சனி, 29 அக்டோபர், 2022

1518 ஆம் ஆண்டில் கீழக்கரையும் காயலும் பின்னே கோரமண்டலமும்! .. முத்துக்குமார் சங்கரன்

No photo description available.

Muthukumar Sankaran Tuticorin  :  கீழக்கரையும் காயலும் பின்னே கோரமண்டலமும்
1518 ஆம் ஆண்டில் நம் பகுதி மக்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்று தெரிந்து கொள்ளலாமா?
The Book of Duarte Barbosa Volume II
An account of the countries bordering on the Indian Ocean and there inhabitants written by draughtly Barbosa and completed about the year 1518 A.D.
என்கிற இந்த நூல் 1812 இல் போர்ச்சுகீசிய மொழியில் வெளியிடப்பட்டது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 1921 இல் வெளியிடப்பட்டது. கல்கத்தா இம்பீரியல் நூலகத்தில் இருந்த இந்த நூல்  சிறிது சேதம் அடைந்த பிறகு டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளது . Indianculture வலைத்தளத்தில் பொதுப் பார்வையில் இருக்கிறது.
மூல நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர் பெயர்களையே நானும் குறிப்பிட்டுள்ளேன் புரிந்து கொள்ள வசதியாக அந்த ஊர்களை பற்றி மட்டும் அடைப்புக்குறிக்குள் தெரிவித்திருக்கிறேன். மற்றபடி அனைத்து வாசகங்களையும் அப்படியே நேரடியாக மொழிபெயர்த்து இருக்கிறேன்

சிலோன் தீவை விட்டுப்  புறப்பட்டு நிலப்பரப்பை நோக்கி வரும் பொழுது குமரிமுனை கடந்தால்  கீழக்கரை  Quilcare என்ற பெயரில் கொல்லம் Coulam  அரசருக்கு சொந்தமான ஒரு நிலப்பகுதி இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பினார்

zeenews.india.com  -  க. விக்ரம்  : தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு முதுகு வலி ஏற்பட்டது. இதையடுத்து பரிசோதனைக்காக அவர் சென்னை போரூரில் இருக்கும் ராமசந்திரா மருத்துவமனைக்கு நேற்றிரவு சென்றார். அங்கு அவரது உடல்நிலையை சிறப்பு மருத்துவர்கள் குழுவினர் பரிசோதனை செய்தனர்.
அந்த பரிசோதனையில் முதலமைச்சருக்கு ஏற்பட்டிருப்பது சாதாரண முதுகு வலி என்பது உறுதியானது. தொடர்ந்து பரிசோதனை முடிந்த சூழலில் நேற்றிரவே வீடு திரும்பிவிட்டார். இதுதொடர்பாக ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதுகு வலிக்காக இந்த பரிசோதனை நடந்தது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலிண்டரை வைத்து கோவையை சின்னாபின்னமாக்க முபின் பிளான்.. வீட்டிலிருந்த 109 பொருட்கள்: என்ஐஏ எப்ஐஆர்

tamil.oneindia.com  -  Jeyalakshmi C  :  கோவை: கார் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவரின் வீட்டிலிருந்து 109பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொட்டாசியம் நைட்ரேட்,ஆக்ஸிஜன் சிலிண்டர், சல்ஃபர் பவுடர் உள்ளிட்ட வெடி குண்டு தயாரிக்க பயன்படும் பொருட்களுடன் ஜிகாத் வரிகள்கொண்ட நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் கார் ஒன்று வெடித்து சிதறியது. அந்தக் காரை ஒட்டி வந்தஜமேஷா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்த வழக்கை உக்கடம் காவல்நிலைய காவல்துறையினர் விசாரித்தனர்.

தெலுங்கானா TRS கட்சி எம்.எல்.ஏ.க்களை பணம் கொடுத்து பா.ஜ.க.வுக்கு இழுக்க முயன்றதாக குற்றச்சாட்டு

தினத்தந்தி  :   தெலுங்கானாவில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களை பணம் கொடுத்து பா.ஜ.க.வுக்கு இழுக்க முயன்றதாக குற்றச்சாட்டு
ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வுக்கு இழுக்க ரூ.100 கோடி பேரம் பேசிய வழக்கில், கைதான 3 பேரையும் காவலில் வைக்க மறுத்து கோர்ட்டு விடுவித்தது.
முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிற தெலுங்கானாவில், ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது.
இந்த நிலையில் அங்கு பா.ஜ.க. தனது வலிமையை பெருக்கும் நோக்கத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேருக்கு ரூ.100 கோடி தருவதாகக்கூறி, தங்கள் பக்கம் இழுக்க முயன்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேரம் பேசப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பலராஜு, ஹர்ஷவர்த்தன் ரெட்டி, காந்தாராவ், ரோகித் ரெட்டி ஆவார்கள்.

வெள்ளி, 28 அக்டோபர், 2022

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறைகூவல் : கடந்த காலங்களை போல இப்போதுள்ள சந்தர்ப்பத்தை நழுவ விடவேண்டாம்!

பாராளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா | தினகரன்

 hirunews.lk  :   13 ஐ அமுல்படுத்த தமிழ் தரப்புக்கள் ஒன்றிணைய வேண்டும்!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடை முறைப்படுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில் தமிழ் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்மூலம் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவுப்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் அனைத்து தரப்புக்களையும் ஒன்றிணைத்து செயற்படுத்துவதற்கான ஆர்வத்தை வெளியிட்டு வருகின்றனர்.
எனவே இந்த அரசியல் சூழலை தமிழ் தரப்புக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சத்யா கொலை வழக்கில் திடீர் திருப்பம்! சதீஷ் வாக்குமூலம் | Student Sathya Murder Case

tamil.oneindia.com -  Hemavandhana  :  சென்னை: சத்யாவை திட்டமிட்டே ரயில்முன் தள்ளி கொலை செய்ததாக சிபிசிஐடி விசாரணையில் சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
பரங்கிமலை சத்யாவின் கொலையும், அவரது தந்தையின் அதிர்ச்சி மரணமும் தமிழக மக்களை உலுக்கி எடுத்துவிட்டது.. சில நாட்களுக்கு முன்பு, ஒருதலைக்காதலால், ரயில்வே ஸ்டேஷனிலேயே சத்யாவுக்கும் - சதீஷூக்கும் மோதல் வெடிக்க, மின்சார ரயில் வரும்போது, எட்டி உதைத்தார் சதீஷ்..
இதில் சத்யாவின் உடல் ரயிலில் மோதி துண்டு துண்டாக சிதறி விழுந்தது. தப்பி சென்ற சதீஷை போலீசார் கைது செய்தனர்.. இதனிடையே, சத்யாவின் அப்பா மாணிக்கமும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், பிணவறையில் 2 உடல்களும் அருகருகே வைக்கப்பட்டு இருந்ததை கண்டு, உறவினர்கள் கதறியது காண்போரை நிலைகுலைய வைத்தது.

ராசா மீது கோபம்? ஸ்டாலின் கொடுத்த பதில்! டிஜிட்டல் திண்ணை:

minnambalam.com -  Aara : அலுவலகத்துக்குள் நுழைந்ததும் வைஃபை தானாகவே கனெக்ட் ஆனது. வாட்ஸ் அப்பில், திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்ட அறிவிப்பு வந்தது. அதைப் படித்துவிட்டு ஃபேஸ்புக் தனது ஸ்டேட்டசை பதிவிடத் தொடங்கியது.
 “அண்மையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழக அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கம் பொதுக் கூட்டங்கள் திமுக தலைமைக் கழகம் சார்பாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.ொதுவாகவே திமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் தலைமை கழகத்தின் வாயிலாக இதுபோன்று மாநில அளவில் அறிவிக்கப்படும் பொதுக்கூட்டங்கள், போராட்டங்களுக்கு தனி முக்கியத்துவம் உண்டு.

அதிலும் கட்சியின் தலைவரான ஸ்டாலின் தமிழகத்தில் எந்த மாவட்டத்தை, தான் பேச தேர்வு செய்கிறார்  என்பதற்கு கூடுதல் முக்கியத்துவமும் உண்டு.

கோவை குண்டு வெடிப்பு - சிலிண்டரை வெடிக்க வைப்பதற்கு ஆக்சிஜனை முபின் பயன்படுத்தினாரா

மாலைமலர் : சிலிண்டரை வெடிக்க வைப்பதற்கு ஆக்சிஜனை முபின் பயன்படுத்தினாரா?- தடயவியல் ஆய்வில் விடை கிடைக்கும்
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று மீண்டும் கோவை சென்று விசாரணை நடத்தினார்.
கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளை சந்தித்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு தேவையான நட வடிக்கைகளை முடுக்கி விட்டார்.
கார் வெடித்து சிதறியபோது அதில் பயணம் செய்த முபினும் கருகி உயிரிழந்து விட்டார். காரில் எடுத்துச் செல்லப்பட்ட சிலிண்டர் வெடித்ததாகவே முதலில் கூறப்பட்டது. ஆனால் சம்பவ இடத்தில் தடயவியல் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் வெடி பொருட்களும் சிக்கின. இதனால் வெடி மருந்துடன் சேர்ந்து சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

கர்நாடகா - தற்கொலை செய்துகொண்ட மடாதிபதியின் ஆபாச படம் வெளியாகி உள்ளது

தினத்தந்தி  :  கர்நாடகாவின் ராமநகர் அருகே, தற்கொலை செய்து கொண்ட கர்நாடக மடாதிபதியின் ஆபாச படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவின் ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா குதூர் அருகே உள்ள பண்டே மடத்தின் மடாதிபதியாக பணியாற்றி வந்தவர் பசவலிங்க சுவாமி.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மடத்தில் உள்ள தனது அறையில் மடாதிபதி பசவலிங்க சுவாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் மடாதிபதி அறையில் இருந்து 3 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
அந்த கடிதத்தில் சிலர் தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும், சிலர் தன்னை மிரட்டி வருவதாகவும், மடத்தை கைப்பற்ற சிலர் முயற்சி செய்வதாகவும் கூறி இருந்தார்.

குஷ்புவிடம் கனிமொழி கேட்ட மன்னிப்பு - நடந்தது என்ன? - BBC News

Kanimozhi (கனிமொழி) - @KanimozhiDMK
I apologise as a woman and human being for what was said.This can never be tolerated irrespective of whoever did it,of the space it was said or party they adhere to.And I’m able to openly apologise for this because my leader @mkstalin
 and my party @arivalayam
 
KhushbuSundar  @khushsundar
When men abuse women,it just shows wat kind of upbringing they have had & the toxic environment they were brought up in.These men insult the womb of a woman.Such men call themselves followers of #Kalaignar
Is this new Dravidian model under H'ble CM @mkstalin rule?

BBC tamil :  பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திரைப்பட நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம் , கௌதமி ஆகியோர் குறித்து திமுகவைச் சேர்ந்த சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குறிப்பிட்டு, நடிகை குஷ்பு வெளியிட்ட ட்வீட்டுக்கு, ட்விட்டரிலேயே மன்னிப்பு கேட்டுள்ளார் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி. என்ன நடந்தது இந்த விவகாரத்தில்?

வியாழன், 27 அக்டோபர், 2022

1798 இல் இளம் மனைவியை கணவனின் உடலோடு சேர்த்து தீயிட்டு கொழுத்திய காட்சி ஒரு ஐரோப்பியரின் நேரடி பதிவு

 1798 இல் தஞ்சாவூருக்கு வந்திருந்த திரு டொனால்டு கம்பெல் என்ற ஐரோப்பியர் அங்குள்ள ஊர் மக்கள் ஒரு இளம் பெண்ணை அவளது கணவனின் உடலோடு சேர்த்து கட்டி தீயிட்டு கொழுத்திய (சதிமாதா) காட்சியை நேரில் கண்டார். அது பற்றி அவர் எழுதிய டயரி குறிப்பு
Muthukumar Sankaran Tuticorin  :  Donald Campbell என்கிற ஐரோப்பியன் இந்தியாவைக் காணும் திட்டத்தில் கப்பல் ஏறி பாதி வழியில் கப்பல் உடைந்து ஒரு வழியாக இந்தியக் கரையேறி கைது செய்யப்படுகிறான்.  சிறையில் அடைக்கப்பட்டு தம் நண்பர்களின் உதவியுடன் விடுதலையாகி பின் இந்தியாவைச் சுற்றி வந்து தன் அனுபவங்கள் பற்றி கேம்ப்பெல்  எழுதிய கடிதங்களின் தொகுப்பை வாசித்தேன்.
இந்த நூல் Indian culture என்கிற பொது வலைதளத்தில் வேறு தகவல் தேடிய போது கண்ணில் பட்டது.
இதில் அவர் திருவிதாங்கூரில் இருந்து பாளையங்கோட்டை, மதுரை திருச்சி தஞ்சாவூர் நாகப்பட்டினம் வழியாக சென்னை சென்று திரும்பிய அனுபவங்களை குறிப்பிட்டிருக்கிறார். அதில் தஞ்சையில் அவர் பார்த்ததை குறிப்பிட்டு இருப்பது மிக முக்கியமான பதிவாகும். இது 1798ல் எழுதப்பட்டது. அப்போது இந்தியர்களை ஐரோப்பியர்கள் Hindu என்ற அடையாளப்படுத்தவில்லை Gentoo என்றே அடையாளப்படுத்தினார்கள்.

1998 கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள பாட்சா மகன் கார் வெடித்த சம்பவத்தில் கைது

தந்தி டிவி  :  கோவை  கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில், அல் உம்மா தீவிரவாத இயக்க தலைவர் பாட்ஷாவின் உறவினர் கைதாகி உள்ளார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் கைதாகியுள்ள 5 பேரில் ஒருவர் முகமது தல்கா.
இவரது தந்தை நவாப் கான், தடை செய்யப்பட்ட அல்-உம்மா அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்தவர். தற்போது கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்,
கோவை குண்டு வழக்கில் தொடர்புடைய அல் - உம்மா இயக்க தலைவர் பாட்ஷாவின் சகோதரர்.
இந்த நிலையில், தற்போது கைதான முகமது தல்காவின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சம்பவம்- தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

மாலைமலர் : கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, உளவு துறை கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன், தேவாசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் விரிவாக விவாதிக்கப்பட்டது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கினார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க : என்னைக் கொலை செய்ய முயற்சித்தவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சியானது

file video ;வீரகேசரி - மனோசித்ரா   : என்னைக் கொலை செய்ய முற்பட்டவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களை சிறையிலடைத்து வைத்திருப்பதால் எனது கண் மீளக் கிடைக்கப் போவதில்லை.
அவர்களுக்கு தண்டனை வழங்கி 8 ஆண்டுகள் கடந்த போதே , அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே தனது விருப்பமாகக் காணப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
அண்மையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
என்னைக் கொலை செய்ய முற்பட்ட சந்தேகநபருக்கு கொழும்பு – கொட்டாஞ்சேனை ஆலய பூசகர் ஒருவரும் அவரது மனைவியும் உதவியதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக மீனவர்களை கைகளை பின்னால் கட்டி கம்பியால் தாக்கியது இந்திய கடற்படை .. இந்தியில் பேசுமாறு அடி உதை

 *இந்தி தெரியாததால் தமிழக மீனவர்கள் மீது*
*இந்தியக் கடற்படை தாக்குதல்!*
*வைகோ கடும் கண்டனம்*
மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மற்றும் தரங்கம்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர், காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு ஆகிய பகுதிகளிலிருந்து சுதீர் (30), செல்வகுமார் (42), செல்லதுரை (46),  சுரேஷ் (41), விக்னேஸ்வரன் (24), மகேந்திரன் (31), பாரத் (24), பிரசாந்த் (24), மோகன்ராஜ் (32), வீரவேல் ஆகிய 10 பேர் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் அனைவரும் கடந்த அக்டோபர் 21 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று இரவு 3 மணிக்கு ஜெகதாம்பட்டினத்திற்கு கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, இந்திய கடற்படையின் ரோந்து கப்பல், மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகைச் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியிருக்கிறது.
பின்னர் மீனவர்களின் படகிற்குள் சென்று சோதனையிட்ட பிறகு, நீங்கள் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளீர்களா ? போதைப் பொருட்கள் ஏதும் கடத்துகிறீர்களா ? என கேட்டுள்ளனர். என்ன நடக்கிறது என புரியாமல் மீனவர்கள் தவித்துள்ளனர்.

பார்வதி, லஷ்மி மற்றும் சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவிகள் கிரேக்க இறக்குமதி தேவதைகள்தான்

Greek Orthodox Icons :: Hand painted icons of the Saints :: The Three  Archangels

Dr Shalini :  முப்பெரும் தேவியரான பார்வதி, லஷ்மி மற்றும் சரஸ்வதி ஆகிய மூவருமே கிரேக்க இறக்குமதி என்றால் உங்களுக்கு ஆட்சரியமாக இருக்கும். ஆனால் அது தான் உண்மை.
கிரேக்க புராணத்தில் ஹீரா என்பவள் மலைமகள். அஃரதைத்தி கடலில் இருந்து சாகாவரம் கொண்டு வந்த அலைமகள். எதெனா கல்விக்கான கலைமகள்.
இந்த மூன்று கடவுளர் உருவான கதை, தோற்றம், ஐகனோகிராபிஃக் குறியீடுகள் எல்லாம் அச்சு அசல் அப்படியே காப்பி அடித்து, இவர்கள் இந்திய கடவுளர் ஆனார்கள். பிறகு ஹிந்து பாந்தியனிலும் இவர்கள் இடம் பெற்றார்கள்.

ராஜபக்‌ஷர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

.tamilmirror.lk : முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்து, நாட்டை விட்டு ஓடிப் போய், தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமாச் செய்து, மூன்றரை மாதங்களாகப் போகின்றது.
கோட்டாவுக்கு முதலே மஹிந்த, பசில், சமல், நாமல், சசீந்திர என மற்றைய ராஜபக்‌ஷர்களும் தமது பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தனர்.
கோட்டா நாட்டை விட்டு ஓடியதிலிருந்தே, பொதுவௌியில் பெருமளவுக்கு அமைதிகாத்த ராஜபக்‌ஷர்கள் தற்போது, கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் கூட்டங்களை நடத்தி, தமது இருப்பைத் தக்க வைப்பதற்கான அடுத்தகட்ட காய்நகர்த்தலுக்காக களநிலைவரத்தை பரிசீலித்து வருகிறார்கள். இந்தக் கூட்டங்களுக்கு, அவர்கள் வைத்துள்ள பெயர் ‘எக்வ நகிட்டிமு’ (ஒன்றாக எழுவோம்) என்பதாகும்.

இப்போது தான் நான் நிம்மதியாக உணர்கிறேன்” - மல்லிகார்ஜுன கார்கே பற்றி சோனியா காந்தி

minnambalam.com - monisha  :  மல்லிகார்ஜுன கார்கேவிடம் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஒப்படைத்த பிறகு தான் நிம்மதியாக இருக்கிறது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவருக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற்றது.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற்று மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவராக வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இன்று (அக்டோபர் 26) டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பதவியேற்றார்.
நிம்மதியாக உணர்கிறேன்!

தெற்காசியாவின் கல்வி தந்தை மெக்காலே பிரபு பிறந்த நாள் 25 -oct 1800 - 28 dec 1859

தாமஸ் பாபிங்டன் மெக்காலே : ஒரு நல்ல ஐரோப்பிய நூலகத்தின் ஒரு ஷெல்ப் ஒட்டுமொத்த இந்தியா மற்றும் அரேபியாவின் முழு பாரம்பரிய நூல்களுக்கு இணையானது


Shali Mary   இன்று லார்ட் மெக்கலே அவர்களின் பிறந்த நாள்.
அவரை நமக்கு ஒரு வில்லனாகத்தான் அறிமுகப்படுத்தினார்கள்.
“இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறையை சிதைத்து, வெள்ளைக்காரனுக்கு பியூன் வேலைப்பார்க்க ஆங்கிலத்தை கற்பித்த கயவன்” என்று தான் எனக்கும் அவர் அறிமுகம்.
அப்புறம் நானே யோசித்தேன்.
என் பாட்டியும் கொள்ளுப்பாட்டியும் எப்படி படித்த பெண்களாக முடிந்தது? அதுவும் பெண்கள் படிக்கவே கூடாது, குருக்குலக்கல்வி என்பது பிராமண மாணவர்களுக்கு மட்டும் தான் என்றிருந்த அந்தக் காலத்தில் இந்த பெண்கள் எப்படி கல்வி பெற்றார்கள்?
என் குடும்பம் என்கிற குட்டி வட்டத்தை விட்டு வெளி உலகையும் நான் கவனிக்கிறேன்....
மோதிலால் நேரு எங்கு படித்தார்?
வங்காளிகள் ஏன் இவ்வளவு அதிக நோபல் பரிசு வாங்குகிறார்கள்?
இந்தியாவின் முதல் செக்யூலர் பள்ளி/ கல்லூரிகளை யார் துவக்கினார்கள்....?

சிறுமி கூட்டு பாலியல் கொடுமை... புதுக்கோட்டை ..." - விஷம் குடித்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை

  நக்கீரன் : புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு, 17 வயது சிறுமியை அவரது உறவுக்கார இளைஞர்கள் 3 பேர் கூட்டுப் பாலியல் தொல்லை கொடுத்ததால் சிறுமி விஷம் குடித்து சிகிச்சை பெற்று வருகிறார்.
பாலியல் தொல்லையில் ஈடுபட்ட 3 இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரில்,
 செவ்வாய்க் கிழமை இரவு 17 வயது சிறுமியான எனது மகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த தங்கப்பன் மகன் ராஜா (22), மற்றும் கணேசன் மகன் சின்ராஜ் (21), சின்னையா மகன் பிரசாத் (19) ஆகிய 3 பேரும் தூக்கிச் சென்று மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
தொடர்ந்து தாக்கியதில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச் சென்று பார்த்தபோது 3 பேரும் ஓடிவிட்டனர்.

சத்தியாவை ரயிலில் தள்ளி கொன்ற சதீஷ் திருமா கட்சிக்காரனா?

நிலவினியன் மாணிக்கம்  :  இதுல திருமாவளவன் சொன்ன சரக்கும், மிடுக்கும் வேலை செய்யல போல..
சதீஷ் செய்த சத்யா கொலை  பற்றி ஏன் இணைய சமூக ஊடகங்களில் அதிகமாக விவாதம் நடைபெறவில்லை?
இந்நேரம் தலித்திய அடையாள சாதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இப்படி நேர்ந்திருந்தால்
பெரியார் பெயரில் இயங்கும் முற்போக்கு என தங்களை மார்தட்டும் நடுநிலை நக்கிகள் உட்பட அனைத்து தரப்பு நடுநிலை நக்கிகளும் பொங்கியிருப்பானுகளே!
ஒட்டு மொத்த இடைநிலை சாதிகளையும் மொத்தமாக தெருவுக்கு இழுத்து சாடித் தீர்க்கும் வல்லமை கொண்ட
நாங்கள் மட்டுமே உலகத்திலேயே ஒரே ஒரு இன்டலக்சுவல் சமூகம் என நச்சுஆள் சுகந்திக்கா பிதற்றிக்கொள்ளும் சுயசாதி வெறிக்கட்சியினர் அமைதி காப்பதில் அர்த்தம் இருக்கிறது..

புதன், 26 அக்டோபர், 2022

நடிகை கஸ்தூரி எனும் கட்டதுரை.... மருத்துவர் ஷாலினி

ஒரு பெண் விரும்பவில்லை என்றால் அவளை தொடக்கூடாது என்ற..." - மனநல மருத்துவர்  ஷாலினி! | nakkheeran

Shalini  : நடிகை கஸ்தூரி எனும் கட்டதுரை....
Me Too Movement சென்னையில் சூடு பிடித்த காலம். Behindwoods ஸ்டுயோவில் எனக்கும் நடிகை கஸ்தூரிக்கும் ஒரு டிபேட் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
நான் கிளினிக்கில் வேலையை முடித்துவிட்டு அப்படியே அங்கே போய்விட்டேன்... வழக்கம் போல மேக்கப்பாமல்...

அவருடைய அனைத்து கருத்துகளோடும் நான் ஒத்துப்போகவில்லையென்றாலும்”- நடிகை  கஸ்தூரி | nakkheeran

நான் ஸ்டுடியோ போய் ரொம்ப நேரம் கழித்துத்தான் கஸ்தூரி வந்தார். வந்ததும் மேக்கப் போடணும் என்றார்.
ஏற்கனவே ரொம்ப லேட் என்று நான் சுட்டிக்காட்ட, "நீங்க நாச்சுரல் ப்யூட்டி, எனக்கு மேக் கப் போட்டா தான்" என்று வைஸ்கிராக்கிவிட்டு போனார்.
மேக் அப் முடித்து வந்தும் நாற்காலியில் உட்கார்ந்து பல தடவை சரி பார்த்து டச் அப் பண்ணி....
எனக்கு வேறு டாக்சிக் ஃபெமினிட்டி என்றால் ரொம்ப அலர்ஜி...
ஏதோ occupational conditioning உபயத்தால் பொறுமையாக இருந்தேன்.
கடைசியில் டிபேட்டினோம். பேச ஆரம்பித்ததும் நேரம் வேகமாக ஓடியது. பேசி முடித்து விட்டு நான் கிளம்ப, கஸ்தூரி நின்று பேரம் பேசி பணம் வாங்கினார்.

“உ.பி யைச் சேர்ந்த ஆளுநருக்கு கேரளாவைப் பற்றி என்ன தெரியும்” - முதல்வர் பினராயி விஜயன் பதிலடி! அமைச்சரை நீக்க முடியாது

நக்கீரன் :கேரள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமதுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இது தொடர்பாக சட்டத் திருத்த மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியும் அது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் ஆளுநர், " என்னை விமர்சித்து அமைச்சர்கள் கருத்து தெரிவித்தால் அவர்களின் பதவி பறிக்கப்படும்" என சில நாட்களுக்கு முன்பு பேசியிருந்தது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மத்தியில் பாஜக அரசு, பாஜக அல்லது அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் அரசுக்கு ஆளுநர் மூலம் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்ற நிலையில், இந்த சம்பவம் அதனை உறுதி செய்வது போல உள்ளதாக அம்மாநில ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க பரிந்துரை செய்தார் முதலமைச்சர்

மாலைமலர் : சென்னை  கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, உளவு துறை கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன், தேவாசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கினார்.

ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வான 3 சகோதரிகள்.. தமிழ்நாட்டில்

ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வான 3 சகோதரிகள்
dailythanthi.com : தமிழகத்தில் 9,791 இரண்டாம் நிலை காவலர் பணிக்கான 7 மாதம் அடிப்படை பயிற்சி கடந்த வாரம் நிறைவு பெற்றது.

இதில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ் ஆவதம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளான பிரீத்தி (வயது 28), வைஷ்ணவி (25), நிரஞ்சனி (22) ஆகிய 3 பேரும் ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வாகி ஒரே மையத்தில் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.
இதில் பிரீத்திக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் சகோதரிகள் 3 பேரும் 2-ம் நிலை காவலர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.