அப்படி என்ன தான் பிரச்னை? காஷ்மீர் பிரச்னை இன்று, நேற்று துவங்கியது அல்ல. 1947லேயே பிரச்னைக்கு அச்சாரம் போடப்பட்டு விட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன், பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தினர். இதனால், காஷ்மீர் மகாராஜா ஹரிசிங், காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த பிரச்னையை இந்தியா, ஐ.நா.,வின் கவனத்துக்கு கொண்டு சென்றது. அங்கு உடனடியாக போர் நிறுத்தம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1953ல் காஷ்மீரில் பிரபல அரசியல் தலைவர் ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டார். இதனால், காஷ்மீரில் கலவரம் வெடித்தது. 20 நாட்கள் தொடர்ச்சியாக "பந்த்' நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தான், காஷ்மீரில் பிரிவினைவாத பிரச்னை தலை தூக்கியதற்கான துவக்கமாக அமைந்து விட்டதாக நம்பப்படுகிறது.
ஊடுருவல்: இதன்பின், குறிப்பிட்ட கால இடைவெளியில் காஷ்மீரில் கலவரம் ஏற்படுவது வழக்கமாகி விட்டது. அண்டை நாடான பாகிஸ்தான், காஷ்மீரை முன் வைத்து இந்தியாவை சீண்டுவதை, தன் அன்றாட அரசியல் நடவடிக்கையாகவே ஆக்கி விட்டது. இரண்டு முறை இந்தியாவிடம் அடி வாங்கியும் பாகிஸ்தான் திருந்தியதாக தெரியவில்லை. போதாக்குறைக்கு, கார்கில் போரிலும் இந்தியாவிடம் அடி வாங்கியது. ஆனாலும், எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறுத்தவே இல்லை. பாகிஸ்தானிலும், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் பயங்கரவாத முகாம்களை அமைத்து, அங்கு பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு பயிற்சி அளித்து, அவர்களை காஷ்மீருக்குள் ஊடுருவ வைக்கும் செயல்களை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. இவ்வாறு ஊடுருவும் பயங்கரவாதிகள், காஷ்மீரில் உள்ள அப்பாவி மக்களையும் மூளைச் சலவை செய்து, அவர்களையும் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்துகின்றனர்.
தற்போதைய பிரச்னைக்கு காரணம்? காஷ்மீரில் தற்போது எழுந்துள்ள கொந்தளிப்புக்கு முக்கிய காரணம், கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி ரஜோரியில் ஏற்பட்ட ஒரு சோகமான சம்பவம் தான். இரண்டு முஸ்லிம் அமைப்புத் தலைவர்களின் வழி காட்டுதலின்படி, அன்று, ரஜோரியில் ஏராளமான இளைஞர்கள் வீதியில் திரண்டு போராட்டம் நடத்தினர். அவர்களை கலைப்பதற்காக, பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில், துவாபில் மட்டூ என்ற 17 வயது மாணவன் உயிரிழந்தான். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம், இன்றுவரை முடிவுக்கு வரவில்லை.
90 பேர் பலி: கடந்த மூன்று மாதங்களில் மட்டும், இதுவரை 90 பேர் பலியாகி விட்டனர். இதில் உச்சகட்டமாக இம்மாதம் 13ம் தேதி மட்டும் 17 பேர் பலியாயினர். அன்று நடந்த கலவரத்தில் பெரும் வன்முறை நடந்தது. அரசு அலுவலகங்கள் தீ வைக்கப்பட்டன. பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல், கல்லெறி சம்பவம் ஆகியவை நடந்தன. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த மூன்று மாதங்களாக காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை. பால், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை. பத்திரிகைகள் கூட வெளிவரவில்லை.
ஒமருக்கு திறமையில்லையா? "கலவரத்தை கட்டுப்படுத்த முடியாததற்கு முதல்வர் ஒமர் அப்துல்லாவின் தவறான அணுகுமுறையே காரணம்' என, காஷ்மீரின் பிரதான எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி குற்றம் சாட்டுகிறார். ஆனால், ஒமர் அப்துல்லாவோ, வேறு விதமாக சிந்திக்கிறார். காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்தால், பிரச்னையை சமாளித்து விடலாம் என்கிறார், அவர். ஆனால், மத்திய அரசு இதைச் செயல்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறது.
சிறப்பு அதிகார சட்டம் வாபஸ்? காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டம், கடந்த 1990ல் இருந்து நடைமுறையில் உள்ளது. பயங்கரவாதிகளின் தாக்குதலை சமாளிப்பதற்காக, துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு, பாதுகாப்பு படையினருக்கு இந்த சட்டம் அனுமதி அளிக்கிறது. தெருக்களில் நடக்கும் வன்முறை, போராட்டம் போன்றவற்றை அடக்குவதற்கும் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது, ஒமருக்கு ஆதரவானவர்களின் வாதமாக உள்ளது. மூத்த ராணுவ அதிகாரிகளோ, சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறுவதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். விமானப் படை தளபதி பி.வி.நாயக் கூறுகையில், "பாதுகாப்பு படை வீரர்கள், நாட்டுக்காக சேவை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு மிகவும் அவசியம். இந்த விஷயத்தில் அரசு சரியான முடிவு எடுக்க வேண்டும்' என்றார். ராணுவ துணை தளபதி பரத்வாஜ் கூறுகையில், "சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டம் ஒன்றும், மிகவும் கொடுமையான சட்டம் இல்லை' என்றார்.
கருத்து வேறுபாடு: பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் மூத்த மத்திய அமைச்சர்களின் கருத்தும், சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறுவதற்கு எதிராகவே உள்ளது. இந்த விவகாரத்தில் ஒமர் அப்துல்லாவுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இதனால், ஒமரின் முதல்வர் பதவி பறி போகலாம் என்றும், டில்லியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. காஷ்மீரின் பிரதான எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்., தலைவர் சோனியாவும் பேச்சு நடத்தியது தான், இந்த பரபரப்புக்கு காரணம்.
பிரிவினைவாத அமைப்புகள்: பிரிவினைவாத அமைப்புகளின் ஆதிக்கம், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அப்பாவி மக்களை தூண்டி விட்டு, அவர்களை வீதிகளில் திரட்டி போராட்டம் நடத்துகின்றனர். கடைசியில், அப்பாவி மக்கள் தான் இதற்கு பலிகடா ஆகின்றனர். எத்தனை பேர் பலியானாலும் சரி, "காஷ்மீரை இந்தியாவில் இருந்து துண்டாடுவதே எங்கள் நோக்கம்' என, பிரிவினைவாத அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இன்னும் எத்தனை நாளைக்கு? காஷ்மீர் பிரச்னைக்கு ஒரே நாளில் தீர்வு கண்டுவிட முடியாது என்பது உண்மை தான். ஆனால், இந்த பிரச்னையை காலம், காலமாக தொடர விட்டுக் கொண்டிருப்பது, அத்தனை நல்லது அல்ல. "பேச்சுவார்த்தைக்கு தயார்' என, மத்திய அரசு வெளிப்படையாக அறிவித்தும், அதை ஏற்றுக் கொள்ள யாரும் தயாராக இல்லை என்பது தான் வேதனையான விஷயம். இன்னும் எத்தனை நாளைக்கு இந்த சோகம் தொடரப் போகிறது என, தெரியவில்லை. இடியாப்பச் சிக்கல் போன்ற இந்த பிரச்னைக்கு உடனடியாக முற்றுப் புள்ளி வைக்க முடியாவிட்டாலும், படிப்படியாகவாது முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. மத்திய அரசு மிகவும் எச்சரிக்கையாகவும், திறமையாகவும் செயல்பட வேண்டிய நேரம் இது.
காஷ்மீர் எங்களுக்கே; பாக்., கொக்கரிப்பு: கடந்த 2002ல் அமெரிக்காவின் அப்போதைய வெளியுறவுத் துறை திட்ட கொள்கை இயக்குனர் ரிச்சர்டு ஹாசுக்கும், பாகிஸ்தானின் மூத்த ராணுவ அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடல் தொடர்பான ஆவணம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ரிச்சர்டு ஹாஸ், "உங்களுடனான உறவை பலப்படுத்த வேண்டும் என, இந்தியா விரும்புகிறது. ஆனால், அதற்கு உங்கள் நாட்டில் இருந்து காஷ்மீருக்குள் நடக்கும் ஊடுருவல் தடையாக உள்ளது. அதை தடுத்து நிறுத்த வேண்டும்' என, கூறியுள்ளார். அதற்கு பதில் அளித்த பாக்., ராணுவ அதிகாரி, "காஷ்மீர் பிரச்னையில் எங்களை அந்நியப் படுத்த வேண்டாம். ஏனென்றால், காஷ்மீர் எங்களுக்கு சொந்தமானது' என, கூறியுள்ளார்.
செமின்கிரேனியர்மொரிசியஸ்,மொரிஷியஸ்
2010-09-19 16:59:08 IST
நாட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டோரை உடனடியாக தூக்கிலிடாமல் ஜெயிலில் போட்டு வழக்கு நடத்தி வாய்தா வாய்தா என்று இழுத்து அடித்து அவர்களை விடிவித்துவிடுவது ..இதனால் அவர்களுக்கு பயம் இல்லாமல் போய்விடுகிறது . பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் உடனடியாக தூக்கிலிடுங்கள்.மதத்தை பார்க்காதீர்கள் .ராணுவத்தை திரும்ப பெறாதே .திரும்ப பெற்றால் பாகிஸ்தானுக்கு காஷ்மீரை கைப்பற்றுவது எளிதாகிவிடும் .அதே நேரத்தில் மக்களுக்கு தீங்கிழைக்கும் ராணுவ வீரர்களை தண்டிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும் .காஷ்மீர் இளைஞர்களுக்கு கல்வி வசதியும் வேலை வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் .இவ்வாறு செய்வதன் மூலம் அங்கு அமைதியை ஏற்படுத்த முடியும் .மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கபட கூடாது .காஷ்மீர் நமது நாட்டின் ஒரு பகுதி அதை விட கூடாது .இனி மேலாவது .பாகிஸ்தானுக்கு உதவுவதை நிறுத்துங்கள் .இந்தியா பாகிஸ்தானுக்கு வழங்கும் நிவாரண உதவியை உடனே நிறுத்த வேண்டும் .ஏன் எனில் நம் பணத்தைக்கொண்டே நம் நாட்டில் கலவரத்தை தூண்டிவிடுகிறது .பாகிஸ்தானுக்கு உதவுவது என்பது நாமே சவக்குழியில் போய் படுப்பதற்கு சமம் ....
GRK - SA,இந்தியா
2010-09-19 16:13:01 IST
அதே ஐ நா சபை நம் அண்டை நாடு காஷ்மீரில் ஆக்கிரமித்த பகுதிகளை விட்டு முதலில் வெளியேற வேண்டும் என்று சொன்னதை நீங்கள் மறந்தது ஏனோ ? வந்துட்டாரு நியாயம் சொல்ல...
BRS - Saudi,இந்தியா
2010-09-19 16:05:16 IST
இந்திய அரசியல் கட்சிகளுக்கு காஷ்மீரின் எழில் நிறைந்த அந்த நிலபரப்பை அடைய நினைக்கிறார்களே தவிர அந்த மக்களை இந்தியராக நடத்தவில்லை. அவர்களின் அடிப்படை தேவைகள் எதுவும் பூர்த்தி செய்யப்படவில்லை. 60 வருடமாக அவர்களுக்கு அளித்த வளர்ச்சி பணிகள் எவை? மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்தல் தெரியும். மாவோயிஸ்டுக்கு எதிராக ராணுவத்தை அனுப்ப தயங்கும் அரசு காஸ்மீர் இந்திய மக்களுக்கு எதிராக ராணுவத்தை அனுப்பியது ஏன்? காஸ்மீரில் ராணுவம் மனித உரிமைகளுக்கு எதிராக நடந்து வருவது பல முறை நடுநிளையலர்களால் கண்டிக்கப் பட்டுள்ளது....
சேகர் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-19 15:39:03 IST
திரு.நரேந்திர மோடி காஷ்மீர் முதல்வராக வேண்டும்....
சையது அஹ்மத் - ரியாத்,சவுதி அரேபியா
2010-09-19 15:29:09 IST
எல்லாதிற்கும் காரணம் இந்திய ராணுவமும் கையாளாத அரசியல்வாதிகளும் தான். முதலில் எதற்கு எடுத்தாலும் ராணுவ நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். அவர்கள் குறையை பேச்சிவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்....
ஜனா - சென்னை,இந்தியா
2010-09-19 15:12:30 IST
திரு. நந்தகுமார் சொன்னது மிகச்சரியானது...
உதயா - திருச்சி,இந்தியா
2010-09-19 14:40:57 IST
It is better to separate than killing the innocents daily...no point in shouting united India if so everyone should be treated equal which is not happening here....
தமிழ்நேசன் - மஸ்கட்,ஓமன்
2010-09-19 14:34:49 IST
காஷ்மீர் பிரச்சனை, அதற்கு ஆகும் செலவுகள், உயிரிழப்புகள் ஆகிய அனைத்திற்கும் நேரு குடும்பமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். ஏனெனில், நேருவால் தான் காஷ்மீர் பிரச்சனை ஆரம்பம் ஆனது. அந்த பிரச்சனையை வளர விட்டதும் நேரு குடும்பமே....
ரமேஷ் க - சென்னை,இந்தியா
2010-09-19 14:18:24 IST
காங்கிரஸ் ஆட்சியில் காஷ்மீர் என்ன இந்தியாவே கை விட்டு போனாலும் போகும்!!...
ஸ்ரீ Kumar - JubailSaudiArabia,இந்தியா
சிவகுமார் - சவுதிஅரேபியா,இந்தியா
2010-09-19 14:00:03 IST
மத்தியஅரசு ராணுவத்திற்கு கலவரத்தை அடக்க முழு சுதந்திரம் தரவேண்டும். முதலில் உமர் அப்துல்லாஹ் நீக்கிவிட்டு ராணுவ ஆட்சியை அமுல்படுத்தவேண்டும். வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கண்டதும் சுட ஆணை பிரபிக்கவேண்டும். பிறகு என்ன கலவரம் அமைதியாக முடிந்துவிடும்....
k shanmugavelu. - Qatar,இந்தியா
2010-09-19 13:53:42 IST
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நேரு எடுத்த தவறான முடிவுகளும் தவறான கொள்கைகளும்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம். நேருவின் குடும்ப ஆட்சியும் காங்கிரஸ் கட்சியின் தவறான கொள்கைகளும் என்று முடிவுக்கு வருகிறதோ அன்று தான் இந்தியா உருப்படும்....this is 100% right...
ஆனந்த் - கும்பகோணம்,இந்தியா
2010-09-19 13:23:09 IST
எத்தனை ராணுவ வீரர்களின் குருதிக்கு நாம் பதில் சொல்ல முடியும். அவர்கள் சிந்திய ஒவொரு துளி செங்குருதிக்கும் நாம் செலுத்தவேண்டிய ஒரே காணிக்கை அடக்குமுறை தான். ராணுவ ஆட்சி உடனடியாக செயல்படுத்த பட வேண்டும். நரேந்திர மோடி போன்றவர்கள் பிரிதம மந்திரி ஆனால் மட்டுமே காஷ்மீர் ஐ நாம் காப்பாற்ற முடியும். காஷ்மீரில் ஏழ்மை மிகவும் குறைவு நம் மற்ற மாநிலங்களுடன் தொடர்பு படுத்தினாலே இது புரிய வரும். குடிசை வீடுகளை அங்கு நாம் பார்கவே முடியாது. எவ்வளவு ஏழையாக இருந்தால் கூட நம் மற்ற மாநிலத்தில் வாழும் ஏழைகளை விட அவர்களின் சொத்து அதிகமாகவே இருக்கும். நம்மையும் நம் அரசையும் ஏமாற்றி அவர்கள் வாங்கிய ஒவ்வொரு உதவி மட்டுமே அவர்களை ஊக்குவித்துக் கொண்டுஇருக்கிறது. இது போன்ற உதவிகளை பிரிவினைவதிகலே அதிகம் உபயோகிக்கின்றனர். இது அப்பாவி காஷ்மீர் மக்களுக்கு புரியவில்லை. நேர் வழியில் நாம் காஷ்மீரை காப்பாற்ற முடியாது, அதற்கு அரசியல் தந்திரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட அரசியல் தலைவர் காங்கிரஸ் கட்சியில் இப்போது yarum இல்லை. இதை இப்போதைக்கு அத்வானி அல்லது மோடி போன்ற தலைவர்களால் மட்டுமே சமாளிக்க முடியும். எக்காரணத்தை முன்னிட்டும் நம் பாரதத்தை அதுதவர்களுக்கு விட்டுக் கொடுக்க கூடாது. இவ்வளவு நாம் இழந்தது மட்டுமே போதும் . மகுடம் என்றும் நமக்கு மகுடமே அது காஷ்மீர் மட்டுமே. ஜெய்ஹிந்த்....
சிதம்பரம் . CT - Kabul,ஆப்கானிஸ்தான்
2010-09-19 13:15:39 IST
இந்த கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு இந்தியா பாகிஸ்தான் இருவருடமும் உள்ளது. 1953 ஆம் ஆண்டு ஐ நா சபை தீர்மானப்படி, அங்கு கருத்து நடத்தி அதன்படி கஷ்மீர் இந்திய உடனா பாகிஸ்தான் உடனா என்று தீர்மானிக்க வேண்டியதுதான். ஆனால் இருநாடுகளும் இதற்கு பயந்து தங்கள் கடமையில் தவறிவருகின்றன!...
புன்னகை மன்னன் - chennai,இந்தியா
2010-09-19 13:07:43 IST
காஷ்மீரிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு
மதுரை முத்து - மதுரை,இந்தியா
2010-09-19 12:57:59 IST
காஷ்மீருக்காக காங்கிரசை எவ்வளவு அசிங்கமான வார்த்தைகளால் திட்ட இயலுமோ அவ்வ்வளவு அசிங்கமாக கிட்டத்தட்ட 65 கோடிபேர் திட்டிக்கொண்டிருக்கிறோம். இந்த விளக்கெண்ணை அரசாங்கம் நமக்கு வேண்டாம். காஷ்மீர் நமக்கே....
பவித்ரா - chennai,இந்தியா
2010-09-19 12:51:39 IST
இத்தனை வருடங்களாக நம் அனைவரின் வரி பணமும் வேஸ்ட் ..பாகிஸ்தானில் உள்ள இரு பிரிவு முஸ்லிம்களிடம் நடக்கும் சண்டை நினைவில் இருக்கட்டும் ..இந்திய தாய் மிகவும் பொறுமை ஆனவள்...
விகடகவி - பாண்டி,இந்தியா
2010-09-19 12:49:47 IST
காஷ்மீரிகள் வைத்துள்ள கோரிக்கையை முதலில் படித்துபாருங்கள்.நாங்கள் பாகிஸ்தானுடன் செல்கிறோம் என்று இல்லை.பின்பு ஏன்?பதறுகிறீர்கள்.அதை நிறைவேற்றினால் அரசுக்கு பிரச்சனை என்றால் அந்த மக்களிடம் எடுத்து சொல்லுங்கள். அவர்கள் போராடுவதை தவறு என்று உள்ளூர் மக்களுக்கு புரியவைக்க முடியாதவர்கள், வெளி உலகத்திற்கு எப்படி புரிய வைக்கப்போகிறீர்கள். பி.ஜே.பி. ஏற்க்கனவே இந்தியாவை ஆண்டு விட்டது.பின்பு வந்தாலும் காங்கிரசின் நிலைதான்.காஸ்மீர் நம்முடன் சேருவதற்கு மன்னர் கையெழுத்து போட்டு விட்டார்.மக்களிடம் கையெழுத்து வாங்குவது நம் கடமை.நாம் முன்னேற நிறைய தடைகளை எதிரிகள் உண்டுபண்ணுவார்கள்!இதுவும் அதில் ஒன்றுதான்.அணைத்து கட்சிகளும் சேர்ந்து இந்த பிரச்சினையை நாட்டுப்பற்றுடன் ஒற்றுமையாக மக்களின் நலனைக் கருதி நேர்மையாக கையாண்டால் காஸ்மீரையும்,காஷ்மீரிகளையும்,, மீட்டுக்கொள்ளலாம்.வேகமாக முன்னேறலாம்.வாழ்க இந்தியா!!!!!...
கார்த்திக் - கொச்சின்,இந்தியா
2010-09-19 12:40:54 IST
எல்லோரும் கருத்து சொல்லியாச்சு!!!!!!!! ஆம் அப்புறம் என்ன நம் வேலை முடிஞ்சுது, போய் கிரிக்கெட் இல்லனா டிவி நிகழ்ச்சி பாருங்க நம் வேலை முடிஞ்சுது.............இப்படி தான் மும்பை சம்பவம் நடந்த உடனே சும்மா ஒரு மாசம் கருத்து தெரிவித்தோம் அப்புறம் என்ன நாம் நாம் வேலைய பார்க்க போய்டோம் .இப்படி கருத்து சொன்னா நாம் மட்டும் தான் அறிவோம் ஆனால் அரசியல்வாதிகள் அறிவார்களா !!!!!! காஸ்மீர் எங்கோ பல ஆயிரம் கீ. மீ உள்ளது நமக்கென்ன !!!!!!!நம்பகுதியில் அன்னியர் கை ஓங்கினால் நமக்கு தெரியும்.உண்மையான தேசபக்தனா இருந்தால் நாமும் நம் கஷ்மிருக்கஹா இங்கு போராடலாமே !!!!!!!!! ஜெய் ஹிந்த் !!!!!...
2010-09-19 12:10:51 IST
நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து முட்டாள் காங்கிரஸ் தான் நம் நாட்டை 60 ஆண்டுகளாக ஆட்சி செய்கிறார்கள், இந்த காங்கிரஸ் பதில் பிஜேபி ஆட்சிக்கு வரவேண்டும் பிரச்சினை சீக்கிரம் முட்ட்ருபுள்ளி வைக்கப்படும். இந்தியாவில் 6 மாநிலங்களில் naxels ஸ்ட்ராங்காக கால் பதித்துள்ளார்கள், இந்த காங்கிரஸ் ஆட்சி ஒழியவேண்டும்,...
நிஸார் - துபாய்,இந்தியா
2010-09-19 12:01:02 IST
இந்திய அரசால் ஒரு மாநில பிரச்சனைகளை சுமார் அறுபது ஆண்டுகளாக கட்டுபடுத்த முடியவில்லை என்றால் , பேசாமல் அம்மாநிலத்தை தனியாக பிரித்து அவர்களிடமே கொடுத்துவிடலாம். ௦...
feroz - London,யுனைடெட் கிங்டம்
2010-09-19 11:38:56 IST
இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவினரான BSF இன் மீது காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க அரசு தயங்கக்கூடாது.காஷ்மீர் மக்கள் போராட்டம் செய்தால் அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்குகிறது, ஆனால் BSF இன் தவறை கண்டிக்கத் தவறுகிறது.இதுதான் காஷ்மீரில் பிரச்சினை....
A Ramesh - Singapore,சிங்கப்பூர்
2010-09-19 11:16:38 IST
ராணுவ ஆட்சி ஒன்று தான் முடிவு . சும்மா ராணுவம் அத பண்ணுது , இத பண்ணுதுன்னு கண்முடித்தனமா பேசக்கூடாது . அண்டை நாடுகளை பாருங்கள் , சீனாவில் கலவரத்தை எப்படி அடக்குகிறார்கள் . காங்கிரஸ் அரசு வோட்டுக்காக எதையும் செய்ய தயங்குகிறார்கள் காங்கிரஸ் இந்தியாவில் புற்று நோயை பரவ விற்றுக்கொண்டிருக்குது - Ramesh...
விஜய் - சென்னை,இந்தியா
2010-09-19 10:49:30 IST
இந்த பிரச்சனை தீரவேண்டுமானால் பாஜக ஆட்சி வர வேண்டும்.இந்த கையால் ஆகாத காங்கிரஸ் பேய்களால் நிச்சயம் நாட்டின் எந்த பிரச்சனைகளையும் தீர்க்க முடியாது.பாஜகா ஆட்சி ஒன்றே காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு....
Kanish - vellore,இந்தியா
2010-09-19 10:13:40 IST
என்றும் காஷ்மீர் இந்தியாவின் மணிமகுடம். நாம் அதனை எக்காரனதினை கொண்டும் எந்த அந்நிய சக்திக்கும் விட்டு கொடுக்க கூடாது. மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலை இட்டு காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். தலையில் வலியை வைத்து கொண்டு எவராலும் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது அதே போல் தான் நம் நாட்டின் தலை பகுதியான காஷ்மீரில் பிரச்னையை வைத்து கொண்டு நம்மால் எந்த ஒரு விழாவோ அல்லது வைபவமோ நடத்துவது வீணே. நம் பாரத மாதாவின் தலைவலியை போக்க தேவையான நடவடிக்கைகளை உடனே மத்திய அரசு எடுக்கவேண்டும். நம் பாரத மண்ணில் ஒரு பிடி கூட எந்த ஒரு அந்நிய சக்திக்கும் நாம் விட்டுகொடுக்க கூடாது. ஜெய்ஹிந்த்....
Anniyan - Chennai,இந்தியா
2010-09-19 10:11:41 IST
கல்லெறிவதும், அரசு அலுவலங்களில் தீ வைப்பதும், பிரிவினை வாதம் பேசுவதுமா?? இது போன்று முட்டாள் தனமான விருப்பத்திற்கு எல்லாம் ஒத்து ஊத முடியாது.....
முஹம்மத் கனி - மலேசியா,இந்தியா
2010-09-19 09:59:36 IST
காஸ்மிரிகள் யாருக்கும் தனி நாடாகவோ பாகிஸ்த்தான் உடன் செல்லவோ சிறிதும் எண்ணம் இல்லை (ஒருசில பிரிவினை வாத தலைவர்கள் அவர்களுடைய சிறு கூட்டம்)தவிர ஏனைய மக்களுக்கு அமைதியுடனும் இந்தியாவில் இருப்பதையே விரும்புகிறார்கள் (இன்றைய சூழ்நிலையில் பாகிஸ்தானிகளேபாகிஸ்தானை விரும்பவில்லை )எந்தபிரச்சினைகளையும் நடுநிலைமையோடும் மதக்கண்ணோட்டம் இல்லாமலும் அணுகவேண்டும் சுதத்திரம் அடைததிலிருந்துஇன்றுவரை காஸ்மீர் எந்த வகையிலும் முன்னேற்றம் பெற வில்லை வேலை வாய்ப்புகள் கல்வி வசதிகள் அடிப்படை கட்டமைப்புகள் அங்கு இல்லை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் சுற்றுலா துறை கூட மேம்படுத்தவில்லை மக்களுடைய எண்ணவோட்டத்தை புரிந்து கொல்லாத அரசுகளால் எந்த பயனும் இல்லைஅடக்குமுறையால் எதையும் சாதிக்க முடியாது மக்களுடன் திறந்த மனதுடன் நடத்தப்படும் பேச்சு வார்த்தையே இன்றைய சூழ்நிலையை மாற்றியமைக்கும் முதலில் ராணுவத்தை மக்கள் வாழும் பகுதிகளிருந்து விளக்கிகொள்ளவேண்டும் அமைதிக்கான முதல் படி இதுவே ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக