வெள்ளி, 25 நவம்பர், 2016

கேரள போலீஸால் வழக்கறிஞர் அஜிதா சுட்டுக்கொலை.. மாவோயிஸ்ட் என்கவுண்டராம்?

ajitha கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலாம்பூரில் நடந்த மாவோயிஸ்டுகளுக்கு எதிரான எண்கவுண்டரில் இரு மாவோயிஸ்டுகள் கேரள போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் வழக்கறிஞர் அஜிதா என்கிற காவேரி (வயது 45),  குப்புசாமி என்கிற குப்பு தேவராஜ் (வயது 60) என தமிழக போலீஸ் டெக்கான் கிரானிக்கல் நாளிதழுக்கு அளித்த தகவலில் தெரிவித்திருக்கிறது.
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த அஜிதா,  சென்னை கல்லூரியில் வழக்கறிஞர் பட்டம் பெற்றவர் மாவோயிஸ்ட் கொள்கைகள் மீது பற்றுக் கொண்டு,  கர்நாடகத்துக்கு குடிபெயர்ந்ததாக டிசி ஏடு தெரிவிக்கிறது. அதோடு தமிழக போலீஸில் அவர் மீது எந்தவித குற்றப் புகாரும் இல்லை என்றும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
குப்புசாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்,  தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) இயக்கத்தின் மேற்கு தொடர்ச்சி மலை சிறப்பு மண்டல கமிட்டியின் மூத்த செயல்பாட்டாளர். 90களில்  நடந்த மதுரை வங்கி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர் எனவும் டிசி ஏடு சொல்கிறது. கொள்ளை சம்பவத்தில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த அவர், பிறகு தலைமறைவானார் எனவும் செய்தி சொல்கிறது.

இருவரும் கர்நாடக வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களிடம் நக்ஸலைட் கொள்கைகளைப் பரப்பும் பணியில் இருந்ததாக போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது.
தமிழ்நாடு க்யூ பிரிவு போலீஸார் பத்மா, மணிவாசகம், கார்த்திக், மகாலிங்கம், வேல்முருகன், காளிதாஸ், பகத் சிங் ஆகிய நக்ஸலைட் செயல்பாட்டாளர்களை தேடிக்கொண்டிருப்பதாகவும் டிசி ஏடு குறிப்பிட்டுள்ளது.  thetimestamil.com

கருத்துகள் இல்லை: