போட்டியிட தயக்கம்: தே.மு.தி.க., அதிர்ச்சி தமிழகம் முழுவதும், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்பியோர், திடீரென பின்வாங்குவதால், அக்கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த, 20ம் தேதி, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலர் ஜெயப்பிரகாஷ் மற்றும் தெற்கு மாவட்ட செயலர் பரமசிவம் ஆகியோர், தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலினை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தனர்.இதே போல, பல மாவட்டங்களில் உள்ள கட்சி நிர்வாகிகளும், கட்சி மாற காத்திருக்கின்றனர். இது தொடர்பான தகவல்கள் கிடைத்ததால், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டிய கட்சியினர், திடீரென, 'பம்ம' துவங்கி உள்ளனர். யாரும் தயாராக இல்லை இது குறித்து, தே.மு.தி.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:சட்டசபைதேர்தல் படுதோல்விக்குப் பின், தே.மு.தி.க., கலகலத்து வருகிறது. இருந்தும், 'உள்ளாட்சி தேர்தலில், கட்சி தனித்து போட்டியிடும்' என அறிவித்து, விருப்ப மனுக்களை, கட்சி நிர்வாகம் வாங்க உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே, கட்சி நிர்வாகிகள் பலரும், மாற்று முகாம் தேடி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, கட்சியினர் யாரும் தயாராக இல்லை. இதனால், வேட்பாளர்கள் கிடைப்பது அரிதாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் விருப்ப மனு பெறவே, கட்சியினர் ஆர்வம் காட்டாமல் பின்வாங்குவது, தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். -- நமது நிருபர் -- தினமலர்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக