செவ்வாய், 27 செப்டம்பர், 2016

சமண துறவியின் சிதையை எரிப்பதற்கு 11 கோடி ஏலம் .... Shri Premsurjiswaji, 97, was the chief of Tapagachha sect

மும்பை: மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் காலமான, சமணத் துறவியின்
சிதையை தீயிட்டு எரிப்பதற்கான வாய்ப்பு, 11 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. புகழ் பெற்ற சமணத் துறவிகளின் சிதையை எரிப்பதற்கும், இறுதிச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் பொருட்களை பெறுவதற்கும், ஏலம் விடப்படுவது வழக்கம். மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில், சமீபத்தில், 97, வயதான சமணத் துறவி, பிரேம்சுர்ஜி சுவாஜி, காலமானார். அவரது சிதையை எரிப்பதற்கான வாய்ப்பை வழங்க, ஏலம் விடப்பட்டது. மூன்று மணி நேரம் நடந்த இந்த ஏலத்தின் இறுதியில், 11 கோடி ரூபாய்க்கு, கூட்டாக ஏலம் கேட்ட ஐந்து பேருக்கு, துறவியின் சிதையை எரிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


துறவியின் பாடையை துாக்கிச் செல்லும் வாய்ப்பு, நான்கு பேருக்கு, தலா, 21 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இறுதிச் சடங்கின் போது பயன்படுத்தப்பட்ட, புனித நீர் நிரப்பப்பட்ட, நான்கு சிறு வெள்ளிக் குடங்களை வைத்துக் கொள்ளும் உரிமை, தலா, 21 லட்சம் ரூபாய்க்கு, நால்வருக்கு கிடைத்தது.
துறவியின் உடல், அமர்ந்த நிலையில் பாடையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஏலத்தில் வென்ற ஐந்து பேர், துறவியின் சிதைக்கு தீ மூட்டினர். ஏலத்தில் பெறப்படும் பணம், சமண மதம் சார்ந்த செலவுகளுக்கு பயன்படுத்தப்படும் என தகவல்கள் கூறுகின்றன.dinamalar.com

கருத்துகள் இல்லை: