வியாழன், 17 டிசம்பர், 2020

அமி மைக்கல் அம்மையார் கோயில்களில் பொட்டுக்கட்டி விடப்பட்ட சிறுமிகளை மீட்ட Amy Carmichael தேவைதை


Raman Mathi  : அயர்லாந்தை சேர்ந்த Amy Carmichael  அமி மைக்கேல் பிறந்த தினம் இன்று ( 16 டிசம்பர் 1867 ) .  இவர் தமிழகத்தில் தேவதாசிமுறை ஒழிப்பிற்கு

முன்னோடியானவரும், கோவில்களில் இருந்த தேவதாசிகளையும் மீட்டவருமாவார்.   கோயில்களில்  பொட்டுகட்டி விடப்பட்ட சுமார் 1000 சிறுமிகளையும் மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தவர் இவர்.    கிறிஸ்துவ Protestant Christian missionary மதப்பரப்புனராக இருந்தாலும்  சமூக சேவையில் பெரிதும் ஈடுபட்டு  அப்பகுதி மக்களால் “அம்மா” என்றழைக்கப்பட்டார்.    திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி அருகில் உள்ள டோனாவூரில் தங்கி கிறிஸ்துவ மதப்பரப்புதல் மற்றும் சமூக சேவைகளை செய்து கொண்டிருந்தவர் இவர் .   அக்காலங்களில்  கோவில்களுக்கு சிறுமிகளை நேர்ந்து விடுவதையும் பருவமடைந்தபின்னர் அவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை அறிந்து வேதனை பட்டார்.  

அந்த  கோவிகளில் இருந்து பெண்களையும் சிறுமிகளையும் மீட்டு பெண்களுக்கு திருமணமும், சிறுமிகளுக்கு கல்வியும் போதித்து அவர்களை வளர்த்து வந்தார்,  தேவதாசிமுறையை ஒழிப்பதற்கு போராட்டமும் நடத்திவந்தார், 

tamildigitallibrary.in :சுமார் 55 வருடத்திய சமூகப்பணிக்குப்பின்னர் 1951 ல் இவர் சேவை செய்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி அருகில் உள்ள டோனாவூரில் காலமானார். 


     ஏமி கார்மைக்கேல் 1867ல் வட அயர்லாந்தில் டிசம்பர் 16ம் தேதி டேவிட் – கேத்தரின் கார் மைக்கேல் தம்பதியினருக்கு மகளாக பிறந்தார். அல்ஸ்டர் பிரெஸ்பிட்டிரியன் பிரிவைச் சேர்ந்ததாக அவருடைய குடும்பம் இருந்தது. சங்கீதப் புத்தகத்தில் இருந்து பாடல்களைப் பாடுவதையும், குடும்ப ஆராதனையையும், பத்துக்கட்டளைகளைப் பின்பற்றுவதையும் தீவிர வழக்கமாகக் கொண்டிருந்த பக்திமிக்க குடும்பப் பாரம்பரியத்தைத் கொண்டிருந்தார் ஏமி.

          இந்தியாவில் கிறித்துவ ஊழியத்திற்காக வந்த ஏமி அம்மையார் திருநெல்வேலிக்கு வருகை புரிந்த போது 1932இல் எழுதப்பட்ட கடிதத்தின்படி திருநெல்வேலி மாகாணத்தில் 3000 கோயில்கள் இருந்தன. இக்கோயில்களுக்கு ஆதரவற்ற, ஏழைப் பெண் குழந்தைகள் பொட்டுக் கட்டி விடுதல் என்னும் முறையில் விடப்பட்டனர். 1901இல் ஆரம்பித்து 1904 இல் ஏமி பதினேழு குழந்தைகளை இந்தக் கொடுமையிலிருந்து காப்பாற்றியிருந்தார். இந்தக் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான இடத்தைத் தேடியபோதுதான் டோனாவூர் கண்டு பிடிக்கப்பட்டது. ‘டோனா’ என்பது சி,எம்.எஸ். நிறுவனத்துக்கு ஆதரவளித்து வந்த ஒரு ஜெர்மன் பெண்மணியின் பெயர். அவருடைய பெயரே இந்தக் கிராமத்துக்கு வைக்கப்பட்டிருந்தது. அவருடைய பணத்தில் 1824இல் ஒரு சிறு சபைக் கட்டடமும் இங்கு கட்டப்பட்டது. 1900இல் ஏமி இந்த ஊருக்கு முதல் தடவை வந்தபோது அது அவருக்கு பார்த்ததுமே பிடித்துப்போய்விட்டது. 

இறுதியில் டோனாவூரே ஏமியின் நிரந்தர வாழ்க்கை ஸ்தலமாகியது. அங்கு மூன்று அறைகள் கொண்டதாக இருந்த சிறுவீட்டில் வாக்கர் தம்பதியினரின் துணையோடு தான் காப்பாற்றிய பிள்ளைகளை வளர்க்க ஆரம்பித்தார் ஏமி. 


அதுவே பின்பு வளர்ச்சியடைந்து டோனாவூர் ஐக்கியமாகி 1000க்கு மேற்பட்ட சிறுமிகளும், சிறுவர்களும் இருந்து வளர்ந்து ஏமியின் கண்காணிப்பில் கல்வி பயின்ற நல் ஊழியமாக இருந்தது. சிறுமிகள் மற்றும் பெண்களைப் போன்று சிறுவர்களும் ஆலயங்களுக்குப் படைக்கப்பட்டு, நாடகக் கம்பெனிகளுக்கு விலைக்கு விற்கப்பட்டனர். இத்தகைய ஒழுக்கமற்ற வாழ்வை தடுக்கவே 1926ஆம் ஆண்டு “டோனாவூர் ஐக்கியத்தை”  நிறுவினார்.

          ஏமி கார்மைக்கேல் அம்மையார் அவர்கள் திக்கற்றவர்கள், விதவைகள், துன்பப்படுவோர், ஒழுக்கங்கெட்டவர்கள், ஆதரவற்றோர் போன்றவர்களுக்குப் புகலிடம் தந்து, அவர்களுக்குக் கிறிஸ்துவின் அன்பை செயல் வடிவத்தில் காட்டினார். இந்த அமைப்பை “நட்சத்திரக் கூட்டம்” என்றும் அழைத்தார். ஏமியோடு சேர்ந்து உழைப்பதற்காக அவரால் தெரிந்தெடுக்கப்பட்ட பலர் நியமிக்கப்பட்டிருந்தனர். நாளடைவில் ஒரு பெரிய பிள்ளைகள் காப்பகமாக பல்வேறு ஊழியர்களைக் கொண்டு வளர்ந்த ஸ்தாபனமாக டோனாவூர் ஐக்கியம் மாறியது. கல்வி ஸ்தலங்களும், மருத்துவமனையும் பயிற்சி ஸ்தலங்கள் என்று பல்வேறு பணிகளும் டோனாவூர் ஐக்கியத்தில் ஒவ்வொன்றாக ஆரம்பிக்கப்பட்டன. ஏமியுடைய பெரும்பாலான ஊழியம் வாலிப பெண்களுக்கு மத்தியில் இருந்தது. இவர் மூலமாய் அநேக வாலிப பெண்கள் விபச்சாரத்திலிருந்து மீட்கப்பட்டனர். அதோடல்லாமல் அநேக குழந்தைகளை எடுத்து வளர்கக ஆரம்பித்தார். இதனால் ‘டோனாவூர் ஐக்கியம்‘ என்ற அமைப்பை டோனாவூரில் நிறுவினார். ஏமியின் வழிநடத்துதலால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அவர் அமைப்பு அடைக்கலமாய் இருந்தது அவர் மிஷனரி பணிக்காகத் தன்னை அர்ப்பணித்தார். இவரின் ஊழியத்தால் கவரப்பட்ட ராணி மேரி 1912-ல் டோனாவூரில் ஒரு மருத்துவமனை நிறுவ நிதியுதவி அளித்தார்.1918-ல் சிறுவர்களுக்கான ஆதரவு இல்லத்தை நிறுவினார். இந்த சிறுவர்கள் பெரும்பாலும் இவரால் மீட்கப்பட்ட (விபச்சாரத்திற்கு வலுக்கட்டாயத்திற்குட்பட்டவர்களின் குழந்தைகள்) ஆவார்கள். 1951 ஆம் ஆண்டு ஏமி தன்னுடைய 83 ஆம் வயதில் மரணமடைந்தார். இந்திய அரசு 1948 ஆம் ஆண்டு ‘தேவதாசி’ முறையை ஒழித்தது. ஏமியின் பெருமுயற்சியே இதற்கு வித்திட்டது. இன்றும் கூட டோனாவூர் ஐக்கியம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது

 

கருத்துகள் இல்லை: