dinakaran : சென்னை: கடந்த பிப்ரவரி 14ம் தேதி சென்னையில் வாசகர்
வட்டம் சார்பில், நடந்த கருத்தரங்கில் தி.மு.க அமைப்பு செயலாளர்
ஆர்.எஸ்.பாரதி, பட்டியலினத்தவருக்கு எதிராக பேசியதாக தேனாம்பேட்டை
காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
செய்யப்பட்டது. பிறகு வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த
வழக்கை ரத்து செய்யக்கோரி ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்தார். இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
ஆர்.எஸ்.பாரதி தரப்பில், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்
எனவும், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க
வேண்டும் எனவும் கோரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணைக்கு நேரில்
ஆஜராவதில் இருந்து விலக்களிப்பது தொடர்பாக தனியாக மனு தாக்கல் செய்ய
உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 18ம் தேதிக்கு தள்ளிவைத்தா
வெள்ளி, 18 டிசம்பர், 2020
வன்கொடுமை சட்டத்தில் பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி ஆர்.எஸ்.பாரதி மனு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக