்னாளில் நாம் இன்று காணும் தமிழக வளர்ச்சி எல்லாம்.
அதிலும் 67 இல் திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்து வைத்த புரட்சி யுகத்தை பற்றிய எந்த வரலாற்று அறிவும் அற்ற ஒரு மக்கள் குழாம் இன்றிருக்கிறது என்று எண்ணி பார்க்கும் போது ஒரு புறம் வருத்தமாக இருந்தாலும் இவர்களை சபிக்கலாமா என்றும் கூட தோன்றுகிறது
 
முழு இந்தியாவுக்கும் வழி காட்டியாக வாய்த்த தலைவர்களையும் அவர்கள் வழி நடத்திய இயக்கங்களை பற்றியும் புரிந்து கொள்ளாத மக்கள் எப்படி முன்னேற போகிறார்கள்?
 
பெரியார் அண்ணா கலைஞர் ஆற்றிய பணிகள் ஆயிரமாண்டு சாதனை சரித்திரங்கள்.
இவர்கள் அமைத்த பாதையை உதாசீனம் செய்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஈழமே சாட்சி.
 
பார்பனீயத்தின் பகடை காய்களாக உருமாறி திசைமாறி போன அந்த வரலாறு ஞாபகம் இருக்கட்டும். அந்த பார்பனீயத்தின் நச்சு பற்கள் பல உருவத்தில் இன்று தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறது.
ஏமாந்து விடாதீர்கள் மக்களே!!

கருத்துகள் இல்லை: