சனி, 1 அக்டோபர், 2016

ராம்குமார் உடல் தந்தையிடம் ஒப்படைப்பு!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் கடந்த 18ஆம் தேதி
உடல் நலக்குறைவால் புழல் சிறையிலிருந்து ராயப்போட்டை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்ததாக சிறைத்துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. ராம்குமாரின் பிரேத பரிசோதனையில் தாங்கள் சொல்லும் மருத்துவரை நியமிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்கள். கீழ்பாக்கம் மருத்துவர்களுடன் ஸ்டோன்லி மருத்துவர் பாலசுப்பிரமணியத்தையும்,ஏம்ஸ் மருத்துவர் ஒருவரை நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு 27ஆம் தேதிக்குள் பிரேத பரிசோதனையை முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.பின்னர் வேறு அமர்வில் மேல்முறையீடு செய்த பின்னர் 30ஆம் தேதிக்குள் பிரேதபரிசோதனை முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதயைடுத்து உச்சநீதிமன்றத்தை நாடிய ராம்குமாரின் தந்தை தரப்பு தனியார் மருத்துவரை நியமிக்க கோரியிருந்தது பின்னர் மனுவை திரும்ப பெற்றதால் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இதையடுத்து 13 நாட்களுக்கு பின்னர் இன்று காலை 10.30 மணி அளவில் பிரேத பரிசோதனை தொடங்கியது. மூன்றரை மணி நேரம் பரிசோதனை நடைபெற்றது. இதையடுத்து ராம்குமாரின் உடல் அவரது தந்தை பரமசிவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. படங்கள்: அசோக்,  நக்கீரன,இன்

கருத்துகள் இல்லை: