புதன், 22 செப்டம்பர், 2010

அயோத்தி சர்ச்சை தீர்ப்பு : தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்

நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் அயோத்தி விவகாரம் தொடர்பான தீர்ப்பை ஒத்தி வைக்க கோரி இன்று சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மதியம் 2 மணிக்கு விசாரித்தது . மனு தொடர்பாக தடை உத்தரவு பிறப்பிக்க கோர்ட் மறுத்து விட்டது. இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது என்றும், சம்பந்தப்பட்ட கோர்ட்டை அணுகவும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். இதனால் அயோத்தியில் 2 . 77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற நீண்ட கால வழக்கில் வெள்ளிக்கிழமை ( 24 ம் தேதி ) அலகாபாத் கோர்ட் தீர்ப்பளிக்கப்படுகிறது. தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இந்த தீர்ப்பு ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக கடந்த வாரம் மத்திய அமைச்சரவை கூடி விவாதித்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும், யாரும் யாரையும் புண்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ள கூடாது. வரும் தீர்ப்பு முடிவானதல்லை , இதில் ஏற்றுக்கொள்ள முடியாத எந்த ஒரு தரப்பினரும் இந்த விஷயத்தில் இறுதியான முடிவு என கருத வேண்டாம். அனைவரும் அமைதி காத்திட வேண்டும். என்று கூறப்பட்டிருந்தது.

அலகாபாத் ஐகோர்ட்டின் தற்போதைய லக்னோ பெஞ்ச், கடந்த ஜனவரி 11ம் தேதி விசாரணையைத் துவக்கியது. முஸ்லிம்கள் தரப்பிலான வாதம் பிப்ரவரி 25ம் தேதி முடிவுக்கு வந்தது. ராமர் கோவிலுக்கு ஆதரவானவர்களின் வாதம் ஜூலை 7ம் தேதி முடிவுக்கு வந்தது.பிப்ரவரி மாதத்திற்குப் பின், அன்றாட அடிப்படையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. ஜூலை இறுதி வாரத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், வரும் 24ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதிபதிகள் எஸ்.யு.கான், சுதிர் அகர்வால், சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பை வழங்குகிறது.

அயோத்தி தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என கோரி கடந்த 17 ம் தேதி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தீர்ப்பு வெளியாகும் நாளில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் , காமன்வெல்த் போட்டி நடக்கும் இந்நேரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியிருந்தார்.

ரமேஷ் திரிபாதி என்பவர் தாக்கல் செய்த மனுவை ஏற்க கோர்ட் மறுத்து விட்டது. மேலும் மனுவை தாக்கல் செய்த திரிபாதிக்கு அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் ரமேஷ்திரிபாதி இன்று சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனுவாக தடை கோரி அப்பீல் செய்தார். இந்த மனுவை நாங்கள் விசாரித்து தடை விதிக்க முடியாது. சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தாக்கல் செய்யவும் என்று நீதிபதி கூறி விட்டார் . இதனால் வரும் வெள்ளிக்கிழமை (24 ம் தேதி ) தீர்ப்பு வெளிவருகிறது.
தீர்ப்பு - பாங்காக்,தாய்லாந்து
2010-09-22 17:08:33 IST
இந்த நிலத்தை அரசே கையக படுத்த வேண்டும். அப்பொழுது தான் இரு தரப்பினரும் மனதார ஏற்று கொள்ள முடியும்....
அப்துல் ரெஜாக் - dubai,இந்தியா
2010-09-22 17:07:31 IST
இந்த வழக்கில் பாரபட்சம் இன்றி நீதி கிடைக்க வேண்டும், கிடைக்கும் என்று நினைகிறோம்.இந்த தீர்ப்புக்கு பிரஹாவது இந்தியா அமைதிபூங்கா என்று பெயர் நிலைக்கட்டும்.இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் வாழ பிராத்திக்கிறேன் தோப்பு,அப்துல் ரெஜாக்....
ஆறுமுகம் - madurai,இந்தியா
2010-09-22 17:06:03 IST
தீர்ப்பை தள்ளி போடுவதால் எந்த பயனும் இல்லை. தள்ளி போடச் சொல்லி கேட்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை .தீர்ர்ப்புக்கு பிறகு வன்முறை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்....
bashir - london,இந்தியா
2010-09-22 17:03:32 IST
judgement should be acceptable of both side all playing with people; all politicians aims are coming election....
gentlin - pollachi,இந்தியா
2010-09-22 16:29:12 IST
coming 24 th every Indian should obey the words of high court......
2010-09-22 16:27:46 IST
தீர்ப்பு எப்படி இருந்தாலும் இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். யார் எந்த தீர்ப்பை ஏற்க மறுக்கிறார்களோ அவர்கள் தேச விரோதிகள். ....
jamalmeeran - ஜெட்டாஹ்,சவுதி அரேபியா
2010-09-22 16:18:29 IST
அனைவரும் நீதியை மதிப்போம். அனைவரும் தீர்ப்பை ஏற்றுகொள்வோம் வாழ்க இந்தியன்.ஆனால் பச்சோந்தி காங்கிரஸ் யை மட்டும் நம்ப மாட்டோம்...
ஒம் - வேளச்சேரி,இந்தியா
2010-09-22 16:07:25 IST
உண்மையான பக்திக்கும் விசிவாசத்திற்கும் நிச்சயம் வெற்றி உண்டு...
mohi - coimbatore,இந்தியா
2010-09-22 15:45:55 IST
i am Expected what no violance...
சங்கர் S - ஹவல்லி,குவைத்
2010-09-22 15:44:17 IST
சுப்ரீம் கோர்ட்டின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன். நீதி இன்னும் சாகவில்லை....
PUBLIC - Dubai,இந்தியா
2010-09-22 15:25:06 IST
So the result is ready to come after a long time..If this guy is saying to postpone means problem will come within the period of result. Built a public hosp,school,college or atleast cinema theatre where all can gather in a happy way....India is my country and am proud of it...vantea mataram.....
வி.கே.லோகநாதன் - REDHILLS,இந்தியா
2010-09-22 15:02:07 IST
தீர்ப்பை தள்ளிபோடுவதால் எந்த பயனும் இல்லை.கோர்ட் தீர்ப்பு என்பது இரு தரப்பினரும் மனதார ஏற்ற்றுக்கொள்ள வேண்டும்.இதில் இனிமேல் வேதனைபட ஒன்றும்மில்லை.தீர்ப்புக்கு பிறகாவது சகோதர பாசத்துடன் வாழ்வோமாக....
ஜகன் - சென்னை,இந்தியா
2010-09-22 14:30:25 IST
தீர்ப்பை ஒத்தி போடுவதால் என்னையா பலன்.இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எதுவுமே ஆகபோரதில்லை....
ஸ்ரீனி - bangalore,இந்தியா
2010-09-22 14:25:31 IST
ஏன் அரசே இந்த இடத்தை கையக படுத்தி கொள்ள கூடாது...
அனந்த நாராயணன் - சென்னை,இந்தியா
2010-09-22 14:17:05 IST
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்...
நல்லவன் - சென்னை,இந்தியா
2010-09-22 14:13:20 IST
கண்டிப்பாக தேவை ரிசல்ட்...
Ramanathan - Bangalore,இந்தியா
2010-09-22 13:46:13 IST
no need to postpone the judgement. It is the resposibility of the government and police to have a controll over the law and order. Common wealth game is not much important. Already lots of cases are pending in India. So, Court can give judgement on 24th of september. No need to postpone the judgement....
அபு பஹீம் - ரியாத்,சவுதி அரேபியா
2010-09-22 13:35:08 IST
குறிப்பிட்டபடி தீர்ப்பை வெளியிடவேண்டியது தானே? மீறி கலவரம் செய்பவர்களை அரசு இரும்புக்கரம்கொண்டு அடக்க வேண்டியது தானே? ரியாதிலிருந்து அபு பஹீம்...
shahul - chennai,இந்தியா
2010-09-22 13:22:21 IST
இதெல்லாம் edhirparthathudhan...
thajudheen - trichy,இந்தியா
2010-09-22 12:27:20 IST
நீதிக்கு தலை வணகவேண்டும் இரு தரப்பும். இல்லாவிட்டால் எதிர் காலத்தில் தீர்ப்பு கேலி குள்ளதாஹி மற்ற நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கும் முடிவில்லாமல் போய்விடும்....

கருத்துகள் இல்லை: