திங்கள், 26 செப்டம்பர், 2016

சசிகலா புஷ்பாவை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை !

சென்னை: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி.
சசிகலா புஷ்பாவை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. மேலும் அக்டோபர் 3, 7-ந் தேதிகளில் சசிகலா புஷ்பா விசாரணைக்கு வரும்போது அவருக்கு உரிய பாதுகாப்பு தரவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை செய்த பெண்கள் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்படாமல் இருக்க சசிகலா புஷ்பா அவருடைய லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப், தாய் கவுரி ஆகிய 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.

இதையடுத்து சசிகலா புஷ்பாவை 6 வார காலத்துக்கு கைது செய்ய கடந்த மாதம் இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம். இந்த நிலையில் சசிகலா புஷ்பா மனு மீது இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது.
அப்போது சசிகலா புஷ்பாவை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்தது. மேலும் அக்டோபர் 3 மற்றும் 7-ந் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும் சசிகலா புஷ்பாவுக்கு உரிய பாதுகாப்பு தரவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  tamiloneindia.com

கருத்துகள் இல்லை: