பேருந்து எரிப்பு: பதற்றம் நீடிப்பு
திமுகவின் முப்பெரும்விழா நாளை நாகர்கோவிலில் துவங்குகிறது. விழாவில் முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் அன்பழகன் ,சுரேஷ்ராஜன், மற்றும் மத்திய அமைச்சர்கள் அழகிரி , எம்.எல்.,ஏ.,ராஜன் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிட வந்த துணை முதல்வர் ஸ்டாலின் குமரியில் தங்கியுள்ளார்.அவரை வரவேற்பதற்காக குமரி முழுவதும் திமுக கொடிகள், கட்-அவுட்கள் மற்றும் தட்டி விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று தக்களை பகுதியில் இந்து அமைப்பின் சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் ரகளை ஏற்பட்டது. அப்போது சாலையில் வைக்கப்பட்டிருந்த திமுக கொடிகள் கிழித்து எரியபட்டன. கட்-அவுட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
சுரேஷ்ராஜன் சம்பவ இடத்திற்கு வந்து சேரும்போது அமைதியாக இருந்தது. மாநாட்டு வேலைகள் இருப்பதால் மாநாடு முடிந்ததும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கலாம் என்று விட்டுவிட்டார்.
பின்னர் கருங்கல் அருகில் உள்ள மிடாலம் பகுதியில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் பொழுது மீனவர்களுக்கும் இந்து அமைப்பினருக்கும் வாக்குவாதம் வந்து பின்னர் அது கைகளப்பில் முடிந்தது.
இந்த கலவரத்தில் வீடுகள், பஸ், செல்போன் டவர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பின்னர் போலீசார் குவிக்கப்பட்டு கலவரத்தை கட்டுப்படுத்தினர்.
ஆனாலும் குமரியில் இன்னும் பதட்டம் நீடிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக