செவ்வாய், 21 செப்டம்பர், 2010

யாருக்கும் இங்கு இடம் இல்லை :கூட்டணி குறித்து க.அன்பழகன


நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் நிதிஅமைச்சர் க.அன்பழகன் பேசினார்.
அவர்,’அடிப்படையில் கலைஞர் தன்னை அடித்தட்டு மக்களோடு ஒருவர் என்று கருதியதால், ஏழைகளில் ஒருவர் என்று இணைத்த காரணத்தால் திராவிடத்துக்கு பாடுபடுவது நமது கடமை என்று சாதனைகளை நிறைவேற்றியுள்ளார்.>இந்தியாவில் நிலையான அரசு இருக்க வேண்டும். சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். சாதி சமயத்துக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். அப்படி ஒன்று இருக்க வேண்டுமானால் காங்கிரஸ் கட்சி மத்தியில் இருக்க வேண்டும் என்று விரும்பிய கலைஞர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்தார்.

அவர்களுக்கும் ஆட்சி அமைக்க நமது ஆதரவு தேவைப்பட்டது. தற்போது மறுபடியும் வெற்றி பெற்று மன்மோகன்சிங் பிரதமராக விளங்கி வருகிறார்.
இந்தியாவில் எத்தனையோ பிரச்சனைகளை அறிவோம். அதை தீர்க்க மத்தியில் நிலையான ஆட்சி வேண்டும். மத்தியில் கூட்டாட்சி, தமிழகத்தில் சுயாட்சி என்று அண்ணா கூறியதன் அடிப்படையில் இந்த கூட்டணி தொடருகிறது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த நன்மைக்காகத்தான்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்த அணிதான் வெற்றி பெறும். கலைஞர்தான் முதலமைச்சர் என்று நாடே சொல்கிறது. சிலர் கலைஞரை விமர்சிக்கிறார்கள். அவர்கள் யாரென்று தெரியவில்லை. சிலர் கூட்டணி குறித்து பேச இடம் இல்லை என்கிறார்கள். ஆனால், யாருக்கும் இங்கு இடம் இல்லை என்று நான் சொல்கிறேன்.
>அண்ணா உருவாக்கிய இயக்கம், கலைஞர் கட்டிக்காத்த இயக்கம். எந்த கட்சிக்கும் இப்படி விரும்பி வரும் கூட்டம் இல்லை. தேடி வரும் கூட்டம், லட்சியம் உள்ள கூட்டம் தி.மு.க.வுக்கு மட்டுமே இருக்க முடியும். நமது அணி வெற்றி பெற உள்ளது. வெற்றி பெறச் செய்ய வேண்டியது நமது கடமை என்பதை உணர்ந்து அனைவரும் பாடுபட வேண்டும்’’என்று பேசினார்

கருத்துகள் இல்லை: