
மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்துமதியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் இந்துமதி கூறியிருப்பதாவது: “நான் அழகாக இருப்பதுதான் பிரச்னை. என்னை வர்ணித்து உயர் அதிகாரிகள் தொல்லை தருகிறார்கள். இதனால் சரியாக வேலை பார்க்க முடியவில்லை. ஏற்கனவே கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் எனக்கு, இது பெரிய கஷ்டத்தை தருகிறது. பணிமாற்றம் செய்யுமாறு கேட்டும் என்னை வேறு இடத்தில் மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. என் அழகே எனக்கு ஆபத்தாக உள்ளது. எனவே தான் தற்கொலைக்கு முயன்றேன்” என்று கூறியுள்ளார்.
இதை பதிவு செய்து கொண்ட காவல்துறையினர் இந்துமதிக்கு தொல்லை கொடுத்த உயர் அதிகாரிகள் மீது தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் காவல்துறை மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயர் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரிகளை துன்புறுத்துவதானால், அவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்வது என்பது வழக்கமாகி வருகிறது. இதற்கு முன் திருப்பூரில் ஆயுதப்படை பெண் காவலர் சுஷ்மிதா (24) என்பவர் உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் இரண்டு முறை தற்கொலை செய்து கொள்ள முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது. minnambalam.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக