புதன், 31 டிசம்பர், 2014

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்: மம்தா பானர்ஜி அதிரடி?

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசரச் சட்டத்தை மேற்கு வங்க மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம் என்று அம்மாநில முதலமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கார்காபூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மம்தா பானர்ஜி கூறுகையில், “நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்தத்துக்கான அவசரச் சட்டம் கொண்டுவருவது நியாயமற்ற செயல். நாடு முழுவதும் ஜனநாயகத்தை மத்திய அரசு நசுக்கி வருகிறது. ஒட்டுமொத்த நாட்டிலும், நரேந்திர மோடி அரசு உருவாக்கியுள்ள சூழ்நிலை நாட்டில் அவசர நிலையை விட மோசமானது. நிர்ப்பந்தம் காரணமாகவே, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது” என்று மம்தா பானர்ஜி  கூறினார்.மம்தாஜி இதுவுல  நீங்க உறுதியா நின்னா அடுத்த  பிரதமர் நீங்கதான் 
"அவர்கள் உங்களுடைய நிலங்களை துப்பாக்கி முனையில் பறித்துவிடுவார்கள். நான் இந்த சவாலை விடுகிறேன். நாங்கள் இதனை மேற்குவங்காளத்தை அனுமதிக்க மாட்டோம். அவர்கள் இதை செய்ய வேண்டும் என்றால், எனது சடலத்தின் மீதுதான் செய்ய முடியும். ஒரு அரசியல் கட்சி ஆட்சிக்கு வரலாம், போகலாம். எப்போதும் அரசும், ஜனநாயகமும் தொடரும்’ என்று கூறினார். மேலும், காப்பீடு மற்றும் பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை கொண்டுவருவது என்பது நாட்டை விற்கும் முயற்சி என்றும் இந்த முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.   tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: