
டில்லியின் மேற்கு பகுதியில் உள்ள நங்கோலி பகுதியில் செயல்படும் பள்ளியில், படித்த பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவர் நீக்கப்பட்டார். அவர் தேர்வில் பல முறை தேர்ச்சி பெறாத காரணத்தினால் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திங்களன்று பள்ளியில் தேர்வு நடந்த நிலையில், வகுப்பறை ஒன்றில் முகேஷ்குமார் என்ற ஆசிரியர் கண்காணிப்பாளராக பணியாற்றினார். அப்போது வகுப்பறைக்குள் அத்துமீறி நுழைந்த மாணவன், ஆசிரியரை கடுமையாக தாக்கினான். அவனுடன், தேர்வு எழுதிக்கொண்டிருந்த நண்பனும் சேர்ந்து முகேஷ்குமாரை கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
தலைமையாசிரியருக்கும் கொலை செய்யப்பட்ட ஆசிரியர் முகேஷ்குமாருக்கும், கடந்த சில நாட்களாக மாணவர்களும் அவர்களது பெற்றோரும், தொடர்ந்து மிரட்டல்விடுத்து வந்ததாக சக ஆசிரியரும், உறவினர் ஒருவரும் கூறியுள்ளனர். கொலை செய்த இரண்டு மாணவர்களும் தொடர்ச்சியாக தேர்வில் தோல்வியடைந்து வந்ததாகவும் ஆசிரியர் கூறினார். சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு கேட்டும், கொலை சம்பவத்தை கண்டித்தும் போராட்டம் நடத்த ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர். தினமலர்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக