செவ்வாய், 21 செப்டம்பர், 2010

குஷ்பு:கலைஞர் ஏன் சிரிக்கிறார்; ஜெயலலிதா ஏன் சிரிக்காமல் இருந்தார்:

திமுக முப்பெரும் விழா இன்று  மாலை 6 மணிக்கு நாகர்கோவில் பொருட்காட்சி திடலில் தொடங்கியது. இந்த விழாவில் திமுக தலைவர், முதலமைச்சர் கருணாநிதி தலைமையேற்றார்.
மத்திய, மாநில அமைச்சர்கள்,எம்.பிக்கள், சட்டமன்ற உருப்பினர்கள் இவ்விழாவில்பங்கேற்றனர்.
திமுகவின் உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு இவ்விழாவில் பேசினார்.
அவர்,  ‘’திமுகவின் முப்பெரும் விழா.  இது திமுகவினருக்கு தீபாவளி;பொங்கல் விழா. 
நாகர்கோயில்...இந்த மண்ணுக்கும் எனக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு உண்டு. 20 வருடங்களுக்கு முன்பு வடமாநிலத்தில் இருந்து வருசம்-16 படத்தில் நடித்த படம் இந்த மண்ணில் பெரிய அளிவில் வரவேற்பை பெற்றது. 

அதனால்தான் நான்
தமிழ்நாட்டின் மருமகள் ஆகி, திமுகவின் உறுப்பினர் ஆகி இன்று அதே மண்ணில் நின்று பேசிக்கொண்டிருக்கிறேன்.
இங்கே கூடியிருக்கும் தொண்டர்களைப்பார்த்து நம் தலைவர் கலைஞர் மகிழ்ச்சி கொள்கிறார்.   அந்த மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.
ஆனால் எதிர்க்கட்சி தலைவர்,  சமீபத்தில் திருச்சியில் மாநாடு நடத்தினார்.  அந்த மாநாட்டில் அவர் சிரிக்கவேயில்லை. காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தேன்.வடஇந்தியாவில் ஒரு தலைவர் கட்சி கூட்டம் நடத்தினார்.  தொண்டர்கள் அவருக்கு 60 மாலைகள் போட்டார்கள்.  அப்போது அந்த தலைவர் கடு கடுவென்று இருந்தார்.  ஒருவர் அவரிடம், என்ன தலைவரே..60 மாலைகள் போட்டிருக்கிறோம்.

அப்படியிருந்தும் இப்படிகோபமாக இருக்கிறீர்களே என்று கேட்டாராம்.  அதற்கு அந்த தலைவர்,  அடப்போய்யா, நேற்று 90
மாலைகளுக்கு காசு வாங்கினார்கள்;இன்று 60 மாலைகள் தான் போட்டிருக்கிறார்கள் என்று கோபத்துக்கான காரணம் சொன்னாராம்.

அப்போதுதான் புரிந்தது.  காசு வாங்கிட்டு சரியா கூட்டத்தை கூட்டலேன்னா கோபம் வராதா என்ன? ஆனால் இங்கே
கூடியிருக்கும் கூட்டம் காசுக்காக கூடிய கூட்டமல்ல. கொள்கைக்காக கூடிய கூட்டம்.
இது பிரியாணிக்காக கூடிய கூட்டம் கிடையாது; தலைவரின் அன்புக்காக கூடிய கூட்டம்.
தலைவர் எப்போதும் அடுத்த தேர்தல் பற்றி சிந்திப்பதில்லை.   அடுத்த தலைமுறை பற்றியே சிந்திக்கிறார்.
இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் பல்வேறு கலவரங்களால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.  தமிழகம் மட்டும்தான் சொர்க்க
பூமியாக இருக்கிறது.  அதற்கு காரணம் நம் தலைவர் ஆட்சிதான்.

திருச்சி கூட்டம் முடிந்து தலைவர் பிளைட்டில் வந்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி வரவிலை. வழியெங்கும் தொண்டர்களை
பார்த்து வர காரில் வந்தார்.   ஆனால் எதிர்கட்சி தலைவரோ தொண்டர்களை பற்றியெல்லாம் கவலைபடுவதில்லை.  பிளைட்டிலேயே வந்து பிளைட்டிலேயே சென்றுவிட்டார்.
எதிர்க்கட்சியின் தலைவர்  கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.   தொண்டர்கள் ஆரவாரமாக வரவேற்றனர். நான் கேட்கிறேன்....ஒரு
கட்சியின் தலைவர் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருவதற்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம்.  

அந்த சமயத்தில் ஒரு பெண்மணி அந்த தலைவரிடம் வந்து, நான் ஒவ்வொரு கூட்டத்திலும் கோஷம் போடுவேன் என்று
சொல்கிறார்.  ஒரு கட்சி தொண்டர் இப்படி சொல்லும்போது கட்சியின் தலைமை என்ன செய்யவேண்டும்.  அப்படியா,  நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்;என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று விசாரிக்க வேண்டும்.
அது தலைமைக்கு அழகு.  ஆனால்
அவர் என்ன செய்தார்?  நான் இதுவரை உங்களை கோஷம் போட்டு பார்க்கவில்லையே என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

தொண்டர்கள் கோஷம் போடுவதை அவர் ரசிக்கிறார்;மகிழ்கிறார்.   அவர் தொண்டர்களை சர்க்கஸ்காரர்களை போல்
நடத்துவதால்தான் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவர்கள் நமது கட்சியில் வந்து இணைகிறார்கள்.
கூட்டணி..கூட்டணி.. என்கிறார்கள்..எங்கள் தளபதி, அஞ்சாநெஞ்சன் இருக்கும் வரை அந்த கூட்டணி எல்லாம் தூள்
தூளாகிவிடும்.
எதிர்க்கட்சி தலைவர் நம் தலைவரை தீய சக்தி என்று சொல்கிறார்.  நம் தலைவர் தீய சக்தி அல்ல; தூய சக்தி-ஊக்க சக்தி,
ஆக்க சக்தி’’ என்று பேசினார்.

கருத்துகள் இல்லை: