பரம்பரை சொத்தை வைத்து வாழ்பவர்களும்,, சிறு வணிகம் மற்றும் சுயதொழில் செய்துவரும் நடுத்தர வர்க்கம் இனிமேல் கீழ் நடுத்தர வர்க்கமாக மாறும். அரசின் கொள்கைப்படி புதிதாக பொருளாதார குற்றவாளிகள் உருவாவார்கள்...
புதுடில்லி : லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட வருமானவரி மசோதாவின் படி, கணக்கு காட்டாத வருமானத்திற்கு 30 சதவீதம் வரியும், 10 சதவீதம் அபராதமும், 33 சதவீதம் கூடுதல் வரியும் விதிக்கப்பட உள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்ட விவகாரம் தொடர்பாக தொடர்ந்து 10 வது நாளாக எதிர்க்கட்சிகளால் இன்றும் பார்லி.,யின் இருஅவைகளிலும் அமளி நிலவியது. எதிர்க்கட்சிகளில் கூச்சல் குழப்பத்திற்கு இடையே மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த புதிய சட்ட திருத்தத்தின்படி, கணக்கில் காட்டாத வருமானத்திற்கு இனி 30 சதவீத வரி விதிக்கப்படும். 10 சதவீதம் அபராதமும், 33 சதவீதம் கூடுதல் வரியும் விதிக்கப்பட உள்ளது.
ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்ட அறிவிப்பிற்கு பிறகு கணக்கில் காட்டப்பட்ட தொகையில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, அந்த தொகை பிரதமரின் ஏழைகள் நலன் வைப்பு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும். ஸ்வைப்பிங் மிஷின்கள் உற்பத்தியாளருக்கு, 12.5 சதவீதம் கலால் வரி மற்றும் 4 சதவீதம் சிறப்பு கூடுதல் வரி ஆகியன நீக்கப்படும். ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பிற்கு பிறகு, வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கணக்கில் வராத வருமானத்திற்கு 75 சதவீதம் வரியும், 10 சதவீதம் அபராதமும் விதிக்கப்படும். டெபாசிட் செய்யப்பட்ட கணக்கில் வராத வருமானத்தின் ஒரு பகுதியை 4 ஆண்டுகளுக்கு வெளியே எடுக்க முடியாது. dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக