
டீன் ஏஜ் வயதில் இப்படித்தான் இருப்பார்கள் என்று அதிகம் கண்டிக்காமல் மற்றவர்கள் அவனை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்திருந்தோம். ஆன்மிக பயணத்துக்கும் அவன் சென்றிருந்தான். அதன் மூலம் அவன் தன்னை உணர்ந்துகொள்வான் என்று எண்ணினோம். மீண்டும் குடும்பத்தினருடன் சேர்ந்து சந்தோஷமாக இருப்பான் என்று எண்ணினோம். ஆனால் அவன் கடவுளிடமே போய்சேர்ந்துவிட்டான். சுத்தமான அவனது ஆத்மாவால் சொர்க்கமே அவனால் சந்தோஷப்படும் என்று நம்புகிறேன். நான் எவ்வளவு அப்செட்டாக இருந்தாலும நகைச்சுவை உணர்வு மிக்க கிறிஸ்டோ என்னை சிரிக்க வைப்பான். இரண்டு வாரத்துக்கு ஒருமுறையாவது அவன் என்னை சந்தித்து பேசுவான். அவன் இப்போது இல்லை என்று எண்ணும்போது என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. இவ்வாறு கேத்ரின் கூறினார். - tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக