புதன், 6 பிப்ரவரி, 2013

680 கால்பந்து போட்டிகளில் மேட்ச் பிக்சிங் அம்பலம்

லண்டன்: உலகம் முழுவதும் நடந்த மொத்தம் 680 கால்பந்து போட்டிகளில் மேட்ச் பிக்சிங் நடந்து இருப்பது அம்பலமாகியுள்ளது.கால்பந்து போட்டிகள் பெரும்பாலும் களேபரங்களில் முடிவது வாடிக்கை.. கிரிக்கெட் போட்டிகள் அனைத்துமே 'மேட்ச் பிக்சிங்கில்தான்' இப்படி ஆடுகிறார்களோ என்ற சந்தேகத்தை உருவாக்குபவை.. தற்போது கிரிக்கெட்டுக்கு இருந்த 'மேட்ச் பிக்சிங்' பெயரை தட்டிப் பறித்திருக்கிறது களேபர கால்பந்து போட்டிகள்...கால்பந்துக்கு பிரபலமான ஐரோப்பாவில் மேட்ச் பிக்சிங் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் உள்ளூர் கால்பந்து போட்டிகளில் மட்டுமின்றி உலகக் கோப்பை, யூரோ கோப்பை போட்டிகளிலும் 'மேட்ச் பிக்சிங்' கொடிகட்டிப் பறந்திருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.இப்படியாக 680 போட்டிகளில் மேட்ச் பிக்சிங் அரங்கேறியுள்ளது. 15 நாடுகளைச் சேர்ந்த 425 அதிகாரிகள், வீரர்கள் இந்த மேட்ச் பிக்சிங் சூதாட்டத்தில் புரண்டு விளையாடி இருக்கின்றனர். ரூ 44 கோடிக்கு மேல் மேட்ச் பிக்சிங் மூலம் இந்த கும்பல் சம்பாதித்திருக்கிறது.மேட்ச் பிக்சிங் தொடர்பாக 150 வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் 2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடைபெற்றவை. இதில் 380 போட்டிகள் ஐரோப்பிய நாடுகளிலும், 300 போட்டிகள் ஆசியா, ஆப்பிரிக்கா, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் நடைபெற்றவை.

கருத்துகள் இல்லை: