திங்கள், 26 செப்டம்பர், 2016

நூறு குறும்படங்கள் திரையிடல்: தொடக்க விழா

thetimestamil.com  : தமிழ் சினிமாவின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ் ஸ்டுடியோ  நூறு
குறும்படங்களை திரையிட இருக்கிறது. இதன் தொடக்க விழாவில்படத்தொகுப்பாளர் B. லெனின்,ஞானராஜசேகரன் IAS,சிவகாமி IAS,இயக்குனர் வஸந்த் ஆகியோர் இயக்கிய நான்கு குறும்படங்கள் திரையிடப்படவிருக்கின்றன என்று தமிழ் ஸ்டுடியோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. மேலும் அக்குறிப்பில், பெரும்பாலானவை தேசிய விருது பெற்ற குறும்படங்கள். நாக்-அவுட் குறும்படம்தான் தமிழின் குறும்பட அலையை உருவாக்கிய முதல் குறும்படமாகவும், முதல் தேசிய விருது பெற்ற படமாகவும் இருந்து வருகிறது. திரையிடல் பியூர் சினிமா புத்தக அங்காடியின் மூன்றாவது மாடியில் உள்ள அரங்கில் நடைபெறவிருக்கிறது. எனவே நண்பர்கள் திரளாக இதில் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.


25-09-2016, ஞாயிறு மாலை 5.30 மணிக்கு.
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
சிறப்பு விருந்தினர்கள்:
படத்தொகுப்பாளர் B. லெனின்
ஞானராஜசேகரன் IAS
சிவகாமி IAS
இயக்குனர் வஸந்த்
திரையிடப்படவிருக்கும் குறும்படங்கள்:
நாக்-அவுட் (B. லெனின்)
ஒரு கண் ஒரு பார்வை (ஞானராஜசேகரன் IAS)
ஊடாக (சிவகாமி IAS)
தக்கையின் மீது நான்கு கண்கள் (இயக்குனர் வஸந்த்)

கருத்துகள் இல்லை: