சனி, 25 செப்டம்பர், 2010

42 நிவாரணக் கிராமங்கள் மூடப்பட்டன


வட பகுதியில் அமைக்க்பட்டிருந்த 47 நிவாரணக் கிராமங்களில் 42 நிவாரணக் கிராமங்கள் இதுவரையில் மூடப்பட்டுள்ளதாக வடக்கு மீள்குடியேற்றத்திற்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார். யுத்தம் உக்கிரமடைந்த கடந்த 2009ஆம் ஆண்டில் அரசாங்கம், 3 லட்சம் மக்களின் நன்மைக்கென இந்த நிவாரணக் கிராமங்களை அமைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் போது இடம்பெயர்ந்தவர்களில் 2 லட்சத்து 65 ஆயிரம் பேர் இதுவரை மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான சகல நிவாரணங்களும் வழங்கப்பட்டு வருவதாகவும் கமல் குணரட்ன கூறியுள்ளார். மேலும் இடம்பெய்ர்ந்து நிவாரணக் கிராமங்களில் வசிக்கும் எஞ்சியுள்ள மக்களை இந்த வருட இறுதிக்குள் மீள்குடியமர்த்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இன்னும் 27 ஆயிரம் அகதிகள் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாகவும், அவர்களில் 10 ஆயிரம் பேர் நிவாரண கிராமங்களில் வசித்து வருவதாகவும் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: