வெள்ளி, 30 செப்டம்பர், 2016

தஞ்சையில் சோழர் கால துறைமுகம் கண்டுபிடிப்பு!

minnambalam.com : தஞ்சை மந்திரிப்பட்டினத்தில் சோழர் கால துறைமுகம் இருந்ததற்கான ஆதாரங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய தொல்லியல் துறை இணைந்து கடல்சார் அகழாய்வினை மேற்கொண்டன. கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்டு வந்த ஆய்வில், சோழர் காலத்தில் பயன்படுத்தபட்ட நாணயங்கள் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் அருகில் உள்ள ஊர்களின் பெயர்கள் அரசுடன் தொடர்புடையதாக இருந்ததால், அந்த கிராமத்தை ஆய்வுக்கு தேர்வு செய்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர். சோழர் மன்னர் வெளியிட்ட செப்பு நாணயங்கள், வீட்டின் தரைப்பகுதி, சுடுமண் குழாய்கள், சுடுமண் பொம்மைகள், முத்திரைகள், அரிய வகை மணிகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வு குறித்து தஞ்சை பல்கலைக்கழக கடல்சார் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜவேலு கூறியது: இந்த ஆய்வில் கண்டறியபட்ட பொருள்கள் அனைத்தும் மந்திரிப்பட்டினத்தில் சோழர் கால துறைமுகம் இருந்ததை உறுதி செய்கிறது. சங்க காலம் தொடங்கி 16 ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த அரச மரபினரும் இந்த துறைமுகத்தை தங்களுடைய கட்டுபாட்டில் வைத்திருந்தனர். அப்பகுதியில் அப்போது இருந்த தானயன்குளம் ஏரி, செம்பட்டன் ஏரி, திருத்ததேவன் ஏரி உள்ளிட்டவை தற்போதும் உள்ளன. இந்த ஆதாரங்கள் அனைத்தும் மந்திரிப்பட்டினத்தில் துறைமுகம் இருந்ததை உறுதிபடுத்துகிறது. மேலும்,
இந்த கடல் அகழாய்வுக்கு 1.5 லட்சம் நிதி ஒதுக்கபட்டது என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: