திங்கள், 13 ஜூன், 2011

சமசீர்கல்வியை எப்படியாவது தடுத்து நிறுத்துவதே எமது லட்சியம் ????

மலையாள மாந்திரீகம், பில்லி சூனியம், யாகம், சனீசுவரனுக்கு அர்த்த ராத்திரி பூஜை போன்ற ஆன்மீக வழிமுறைகள் கைவிரித்து விட்டதால், லவுகீக முறைப்படி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது அம்மாவின் அரசுமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. கல்வி அமைச்சர், துறைச் செயலர், அட்வகேட் ஜெனரல் உள்ளிட்ட புரட்சித் தலைவியின் போர்ப்பபடைத் தளபதிகள் அனைவரும் டில்லி தமிழ்நாடு இல்லத்தில் பாசறை அமைத்து போர்த்திட்டங்களை வகுத்து வருகின்றனர்.
வரலாறு காணாத வெற்றி பெற்ற புரட்சித்தலைவி, சட்டமன்றத்தில் நிறைவேற்றிய வரலாற்று சிறப்பு மிக்க முதல் மசோதாவுக்கே இடைக்காலத் தடையா? முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ வா? அக்கா மூடு அவுட் என்பதை தங்கச்சி தெரிவித்திருப்பார்.
அம்மாவின் நெற்றிக்கண் திறப்பதை அமைச்சர்களும் அதிகாரிகளும் கவனித்திருப்பார்கள். சமச்சீர் கல்வி நல்லதா கெட்டதா, குட்டையா நெட்டையா என்பதையெல்லாம் பேசுவதற்கு இனி நேரமில்லை. “உயர்நீதிமன்றத் தடையைத் தகர்த்தெறிய என்ன செய்ய வேண்டுமோ அதைச் வேண்டும்” என்பதுதான் தளபதிகளுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை.
மலையாள மாந்திரீகம், பில்லி சூனியம், யாகம், சனீசுவரபகவானுக்கு அர்த்த ராத்திரி பூஜை போன்ற ஆன்மீக வழிமுறைகள் மூலம் இடைக்காலத் தடையைத் அகற்ற வாய்ப்பில்லை என்று ஜோசியர்கள் கைவிரித்து விட்டதால், லவுகீக முறைப்படி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிடப் பட்டிருக்கிறது.
“கவிதையில் எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்கேற்ப பரிசுத்தொகையைக் குறைத்துக் கொள்ளலாம்” என்று கூறி, சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள “பிழையான” பாடங்களை நீக்குவதற்கான அதிகாரத்தையும் அம்மாவின் அரசுக்கு வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பு. எனினும் இத்தகைய சோளப்பொறிகளால் அம்மாவைத் திருப்திப் படுத்தி விட முடியுமா என்ன?
திமுக ஆட்சிக்கு எதிராக மக்களிடம் நிலவிய வெறுப்பின் காரணமாக தான் வெற்றி பெறவில்லையென்றும், 1991-96, 2001-2006 ஆகிய இரு காலகட்டங்களில் தாங்கள் அனுபவித்த பொற்கால ஆட்சியை எண்ணிப்பார்த்து, அந்தப் பொற்காலத்தை மீண்டும் கொண்டுவர வேண்டுமென்று தமிழக மக்களின் இதயத்திலிருந்து வெடித்துக் கொப்புளித்த வேட்கையின் விளைவுதான் இந்த இமாயலய வெற்றி என்றும் அம்மா ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறார்.
மேற்படி பொற்காலம் எப்படி இருந்திருக்கும் என்பது இன்று ஒண்ணாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கக் கூடிய 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால்தான் ஆட்சியின் முதல் காட்சியை ஓபன் பண்ணும்போதே பழைய பொற்காலத்தின் “எஃபெக்ட்” தெரியவேண்டும் என்பதை உத்திரவாதப் படுத்தியிருக்கிறார் புரட்சித்தலைவி.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 ஆம் தேதி பள்ளிக்கூடம் திறந்திருக்க வேண்டும். அது ஜூன் 15 க்குத் தள்ளிவைக்கப்பட்டது. ஒருவேளை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அம்மாவின் அரசுக்கு சாதகமாக அமைந்துவிட்டால், செப்டம்பர் மாதம் முடியும்வரை மாணவர்களுக்கு விடுமுறைதான். இதுநாள்வரை வகுப்பறை இல்லாத பள்ளியையும், வாத்தியார் இல்லாத வகுப்பறையையும் மட்டுமே பார்த்திருக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த முறை பாடப்புத்தகமே இல்லாத “கல்வி”யையும் காண்பார்கள்.
அக்டோபர் நவம்பரில் மழைக்காலம் தொடங்கும் வரை கோடைக்கால விடுமுறையை நீட்டிக்கும் ஆட்சி, பொற்கால ஆட்சியாகத்தானே இருக்கமுடியும்? இதை மாணவர்களுக்கு விளக்கிப் புரிய வைக்க வேண்டுமா என்ன? ஓபனிங் ஷாட்டிலேயே முழுப்படத்தின் கதையையும் நுணுக்கமாக கூறும் திறமை புரட்சித்தலைவியைத் தவிர வேறு யாருக்கு வரும்?
“பாடப்புத்தகத்துக்காக 4 மாத காலம் மாணவர்கள் காத்திருக்க வேண்டுமா?” என்று சிலர் குமுறக்கூடும். 2006 இலிருந்து 2011 வரை 5 ஆண்டு காலம் இந்தப் பொற்கால ஆட்சி தொடங்குவதற்காக 7 கோடி தமிழ்மக்கள் காத்திருக்கவில்லையா? ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்காக புரட்சித்தலைவியே கொடநாட்டில் 5 ஆண்டுகள் தவமிருக்கவில்லையா? அவ்வளவு ஏன், அம்மாவின் தரிசனத்துக்காக கூட்டணிக் கட்சிக்காரர்கள் போயசு தோட்டத்தின் வாயிலில் அன்றாடம் காத்திருக்கவில்லையா? பொற்காலம் வேண்டுவோர் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.
எப்பாடு பட்டேனும் தமிழக மாணவர்களைப் பொற்காலத்துக்குள் தள்ளிவிடவேண்டும், இல்லையேல் தங்களது எதிர்காலம் இருண்டகாலமாகிவிடும் என்ற உண்மை புரிந்திருப்பதனால்தான் கல்வி அமைச்சரும், கல்வித்துறை செயலரும், அட்வகேட் ஜெனரலும் சனிக்கிழமை காலை முதல் உச்ச நீதிமன்றத்தின் படிக்கட்டிலேயே படுத்துக் கிடக்கிறார்கள்.
ஆனால் இப்படி ஒரு பொற்காலத்துக்குள் மாணவர்கள் தள்ளப்படுவதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்பதற்காகவே உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கின்றனர் ம.க.இ.க சார்ந்த மனித உரிமைப்பாதுகாப்பு மையம் மற்றும் மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் ஆகிய அமைப்புகள். தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நிராகரிக்க வேண்டும் என்பது மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உச்சநீதிமன்றத்தின் முன் வைத்துள்ள கோரிக்கை.
இன்று – 13.6.2011, திங்கட்கிழமை – காலை தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் வழக்குரைஞர் பி.பி.ராவ் ஆஜரானார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். வழக்கின் விவரங்களைப் படித்துவிட்டு வரவேண்டியிருப்பதால் விசாரணையை நாளைக்குத் – 14.6.2011. செவ்வாய்க் கிழமை – தள்ளிவைப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கே ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிக்கவேண்டும் என்பது மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கோரிக்கை. விசாரணை நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. ஒரு வேளை மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டாலும், கேவியட் மனு தாக்கல் செய்திருக்கும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வாதங்களைப் பரிசீலிக்காமல் இவ்வழக்கில் உச்சநீதி மன்றம் தீர்ப்பளிக்காது.
அம்மாவின் அரசு vs மனித உரிமைப் பாதுகாப்பு மையம்! இவ்வழக்கில் வெளிப்படையாகத் தெரியும் வாதி-பிரதிவாதிகள் இவர்கள். ஆனால் இந்த வாதப் பிரதிவாதங்களுக்குள்ளே “தனியார் கல்வி vs பொதுக்கல்வி”, “மனுநீதி vs சமநீதி” என்ற முரண்பாடு ஒளிந்திருக்கிறது. பொற்காலத்துக்குள் ஒளிந்திருக்கும் இருண்டகாலம் போல. இருளை அடையாளம் காட்டுவோம்
www.vinavu.com

Idi Amin வெளியே தலைக்காட்டப் பயந்துக்கொண்டு, சவூதி அரேபியாவில்

இடிஅமின் பர்சனலாக செலுத்திய பீரங்கி குண்டு, ஜனாதிபதி மாளிகை சுவரில் பெருத்த சத்தத்துடன் துளை போட்டது. ஜனாதிபதி பிரெடிக்கு இடிஅமின் முரட்டுத்தனம் பற்றி தெரியும். ஒரு ப்ரைவேட் விமானத்தில் ஏறி தப்பித்தோம், பிழைத்தோம் என்று பிரிட்டனுக்கு ஓடி தஞ்சம் புகுந்து, சில மாதங்களில் நோயுற்று பரிதாபமாக இறந்துபோனார் அவர். தொடர்ந்து நாலாண்டுகளுக்கு ஒபோடேயின் விசுவாசியாக, செல்லப்பிள்ளையாக - அதே சமயம், தனிப்பட்ட முறையில் அட்டுழியங்களும் அதிகார துஷ்ப்ரயோகங்களும் செய்துகொண்டு வந்தான் இடிஅமின்.
ஜனவரி 1971 அன்று ஒபோடே காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிங்கப்பூருக்கு விமானத்தில் பறந்தார். அவரிடம் பணிவோடு கைகுலுக்கி வழியனுப்பிய இடிஅமின், விமானம் கிளம்பியவுடன் ராணுவத்தின் ஒரு பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றினான்.

கையில் ஒயின் கோப்பையோடு விமானத்தில் ஜாலியாக அமர்ந்திருந்த ஒபோடே, ரேடியோவில் இந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததுதான் மிச்சம்.

மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை கூட்டி, ராணுவ தலைமை அதிகாரியின் உடையணிந்து கொண்டு மேடை ஏறி நின்ற இடிஅமின், 'ஜனாதிபதி பிரெடியை கொல்ல திட்டம் போட்டார் ஒபோடே! நான்தான் அவருக்கு ரகசிய தகவல் தந்து, நாட்டைவிட்டு தப்பிக்க உதவி செய்தேன். தேச துரோகி ஒபோடே, இனி உகாண்டா திரும்ப முடியாது. என் முதல் வேலையாக, பிரிட்டனில் புதைக்கப்பட்டிருக்கும் நம் அருமை ஜனாதிபதியின் உடலை உகாண்டா கொண்டுவந்து, சகல மரியாதைகளுடன் மீண்டும் புதைத்து, அங்கே மிகப்பெரிய நினைவு சின்னம் அமைக்க போகிறேன்!' என்றான் உணர்ச்சிகரமாக.
ஒபோடே ஆட்சியிலிருந்தபோது பெரிதாக எதையும் கிழிக்கவில்லை என்பதால், மக்கள் கரவொலி எழுப்பினார்கள்!
ராணுவத்தில் இடிஅமினை போல, பதவி ஆசை உள்ள பல சீனியர் அதிகாரிகள் இருப்பார்கள் அல்லவா, அவர்களையெல்லாம் ஒன்றுகூடி தன்னை கவிழ்க்க திட்டம் போட்டால்?!
முக்கியமாக முப்பத்து ஆறு உயர் ராணுவ அதிகாரிகளை விருந்துக்கு கூப்பிட்டு அனுப்பினான் இடிஅமின்.
'நாம் எல்லோரும் இணைந்து, உகாண்டாவை செல்வம் கொழிக்கும் நாடாக மாற்ற திட்டங்கள் தீட்ட வேண்டும்!' என்று அவன் சொல்லியனுப்ப, எல்லா ராணுவ அதிகாரிகளும் ஆர்வத்துடன் விர்ந்துக்கு வந்தனர்.
இடி அமீனுக்கு விசுவாசமான அடியாள் படையொன்று திடீரென்று ஜனாதிபதி மாளிகையின் விருந்து மண்டபத்தில் புகுந்தது. இதை கண்டு திடுக்கிட்டு, பாதி விருந்திலிருந்து எழுந்து ஓட பார்த்த எல்லா ராணுவ அதிகாரிகளையும் கத்தியாலும் பயோனட்களாலும் குண்டர்கள் குத்தி கொன்றனர்.
மறுநாள் இடிஅமின் ரேடியோ மூலம் மக்களுக்கு விடுத்த செய்தியில், 'என்னை கொலை செய்யும் திட்டத்துடன் வந்த சில ராணுவ அதிகாரிகளுக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டி வந்தது!' என்று வருத்தத்துடன் அறிவித்தான்.
அதிர்ச்சியடைந்த ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சுலைமான் ஹுசைன், இடி அமீனை நேரில் சந்தித்து கடுமையான வார்த்தைகளால் தன் ஆட்சேபனையை தெரிவித்தார். ஆனால், அமீனை சந்திக்கப்போன சுலைமான் திரும்பி வரவில்லை!
அவரை ஒரு சாக்கு பையில் திணித்து, ஜெயிலுக்கு தூக்கி சென்ற இடி அமினின் அடியாட்கள், அங்கே தடிகளால் அடித்தே அவரை கொன்றனர். 'நேருக்கு நேர் நின்று என்னை மிரட்டிய சுலைமானின் தலையை மட்டும் வெட்டி எடுத்து அனுப்புங்கள்' என்று சொல்லியனுப்பினான் இடிஅமின்.பிறகு, டைனிங் அறையில் இருந்த குளிர் சாதன பேட்டியில் சுலைமானின் தலையை வைக்க சொன்னான்.

பிற்பாடு உகாண்டா நாட்டு பிரமுகர்கள், கலைஞர்கள், அயல்நாட்டு தூதுவர்களை அழைத்து பெரிய விருந்து கொடுத்த இடிஅமின், 'இந்த விருந்தில் நீங்கள் இது கேட்டாலும் கிடைக்கும். மனித இறைச்சி வேண்டுமா? சொல்லுங்கள்!' என்று உரக்க சொல்லிவிட்டு, எழுந்து போய் குளிர்சாதன பெட்டியிலிருந்து ஜில்லிட்டு போயிருந்த சுலைமானின் தலையை கொண்டுவந்து தூக்கி காட்டி, இடி சிரிப்பு சிரிக்க... எல்லோரும் திகைத்து போனார்கள்.
உச்சக்கட்டமாக, அந்த தலையிலிருந்து சில துண்டுகளை வெட்டி எடுத்து, ஊறுகாயில் தொட்டுக்கொண்டு ருசித்தான் இடிஅமின். அதிர்ச்சியோடு அந்த காட்சியை பார்த்த எல்லோருக்கும் 'இடிஅமின் ஒரு கிறுக்கு பிடித்த நவீன கலிக்யூலா' என்பதை புரிந்து கொண்டனர்.

ஏராளமான ராணுவ அதிகாரிகளை இடிஅமின் பரலோகம் அனுப்பிய தகவல் உகாண்டா மக்களுக்கு தெரியவே இல்லை! பத்திரிகைகளே இல்லாத நிலை, ரேடியோவோ... இடிஅமின் கையில்! 'தேச துரோக குற்றத்துக்காக சில ராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது' என்று மட்டும் ரேடியோ சுருக்கமாக அறிவித்தது.
இருப்பினும் எப்படியோ செய்தி வெளியே கசிந்து, அமெரிக்க 'பிலடெல்பியா புல்லடின்' பத்திரிக்கை நிருபரான நிகோலஸ் ஸ்ட்ரோ என்பவரும் ராபர்ட் ஸைடில் என்கிற சமூகவியல் பேராசிரியரும் உகாண்டாவில் ராணுவ டெபுடி கமாண்டரான மேஜர் ஜூமோ அய்கா என்பவனை சந்தித்து, இதுபற்றி விசாரித்தனர்.
தொடர்ந்து கேள்விகனைகளை இவர்கள் வீசியதால், குழப்பமடைந்த அய்கா போன் போட்டு, இடி அமீனிடம் 'கேள்விமேல் கேள்வி கேட்டு பேஜார் பண்ணுகிறார்கள் தலைவா!' என்று முறையிட... 'முட்டாள்! எதற்கு மெனக்கெட்டு பதில் சொல்லி கொண்டிருக்கிறாய்? முதல் வேலையாக அவர்களை சுட்டு தள்ளு!' என்று இடி அமீனிடம் இருந்து ஆணை வந்தது.
போனை வைத்துவிட்டு இருக்கையிலிருந்து எழுந்து வந்த அய்கா, இரு அமெரிக்கர்களின் நேற்று பொட்டிலும் கைத்துப்பாக்கியை வைத்து சுட்டு தள்ளினான். அவர்களுடைய உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
போனவர்களை திரும்பாததால், அமெரிக்கா தூதரகம் விசாரிக்க துவங்க, 'அவர்கள் வந்து பேட்டிஎடுத்துக்கொண்டு போய்விட்டார்களே!' என்று அய்காவிடமிருந்து பதில் வந்தது.
இதற்கு பிறகே உலக நாடுகள், 'உகாண்டாவுக்கு அதிபதி ஆகியிருப்பவன் திமிர் பிடித்த, சராசரி சர்வாதிகாரி இல்லை. சற்றே மனநிலை பாதிக்கப்பட்ட, ஆபத்தான கொடுங்கோலன்' என்று புரிந்து கொண்டு கவலைப்பட ஆரம்பித்தன.

இடிஅமின் ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டுக்குள் உகாண்டா திவால் நிலைமைக்கு வந்துவிட்டது. பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகள் எல்லோரும் கொல்லப்பட்டதால், தனக்கு பரிச்சயமான குண்டர்கள், குற்றவாளிகள், சமூகவிரோதிகள் எல்லோருக்கும் மேஜர், கேப்டன் என்று பதவிகள் கொடுத்து, ராணுவத்தில் சேர்த்துக் கொண்டான் இடி அமீன்.
விசுவாசமான இந்த ரௌடிகளால் தன் பதவிக்கு ஆபத்தில்லை என்கிற நம்பிக்கை வந்தவுடன், உகாண்டாவின் பொருளாதார நிலைமையை சீர்படுத்த, நிதி உதவி கேட்டு பிரிட்டன், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு 'ஜனாதிபதி' என்கிற முறையில் விஜயம் செய்தான் இடி அமீன். எல்லா நாடுகளும் (லிபியா தவிர௦!) கழன்று கொள்ள...
வெறுப்போடும் வெறுங்கையோடும் நாடு திரும்பிய இடி அமீன், விமானநிலையத்திலிருந்து அரண்மனைக்கு காரில் திரும்பி கொண்டிருந்தபோது, ஒரு இந்தியரின் பெரிய கடை அவன் கண்ணில் பட்டது. சரேலென்று நிமிர்ந்து உட்கார்ந்தான் அந்த கொடுங்கோலன்!

உகாண்டாவில் 50,000 -க்கு மேற்ப்பட்ட ஆசிய மக்கள் வசித்து வந்தார்கள். இவர்களில் தொழிலதிபர்களாகவும் டாக்டர்களாகவும் இன்ஜினியர்களாகவும் நர்சுகளாகவும் ஆசிரியர்களாகவும் பல துறைகளில் பணியாற்றி, உகாண்டாவின் பொருளாதாரத்தையும் தூக்கி பிடித்து நிறுத்தினார்கள். ஆசிய தொழிலதிபர்களால் லட்சக்கணக்கான உகாண்டா மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்தது.
காரில் சென்று கொண்டிருந்த இடி அமீனின் கண்களில் தென்பட்ட இந்தியரின் கடை, அவனுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது. கூடவே பளீரென்று ஒரு ஐடியாவும் அவன் மனதில் உதித்தது.
இரண்டு நாட்கள் ஆழ்ந்த சிந்தனையிலிருந்தான் அந்த சர்வாதிகாரி. பிறகு அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டான்! 'உகாண்டாவின் அத்தனை பொருளாதார பிரச்சனைகளுக்கும் ஆசியர்கள்தான் காரணம். அந்த சுரண்டல் பேர்வழிகள் ஒழித்தால்தான் உகாண்டா உருப்படும். இன்னும் 90 நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் அத்தனை ஆசியர்களும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்!'
இதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ரேடியோவில் இடி அமீன் மிரட்டலாக 'இன்னும் 75 நாள், 74 நாள், 73 நாள்...' என்று 'கவுன்ட்-டௌன்' வேறு சொல்லிப் பயமுறுத்த ஆரம்பித்தான்.

பல தலைமுறைகளாக உகாண்டாவிலேயே பிறந்து, வளர்ந்து, அந்த நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழ்ந்த ஏராளமான இந்தியா குடும்பங்கள் கையில் மூட்டை முடிச்சிகளுடன், கண்களில் மிரட்சியுடன் நாட்டைவிட்டு வெளியேறின.
தீனி போடாமல் குண்டர்கள் எப்படி விசுவாசமாக இருப்பார்கள்? இடி அமீன் அவனுடைய பெரும் குண்டர் படையை அழைத்து, 'பிசினஸ் எல்லாவற்றையும் நீங்களே எடுத்து நடத்துங்கள்!' என்று அறிவித்தான்.

சில வாரங்களுக்குள் கடைகளில் உள்ள எல்லா பொருட்களையும் விற்று பணமாக்கிக் கொண்ட குண்டர்கள், அதற்கு பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க - கடைகள் மூடப்பட்டன. பிறகு பார்மசிகள், மருத்துவமனைகள், ஆபிஸ்கள், தொழிற்சாலைகள் எல்லாம் இழுத்து மூடப்பட்டு, உகாண்டாவின் பொருளாதார நிலைமை அதலபாதாளத்துக்குப் போக ஆரம்பித்தது.
உகாண்டா மக்கள், இறந்தவர்களின் உடல்களை மிகவும் பவித்ரமாக கையாண்டு, விசேஷ சடங்குகளை (காரியம்) செய்யும் வழக்கமுடையவர்கள். இந்த 'Weakness', அமீனின் ஆட்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. அங்குமிங்குமாகப் பொதுமக்களைத் தனித்தனியாக வேட்டையாடிக் கடத்தி சென்று கொல்ல வேண்டியது, பிறகு உடலை எங்கேயாவது ஒழித்து வைத்துவிட்டு, உடலை கண்டுபிடித்துக் கொடுக்கப்பணம் வசூலிக்க வேண்டியது! இது, அவர்களுடைய கொடூரமான வேலையாகிவிட்டது.
அமீன் அசரவில்லை! குண்டர்களை அழைத்து, கலிக்குலா ஸ்டைலிலேயே ஒரு திட்டத்தை சொன்னான்! 'யாரை வேண்டுமானாலும் கொலை செய்து, கொள்ளையடித்துக் கொள்ளுங்கள், நான் கண்டுகொள்ள மாட்டேன்' என்று!


தவித்துப்போன உறவினர்கள் பணம் (ஏழை மக்கள் என்றால் ரூ. 10,000) சேகரித்து கொடுக்க, 'State Research Bureau' என்ற பெயரில் அரசு அமைப்பு ஒன்று (அதாவது, அடியாட்கள் அமைப்பு!) செத்துப் போனவரின் உடலைத் தேடுவதுபோலத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்துப் பணம் வசூலித்தது. இதில் ஒரு பெரும் பகுதி இடி அமீனுக்கு!
'சாகடித்தால் வசூல்!' என்கிற நிலை ஏற்பட்டதால், உகாண்டாவில் இரவு சூழுந்தால், எங்கு பார்த்தாலும் துப்பாக்கிவேட்டு சத்தம் கேட்க ஆரம்பிக்க, இந்த சத்தம் பற்றி பிரான்ஸ் தூதரகம், 'தூதுவர்களால் தூங்க முடியவில்லை!' என்று இடி அமீனிடம் முறையிட்டது என்றால் பார்த்துக் கொள்ளலாம்! இதனால் சற்று தர்மசங்கடப்பட்ட அமீன், குண்டர் தலைவன் மால்யா முங்கு என்பவனை அழைத்து, 'சத்தமில்லாமல் கொலைகளை செய்ய முடியாதா?' என்று கேட்டான்.
நம்முடைய ஐ.ஜி. மாதிரி பெரும் பதவியில் அமர்த்தப்பட்டிருந்த மால்யா, முன்பு ஒரு தொழிற்சாலையின் கேட்கீப்பராக பணிபுரிந்தவன். முரட்டு ரௌடியான அவன், 'ஒன்று செய்யலாம் தலைவா! நாம் கடத்துபவர்களை ஜெயிலில் போட்டுவிடலாம். அங்கு மற்ற கைதிகளை விட்டு இவர்கள் கழுத்தை நெரித்து, அல்லது சுத்தியலால் மண்டையில் அடித்துக் கொல்லச் சொல்லலாம். சத்தமே வராது! கொலைகாரர்களுக்கு ஒரு தொகை கொடுத்துவிடலாம்' என்றான்! 'பலே!' என்றான் அமீன். உடனே பெரிய சைஸ் மர சுத்தியல்கள் நிறைய வாங்கப்பட்டன.
ஏற்கனவே இஸ்லாம் மதத்துக்கு மாறியிருந்த இடி அமீனுக்கு ஐந்து மனைவிகள் (பிற்பாடு மூன்று பேரை விவாகரத்து செய்தான் அவன்). கேஅமீன் என்னும் ஒரு மனைவி (அமீனால்) கர்ப்பமடைந்து, பிறகு 'டிப்ரெஷன்' காரணமாகத் தானாகவே கருச்சிதைவு செய்ய முனைந்து அதில் குளறுபடியாகி இறந்து போனாள். தன்னை அவள் ஏமாற்றியதாக எடுத்துக்கொண்ட அமீன், கடுங்கோபம் கொண்டு மார்ச்சுவரியில் இருந்த டாக்டர்களை அழைத்து, அவளுடைய உடலிலிருந்து கைகளை வெட்டி கால் பகுதியிலும், கால்களை எடுத்து கைப்பகுதியிலும் வைத்துத் தைக்கச் சொன்னான். இறந்த பிறகும் அவளுக்கு பனிஷ்மென்ட்! மற்ற மனைவிகளை இழுத்துக்கொண்டு வந்து, 'பாருங்கடி, என்னிடம் விளையாடினால் இதுதான் கதி!' என்று வெறியோடு கத்தினான்!
உகாண்டா அரசுக்கு லிபியா நாடு மட்டுமே எதோ நிதியுதவி அளித்து வந்தது. லிபியாவின் ஒரே கண்டிஷன் - யூதர்கள் அத்தனை பேரையும் நாட்டைவிட்டுத் துரத்த வேண்டும் மற்றும் பாலஸ்தீனிய தீவிரவாதிகளுக்கு உதவிகள் செய்யவேண்டும் என்பதே. இதெல்லாம் அமீனுக்கு 'கரும்பு தின்னக் கூலி' மாதிரிதான்! ஆனால், இந்த பாலஸ்தீனிய புரட்சிக்காரர்களின் உறவு விபரீதத்தில் கொண்டுபோய் விட்டது.
1976 ஜூன் 28- ஆம் தேதி. இஸ்ரேலிலிருந்து பாரிஸ் சென்று கொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானத்தை பாலஸ்தினிய தீவிரவாதிகள் கடத்தி, உகாண்டாவில் உள்ள என்டேபி விமான நிலையத்தில் இறங்கினார்கள். விமானத்தில் முன்னூறு பயணிகள். பலர் யூதர்கள்...
இஸ்ரேலிலும் ஐரோப்பாவிலும் சிறைகளிலிருக்கும் 53 பாலஸ்தீனிய பயங்கரவாதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில், அத்தனை பயணிகளும் கொல்லப்படுவார்கள்' என்று மிரட்டல் அறிக்கையைக் கடத்தல்காரர்கள் வெளியிட... உலகத்தின் கவலையான கவனம் முழுவதும் உகாண்டா பக்கம் மீண்டும் திரும்பியது. அந்த விமானநிலையத்தில் இடி அமீனும் எதோ கடத்தல்காரர்களின் தலைவன் மாதிரி கம்பிரமாக நடைப்போட்டு கொண்டிருந்ததை டி.வி-யில் பார்த்து பல உலக நாடுகள் அதிர்ச்சிக்குள்ளாயின.


ஒரே ஒரு விஷயத்தில் கோட்டை விட்டான் இடி அமீன். முன்னொரு சமயம் இஸ்ரேலிய தொழில் வல்லுனர்களை நாட்டைவிட்டுத் துரத்தியபோது, அந்த இன்ஜினியர்கள் என்டேபி விமானநிலையத்தின் வரைபடத்தையும் கையோடு எடுத்துப்போயிருந்தார்கள். அவர்கள் கட்டிய விமானநிலையம் தான் அது! அந்த 'பிளானை' கொண்டு வரச்செய்த இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள், பயணிகள் விமானநிலையத்துக்குள்ளே எந்த இடத்தில் 'ரகசியமாக' அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று (ஒற்றர்கள் மூலம்) கண்டுபிடித்தார்கள்.


ஜூலை 3- ஆம் தேதி நள்ளிரவு... இஸ்ரேலிய கமாண்டோக்களைச் சுமந்துக்கொண்டு ஒரு ராணுவ விமானம் 'ராடார்'களிடம் சிக்காமல் இருக்க தாழ்வாகப் பறந்து, விமானநிலையத்தின் ஒரு மூலையில் இறங்கியது. விமானத்திலிருந்து மின்னலாக வெளிப்பட்ட கமாண்டோக்கள் இயந்திரத் துப்பாக்கிகளை இயக்கியவாறு விமான நிலையத்தில் புகுந்து, அத்தனை பயணிகளையும் காப்பாற்றி, தங்கள் விமானத்தில் ஏற்றிக்கொண்டு பறந்துவிட்டார்கள்!


குறுக்கே வந்த அமீனின் இருபது ராணுவ வீரர்கள் காலி! ஒரு மணிநேரத்தில் எல்லாம் முடிந்துவிட, பிறகே விமானநிலையத்துக்கு ஓடிவந்த இடி அமீன், 'ஓ'வென்று கூச்சல் போட்டு புலம்பினான் (இந்த 'அட்வென்ச்சர்' பிற்பாடு திரைப்படமாகவும் வெளிவந்தது!).
இதுவும், பிற்பாடு அண்டை நாடான டான்சானியா மீது படையெடுத்ததும் அமீனின் விழ்ச்சிக்கு துவக்கமாக அமைந்தது.

எந்த பயிற்சியும் இல்லாத ராணுவத்தை துரத்தியடித்த டான்சானியப் படையினர், குஷாலாகி உகாண்டாவுக்குள்ளேயே புகுந்தனர். உகாண்டா மக்கள் கரகோஷத்துடன் டான்சானியப் படையை வரவேற்க, திகைத்துப்போன இடி அமீன், 'போரிட தயாராகுங்கள்!' என்று ராணுவத்துக்கு அறைகூவல் விடுத்தான். ஆனால், ஒரு ராணுவ வீரன்கூட வரவில்லை!

இதற்குள் உலகநாடுகள் உதவியோடு மில்டன் ஒபோடேவும் நாடு திரும்ப, அவருக்கும் மக்கள் பெரும் வரவேற்ப்பு தந்தார்கள். இந்த தகவலையெல்லாம் கேட்டு நடுங்கிப் போய் அழ ஆரம்பித்த இடி அமீன், லிபியா நாட்டு அதிபர் கடாபிக்கு போன் போட்டு 'என்னை காப்பாற்றுங்கள்!' என்று அலற, கடாபி தன்னுடைய பிரத்தியேக ஹெலிகாப்டரை உகாண்டாவுக்கு அனுப்பினார். குடும்பத்தோடு அதில் மரணபயத்துடன் தாவிஎறிக்கொண்டான் இடி அமீன்.


உயிர் பிழைத்தாலும், வெளியே தலைக்காட்டப் பயந்துக்கொண்டு, சவூதி அரேபியாவில் ஒரு ஹோட்டலில் தனக்கென்று சவூதி அரசால் தரப்பட்ட அறையில் தங்கி, கடைசி காலத்தை கழித்த அந்த கொடுங்கோலன், 16 ஆகஸ்ட் 2003 அன்று மாரடைப்பு ஏற்பட்டு செத்துப்போனான்...
இடி(அமீன்)உடன் புயலடித்து ஓய்ந்த பிறகு, மீண்டும் ஒபோடே ஆட்சி துவங்கியது.

நன்றி: மதனின் 'மனிதனுக்குள் ஒரு மிருகம்', விகடன் பதிப்பகம்.

தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பிய போதுதான், சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்கள்


இலங்கை விவகாரம்: மனசாட்சி உள்ளவர்கள் புரிந்து கொண்டால் ஆறுதல்தான்: கலைஞர்
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை மீது பொருளாதாரத் தடை கோரும் தீர்மானத்தை சட்டப் பேரவையில் வரவேற்றது திமுக. அப்போது பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், காவிரிப் பிரச்னையில் தமிழகத்தை திமுக வஞ்சித்துவிட்டது என்று வேண்டுமென்றே பேசி விஷத்தைக் கக்க வேண்டிய அவசியம் என்ன?
இலங்கைத் தமிழர்களுக்காக நான் எதைச் செய்தாலும் அதை ""கபட நாடகம்'' என அறிக்கை விடுகிறார் ஜெயலலிதா.

 1956 ல் சிதம்பரம் திமுக பொதுக் குழுவில் அண்ணா முன்னிலையில் இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானத்தை நான்தான் முன்மொழிந்தேன். 24.8.1977 ல் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காகப் பிரமாண்ட பேரணி நடத்தியது திமுக. இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படும் பிரச்னையை தீர்க்க மனிதாபிமான அடிப்படையில் உதவுமாறு கோரி 13.8.1981 ல் பிரதமருக்கு தந்தி அனுப்பியது நான்.
1981 ல் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக ஆகஸ்ட் 15 ம் நாள் அதிமுக அரசால் கைது செய்யப்பட்டேன்.

 25.7.1983 ல் வெலிக்கடை சிறையில் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை போன்ற 35 தமிழர்களை கொலை செய்தபோது பெரிய பேரணியை திமுக நடத்தியது. மத்திய, மாநில அரசுகள் இலங்கைத் தமிழர் பிரச்னையில் அக்கறை காட்ட நானும், திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை 10.8.1983 ல் ராஜிநாமா செய்தோம். 16.5.1985 ல் காஞ்சிபுரத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக நடந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானேன். அதே ஆண்டு ஆகஸ்ட் 23 ம் தேதி சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டதை அடுத்து சென்னையில் ஊர்வலம் நடத்தி, அந்த உத்தரவை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் தொடரும் என அறிவித்து, அதன் தொடர்ச்சியாக நாடு கடத்தும் உத்தரவைத் திரும்பப் பெறச் செய்தோம்.;இலங்கைத் தமிழர் நலன்களைப் பாதுகாக்க 1986 ல் மதுரையில் டெசோ அமைப்பு சார்பில் மாநாடு நடத்தினோம்.

;1989 ல் இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண விரும்பி அப்போதைய பிரதமர் வி.பி. சிங் தெரிவித்த யோசனையின் பேரில், பல்வேறு போராளி குழுவினரையும் தனித்தனியே சந்தித்து உரையாடி 19.12.1989 ல் பிரதமரைச் சந்தித்து விவரங்களைக் கூறினேன்.

1990 ஜூன் 19 ல் வி.பி. சிங் இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அத்வானி, வாஜ்பாய், அருண் நேரு உள்ளிட்ட தலைவர்கள் அதில் கலந்து கொண்டனர். பிரச்னை குறித்து அனைத்து விவரங்களையும் விளக்கிவிட்டு, தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பிய போதுதான், சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்கள் பத்மநாபா உள்ளிட்டோர் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி வந்தது.

1997 ல் திமுக ஆட்சியில் இருந்தபோது, ""சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க கருணாநிதி முயலுகிறார், விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கிவிட்டார்கள்'' என ஜெயலலிதா கண்டன அறிக்கை வெளியிட்டார்.
இலங்கைத் தமிழர்களுக்காக திமுக ஆட்சியில் மத்திய அரசை வலியுறுத்தி எதுவும் செய்யவில்லை என கூறுகிறார்கள். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த வலியுறுத்தி 23.4.2008 ல் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் 6.10.2008 ல் பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுதொடர்பாக பேசியதை மறந்துவிட்டார்கள்.
இலங்கையில் தமிழ் இனப் படுகொலையைக் கண்டித்து, போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டும் என தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், ""விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை'' என தெரிவித்தார்
அப்போது அப்படிக் கூறிவிட்டு இப்போது நடத்துவதுதான் கேலிக்கூத்தே தவிர, நான் எந்தக் காலத்திலும் கேலிக் கூத்தாடியவன் இல்லை. இதை இலங்கைத் தமிழர்களும், உலகம் முழுதும் இருக்கிற தமிழர்களும் நன்கு உணர்வார்கள்.

2006ம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 7.12.2006, 23.4.2008, 12.11.2008, 23.1.2009 நாள்களில் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காகப் பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம். குறிப்பாக 23.4.2008 ல் பேரவையில் இலங்கைத் தமிழர்களுக்காக திமுக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது.
அதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்திய அரசு இலங்கைத் தூதர்களை அழைத்து அன்று பிற்பகலிலேயே பேசியதாகவும், இந்தத் தகவலை எனக்குத் தெரிவிக்குமாறு பிரதமர் கூறியதாகவும் சொன்னார்.விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தமிழ்ச்செல்வன் மறைந்தபோது நான் எழுதிய இரங்கல் கவிதை பற்றிக் குறிப்பிட்ட ஜெயலலிதா, புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பு இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று, அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

2009 ல் இலங்கைத் தமிழர்களுக்காக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தபோது, இலங்கையில் தமிழ் ஈழம் மலரும் என்றால், அதற்காக ஆட்சியை இழக்கக்கூட தயார் என்று அறிவித்தவன் என்பதை உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுபவர்கள் நிச்சயம் உணர்வார்கள்.
மனசாட்சி உள்ள சிலராவது இந்த உண்மைகளைப் புரிந்து கொண்டால், அதுவே எனக்கு ஓர் ஆறுதல்தான் என கூறியுள்ளார்.

ஈழத் தமிழர் பிரச்னையில் கபட நாடகமா? கலைஞர் ஆவேசம்


"ஈழத் தமிழர் பிரச்னையில் நான் எடுத்த முயற்சிகளை எல்லாம் கேலிக்கூத்து, கபட நாடகம் என கீழ்த்தர விமர்சனம் செய்கின்றனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:

தி.மு.க., பொறுப்பில் இருந்தபோது, இலங்கைத் தமிழர்களுக்காக அனைத்து கட்சி கூட்டம், சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டம்,பிரதமருக்கு தந்தி, பார்லிமென்ட் எம்.பி.,க்கள் ராஜினாமா அறிவிப்பு போன்றவற்றை, நான் நடத்தியநாடகங்கள் என, முதல்வர்ஜெயலலிதா சட்டசபையில் கூறியுள்ளார். நான் எதைச் செய்தாலும், அதை, "கபடநாடகம்' என அறிக்கை விடுவது அவரது வாடிக்கை.இலங்கைத் தமிழர்களுக்காக, காலை 6 மணிக்கெல்லாம் வீட்டாரிடம் சொல்லாமல், அண்ணாதுரை நினைவிடத்திற்கு சென்றுஉண்ணாவிரதம் தொடங்கினேன். ஆனால், காலை சிற்றுண்டியைவீட்டில் முடித்து விட்டு, தலைமைச் செயலகம் செல்லும் வழியில்உண்ணாவிரதம் இருக்கச் சென்றேன் என, முதல்வர் கூறுகிறார். நான் உண்ணாவிரதம் இருந்தால், "கேலிக் கூத்து'; அவர் உண்ணாவிரதம் இருந்தால் அது, "அன்னா ஹசாரே' நடத்தும் உண்ணாவிரதம் போன்றதா?

சிதம்பரத்தில் 1956ம் ஆண்டு நடந்த தி.மு.க., பொதுக்குழுவில், அண்ணா முன்னிலையில் இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்தவனே நான் தான். இப்படி தொடர்ந்து சொல்லிக் கொண்டே போகலாம்.இலங்கைத் தமிழர்களுக்காக தற்போது சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள ஜெயலலிதா, 1997ல் தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, "விடுதலைப் புலிகள் தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கி விட்டனர்' என்று அறிக்கை விட்டதை மறக்க முடியுமா? கடந்த 2008 தி.மு.க., ஆட்சியில் "இலங்கையில் அமைதி ஏற்பட பயனுள்ள பேச்சு வார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்' என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

இலங்கை தமிழர்களுக்காக, தமிழகத்தில் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தபோது, "இலங்கை தமிழர்களை கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை' என்று அறிக்கை விட்டவர் ஜெயலலிதா. இலங்கையில், தமிழ் இனப் படுகொலையைக் கண்டித்து போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டுமென, அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய போது, "இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டு போரை நிறுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை' என்று கூறியவர், தற்போது நடத்துவது தான் கேலிக்கூத்தே தவிர, நான் எந்த காலத்திலும் கேலிக்கூத்தாடியவன் இல்லை; இதை இலங்கைத் தமிழர்களும் நன்கு அறிவர். உலகம் முழுதும்இருக்கும் தமிழர்களும் நன்கு உணர்வர்.இவ்வாறு கருணாநிதிகூறினார்.

கர்நாடகாவில் சென்னை மாணவி கடத்தப்பட்டு மீட்பு

சென்னை மாணவி கர்நாடகாவில் மீட்பு

சென்னையில் ரூ.5 லட்சம் கேட்டு புதுச்சேரி மாணவி கடத்தப்பட்டார். அவரை போலீசார் கர்நாடக மாநிலத்தில் மீட்டனர்.

சென்னையை அடுத்த பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் கடந்த 8-ந் தேதி புதுச்சேரி கொம்யூன் பிள்ளையார் குப்பத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் ஒரு புகார் கொடுத்தார். அதில்,

என் மகள் பிரியா (வயது 19- பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் சென்னையை அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ.-ஐ.டி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 7-ந் தேதி மாலை 6.15 மணிக்கு என்னுடைய மகள் கடைசி தேர்வை முடிந்து விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருப்பதாக செல்போனில் கூறினார். பின்னர் இரவு 7.45 மணிக்கு செல்போனில் தொடர்பு கொண்டபோது வேறு யாரோ ஒரு நபர் அதில் பேசினார்.

அவர் `உன் மகளை கடத்தி வைத்திருக்கிறேன். ரூ.5 லட்சம் பணம் கொடுத்தால்தான் உனது மகளை உயிரோடு பார்க்க முடியும்'' என்று மிரட்டினான். மீண்டும் இரவு 11.30 மணிக்கும், 8-ந் தேதி காலை 10.40 மணிக்கும் அதே ஆசாமி என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டினார். கடத்தப்பட்ட என்னுடைய மகளை மீட்டு தர வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.

கடத்தப்பட்ட பெண்ணை கண்டுபிடிக்க புறநகர் போலீஸ் கமிஷனர் கரன்சின்கா உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் நடத்திய விசாரணையில், கர்நாடக மாநிலம் கொள்ளேகால் என்ற இடத்தில் பிரியாவை கடத்தல்காரர்கள் அடைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு போலீசார் விரைந்தனர்.

போலீசார் வருவதை அறிந்த கடத்தல்காரர்கள் பிரியாவை தனியாக விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். துணைக்கமிஷனர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார், பிரியா அடைத்து வைக்கப்பட்டு இருந்த வீட்டில் இருந்து அவரை மீட்டனர்.

அப்போது போலீசாரிடம் பிரியா,சத்தியமங்கலத்தை சேர்ந்த பிரபுவுடன் எனக்கு செல்போன் மூலம் தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் தினமும் செல்போனில் பேசிக் கொள்வோம்.

கடந்த 7-ந் தேதி நான் கடைசி தேர்வை முடித்துக் கொண்டு புதுச்சேரிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தேன். இந்த விவரம் பிரபுவுக்கு தெரியும். மாலை 5 மணிக்கு நான் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு சென்று பிரபுவை சந்திதேன்.

அப்போது பிரபு என்னிடம், ``எனக்கு அவசரமாக ரூ.5 லட்சம் தேவைப்படுகிறது. உனது தந்தையை மிரட்டி பணம் பறிக்க போகிறேன்'' என்றார். இதற்கு நான் உடன்படவில்லை. `இதற்கு நீ உடந்தையாக இருக்கவில்லை என்றால், பெங்களூரில் உள்ள உன் அண்ணன் பிரேம் ஆனந்தை கொலை செய்து விடுவேன்'' என்று பிரபு மிரட்டினார். இதனால் நான் பயந்து விட்டேன்.
என்னை பிரபுவும், அவருடைய நண்பரும் மைசூருக்கு பஸ்சில் கடத்திக் கொண்டு சென்றனர். அங்கு என்னை ஒரு அறையில் அடைத்து வைத்து என் தந்தைக்கு போன் செய்யுமாறு துன்புறுத்தினார்கள். 9-ந்தேதி அங்கிருந்து கொள்ளேகாலுக்கு கடத்தி வந்தனர். போலீசார் எங்களை நெருங்கியதால் என்னை கொள்ளேகால் என்ற இடத்தில் விட்டு சென்று சென்றனர்’’ என்று கூறினார்

இதை தொடர்ந்து பிரியாவைக் கடத்தி சென்ற பிரபு மற்றும் அவருடைய நண்பரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
சென்னை மாணவி கடத்தப்பட்டு மீட்பு 

பாதிரியார் பாலசுந்தரம் கைது.மாணவியிடம் சில்மிஷம்



ஆவடி லட்சுமிநகர் சம்பூர்ணா அருள் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (17) . பிளஸ்-2 மாணவி. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பாலசுந்தர் (42). அதே பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

லட்சுமியின் தந்தைக்கும், பாலசுந்தரத்துக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதையடுத்து பாலசுந்தரம் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

கடந்த மார்ச் 9-ந் தேதி பிளஸ்-2 தேர்வுக்காக லட்சுமி வீட்டில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாதிரியார் பாலசுந்தரம், லட்சுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து வீட்டில் வேறு யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டார்.

பின்னர் அவளிடம், நான் ஜெபம் செய்தால் தேர்வில் வெற்றி பெற்று அதிக மதிப் பெண் பெறலாம் என்றார். லட்சுமி அதற்கு சம்மதித்தாள். ஜெபம் செய்து கொண்டிருக்கும் போது, பாலசுந்தரத்திற்கு சபலம் ஏற்பட்டது. அவர், அவளது உடலில் பல இடங்களில் கை வைத்து ஜெபம் செய்வது போல் செக்ஸ் சில்மிஷம் செய்தார்.

திடீரென லட்சுமியை கட்டிப் பிடித்து தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவள் பாதிரியாரின் பிடியில் இருந்து திமிறி விடுபட முயன்று கூச்சலிட்டாள். அலறல் சத்தம் கேட்டு யாராவது வந்து விடுவார்கள் என்று பயந்து போன பாதிரியார் அங்கிருந்து சென்று விட்டார்.

இது குறித்து லட்சுமி தனது தந்தையிடம் கூறி கதறி அழுதாள். இதைத் தொடர்ந்து அவர், பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேனாம் பேட்டையில் உள்ள திருச்சபையில் புகார் செய்தார். ஆனால் அவர் மீது எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள் என்று லட்சுமியின் தந்தையிடம் பால சுந்தரம் கூறியுள்ளார்.

இதனால் வேதனைய டைந்த லட்சுமியின் தந்தை, சென்னை புறநகர் கமிஷனர் கரண்சின்காவிடம் இது பற்றி புகார் செய்தார். அவர் இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி ஆவடி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் வழக்கு பதிவு செய்து மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாதிரியாரை கைது செய்தார். லட்சுமியின் தோழிகள் சிலரிடமும் பாலசுந்தரம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெற்றோரே என்ஜினீயரை கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளனர்.


எனது பெற்றோருக்கு தண்டனை வாங்கி தரும்வரை
நான் ஓய மாட்டேன் ; சரண்யா

சென்னை சிந்தாதிரிப் பேட்டையை சேர்ந்த என்ஜினீயர் பார்த்தசாரதி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகளின் காதல் திருமணத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் பெண்ணின் பெற்றோரே என்ஜினீயரை கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக என்ஜினீயர் பார்த்தசாரதியின் மனைவி சரண்யா,

’’நான் பார்த்தசாரதியை காதலித்தது தொடக்கத்தில் இருந்தே எனது பெற்றோருக்கு பிடிக்க வில்லை. எங்களது காதல் விவகாரம் தெரிய வந்ததும் எனது தந்தை நரசிம்மன் என்னை கழுத்தை நெரித்து கொலை செய்வதற்கு முயற்சி செய்தார். ஆனால் இந்த அளவுக்கு கொலை வெறியுடன் அவர் நடந்து கொள்வார் என்று நான் கனவில் கூடநினைக்க வில்லை.

பெற்ற மகள் விதவையாகி விடுவாளே என்று கூட நினைக்காமல் கூலிப் படையை ஏவி எனது கணவரை கொன்றுள்ளார். என்னை பெற்றார்களா? அல்லது வெளியில் எங்காவது தூக்கி வந்து வளர்த்தார்களா? என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

எங்களது வீட்டை பொறுத்த வரை எனது தாயாரின் ஆதிக்கம் தான் அதிகம். அவருக்கு தெரியாமல் எந்த காரியத்தையும் எனது தந்தை செய்யமாட்டார். எனது தாயாரின் தூண்டுதலின் பேரிலேயே தந்தை செயல்பட்டிருக்க வேண்டும். எனவே கணவரின் கொலை வழக்கில் எனது தாயாரையும் சேர்க்க வேண்டும். தவறு செய்வதை விட தவறு செய்ய தூண்டுவது தான் பெரிய குற்றமாகும்.

கூலிப்படையினருக்கு 5 லட்ச ரூபாய் பணம் கொடுத்துள்ளனர். நிச்சயம் எனது தாய்க்கு தெரியாமல் இந்த பணத்தை எனது தந்தை கொடுத்திருக்க முடியாது. தற்போது போலீஸ் பிடியில் இருக்கும் எனது தந்தை சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் என்னையும், எனது மாமனாரையும் (பார்த்த சாரதியின் தந்தை) கொலை செய்யக் கூட துணியலாம். அவரால் எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

எனது தந்தை குடிநீர் வாரியத்தில் என்ஜினீயர். தாயார் ஆசிரியை. இருவரும் மாதம் 30 ஆயிரம் ரூபாய் அளவுக்கு தான் சம்பளம் வாங்கி வந்தனர். ஆனால் இன்று சென்னையில் மட்டும் 5 வீடுகள் உள்ளன.

சொந்த ஊரான அரக்கோணத்திலும் சொத்துக்கள் இருக்கிறது. இருவரும் வாங்கிய சம்பளத்தை மட்டும் வைத்து இதையெல்லாம் சம்பாதித்து இருக்க முடியாது. தவறான வழியில்தான் இந்த இந்த சொத்துக்களை எனது தந்தை சம்பாதித்துள்ளார். அளவுக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக ஏற்கனவே அவருக்கு ஒருமுறை பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் அப்போது அவர் தப்பி விட்டார்.

தவறான வழியில் சேர்த்த பணத்தை வைத்துதான் எனது கணவரை தீர்த்துக் கட்டி உள்ளனர். எனவே அவர்களது சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும். எனது கணவர் வீட்டுக்கு ஒரே மகன். எனது மாமனார் அவரைத்தான் நம்பி இருந்தார். இனி எனது கணவரின் ஸ்தானத்தில் இருந்து அவரை பார்த்துக் கொள்வது எனது கடமை. இன்னும் ஓராண்டு மருத்துவ படிப்பை முடித்த பின்னர் ஐ.ஏ.எஸ். படிக்க விரும்புகிறேன். நான் கலெக்டராக வேண்டும் என்பது எனது கணவரின் ஆசை.

கணவரின் குடும்பத்தினர் என்னை அவர்கள் வீட்டு பிள்ளை போல் பார்த்துக் கொள்கிறார்கள். எனது கணவர் காணாமல் போன அன்று சிந்தாதிரிப் பேட்டை போலீஸ் நிலையத்தில் நான் புகார் செய்தேன். அதில் எனது பெற்றோர்தான் கணவரை கடத்திருக்க வேண்டும் என்று கூறி இருந்தேன். ஆனால் போலீசார் சரியாக விசாரணை நடத்தவில்லை. நான் புகார் கொடுத்த உடனேயே எனது தந்தையை பிடித்து விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்து இருந்தால் ஒருவேளை எனது கணவரை காப்பாற்றி இருக்கலாம்.

என் கணவருக்கு கெட்ட பழக்கங்கள் ஏதும் உண்டா? வேறு ஏதேனும் அவருக்கு தொடர்புகள் உண்டா என்பது பற்றியே போலீசார் என்னிடம் விசாரித்தனர். நான் கூறிய எதையும் அவர்கள் கேட்கவில்லை. எனது கணவரின் கொலை வழக்கில் எனது பெற்றோருக்கு தண்டனை வாங்கி தரும்வரை நான் ஓய மாட்டேன்’’ என்று கூறியுள்ளார்.

16 வருடப் பகையின் கதை.சிவசங்கரன் Vsதயாநிதி மாறன்!

சிக்கவைத்த சிவசங்கரன்... தவிக்கும் தயாநிதி மாறன்!

16 வருடப் பகையின் கதை

சி.பி.ஐ. துருப்புச் சீட்டுக்களில் ஒருவராக மாறி, இன்று தயாநிதி மாறனின் பதவிக்கு வேட்டு வைக்கும் மனிதராகி இருக்கிறார், ஏர்செல் சிவசங்கரன். ஒரு காலத்தில் கருணாநிதி, முரசொலி மாறன்... இருவரின் செல்லப்பிள்ளை. இன்று தயாநிதி மாறனுக்கு கடுமையான எதிரி!

'கடந்த 16 ஆண்டு காலப் பகையின் கதை’ என்று விவரம் அறிந்த வட்டாரங்களால் சொல்லப்படும் கரன்ஸி ஆட்டத்தைப் பற்றிய தகவல்கள் இங்கே...!

'என்னுடைய ஏர்செல் கம்பெனியை மலேசியாவின் மேக்சிஸ் குழுமத்துக்கு விற்கச் சொல்லி தயாநிதி மாறன் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்!’ என்று சிவசங்கரன் சி.பி.ஐ-யிடம் புகார் சொன்னதாகத் தகவல் வெளியானது. மாறன் இந்தக் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்து, ''சிவசங்கரன் மில்லியனர் இல்லை, அவர் ஒரு மல்டி பில்லியனர். அவரை யாரும் மிரட்ட முடியாது. அப்படியே மிரட்டப்பட்டு இருந்தாலும் அவர் நீதிமன்றத்துக்கு அப்போதே சென்று இருக்கலாம்'' என்று பதில் கூறி இருந்தார். ஆனாலும் இந்த சர்ச்சை அடங்குவதாக இல்லை!

யார் இந்த சிவசங்கரன்?

சென்னையில் வசிக்கும் 54 வயதாகும் சிவசங்கரன், திருவண்ணா மலைக்காரர். பி.இ. (மெக்கானிக்கல்), எம்.பி.ஏ. (ஹார்வர்டு பல்கலைக் கழகம்) படித்தவர். ஸ்டெர்லிங் குரூப் மற்றும் சிவா வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று ஆரம்பித்து, பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர். பின்லாந்து நாட்டில் காற்றாலை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்று கடந்த 30 வருடங்களில் பல்வேறு பிசினஸ்களில் ஈடுபட்டு வந்தாலும், உச்சகட்ட பெரிய டீல் என்றால், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனியிடம் 4,860 கோடிக்கு ஏர்செல் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களை விற்று லாபம் பார்த்தது. பிறகு, நார்வே நாட்டில் ஷிப்பிங் கம்பெனி, மற்றொரு நாட்டில் மினரல் வாட்டர் பிசினஸிலும் இறங்கினார். மகாராஷ்டிர மாநிலத்தில் ரிசார்ட் பிசினஸ், சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்திலும், தனது பணத்தை முதலீடு செய்தார். லேட்டஸ்ட்டாக, வெளிநாட்டில் படிப்பு முடித்துத் திரும்பிய தனது மகனை ஷிப்பிங் பிசினஸைக் கவனிக்கும்படி பணித்திருக்கிறார்.

கம்ப்யூட்டர் உலகில் நுழைகிறார்!

அது 1983-ம் ஆண்டு. 'கம்ப்யூட்டர்’ என்ற வார்த் தையே பலரை மிரள வைக்கும். அது எப்படி இருக்கும் என்றுகூட அப்போது பலருக்குத் தெரியாது. இனி உலகத்தை இதுதான் ஆட்சி செய்யப் போகிறது என்று மற்ற அத்தனை பேரையும் முந்திக்கொண்டு இனம் கண்டுகொண்ட சிவசங்கரன், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜின் அப்பா நடத்திவந்த ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தை சகாயமான விலைக்கு வாங்கி, அதற்கு ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர்ஸ் என்று புதிய பெயர் சூட்டினார். அந்தக் காலகட்டத்தில், கம்ப்யூட்டர் என்றாலே லட்சத்தில் விலை சொன் னார்கள். இவர் வெளிநாடுகளில் இருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, அதைவைத்து இங்கே கம்ப்யூட்டர் உருவாக்கி, ஒவ்வொன்றையும் சுமார் 33,000 என்று விற்பனை செய்தார். தொலைநோக்குப் பார்வை, கடுமையான உழைப்பு, தொழில்நுட்ப மூளை, வியாபார தகிடுதத்தங்கள் என்று அனைத்தையும் சரிவிகிதத்தில் பயன்படுத்தி, ஒரு சில ஆண்டுகளிலேயே மற்ற நிறுவனங்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர் நிறுவனத்தை வளர்த்தார். அதன் பிறகு சென்னை டெலிபோன்ஸ் 'எல்லோ பேஜ்’ புத்தகத்தை பிரின்ட் பண்ணும் டெண்டரைக் கைப்பற்றினார். கம்ப்யூட் டரை அடுத்து இன்டர்நெட் அறிமுகமானபோது... 'வந்துவிட்டது, அடுத்த புரட்சி’ என்பதை உணர்ந்து கொண்ட சிவசங்கரன், 'டிஷ்நெட் டிஎஸ்எல்.’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து ரயில்வே ஸ்டேஷன்களில் 'பாரீஸ்தா’ ரெஸ்டாரெண்டுகளை ஆரம்பித்தார். இன்னொரு பக்கத்தில் பிட்னெஸ் சென்டர்களும் நடத்தினார். செல்போன் அறிமுகமானதும், அதன் வீச்சு பலமாக இருக்கும் என்பதை எல்லோரையும்விட மிகமிக முன்னதாகவே மோப்பம் பிடித்த சிவசங்கரன், ஏர்செல் நிறுவனத்தை தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு துவக்கினார். வேகமாக வளர்ச்சியடைய ஏர்செல் என்ற ஒரு குதிரை போதாது என்பதை உணர்ந்த சிவசங்கரன், 210 கோடி கொடுத்து 'ஆர்பிஜி செல்லுலார்’ என்ற இன்னொரு செல்போன் நிறுவனத்தையும் வாங்கினார்.

சிவசங்கரனின் பாலிசி!

'வியாபாரத்தில் சென்டிமென்ட் பார்க்கக்கூடாது’ என்பது சிவசங்கரனின் தாரக மந்திரம். தான் ஆரம்பித்த டிஷ்நெட் நிறுவனம், எதிர்பார்த்த வளர்ச்சி அடையவில்லை என்றதும், சற்றும் தயங்காமல் 270 கோடிக்கு விற்றுவிட்டார். கோடிகளில் புரண்டாலும்... அவரின் எண்ண ஓட்டங்கள் எப்போதும் எளிமையானதுதான். தன் சகாக்களிடம் பேசும்போது விஷயத்தை எளிமையாக புரியவைக்க அவர் பல்வேறு உதாரணங்கள் சொல்வதுண்டு. ''என்னோட மனைவி, பிள்ளைகளைத் தவிர நான் போட்டிருக்கும் சட்டையைக் கூட விற்பேன்!'' என்று அடிக்கடி சொல்வார்.

''சரவணபவனுக்குப் போற எல்லோருமே இட்லியைத்தான் வாங்குறாங்க. சட்னி, சாம்பாரை வாங்குவதில்லை. ஆனால் சட்னியும் சாம்பாரும் கொடுக்கவில்லை என்றால் இட்லி விற்பனை ஆகாது. அதுபோல, நம்மிடம் கம்ப்யூட்டர் வாங்க வருபவர்களுக்கு நாம் பிரின்டரையும் சேர்த்தே கொடுக்க வேண்டும். அப்போதுதான் கம்ப்யூட்டர் விற்பனை அதிகமாகும்!'' என்பது அவரது பிரபலமான உதாரணம். ''சிவசங்கரன் தொலைநோக்குப் பார்வை கொண்ட கலர்ஃபுல் தொழில் அதிபர்!'' என்று சொல்பவர்களும் உண்டு. ''ஒரு தொழில் இல்லாமல் பல்வேறு தொழில்களை ஆரம்பித்து நடத்தும் அவரை தொடர் தொழில் தொழிலதிபர்!'' என்றும் சொல்கிறார்கள். கம்ப்யூட்டரின் பயன்பாடு மெள்ளத் தொடங்க ஆரம்பித்ததுமே எழுத்தாளர் சுஜாதாவை தனக்கு ஆலோசகராக வைத்துக் கொண்டவர் சிவசங்கரன். அப்போது உடன்வேலை பார்க்க வந்தவர்தான் கனிமொழியின் கணவர் அரவிந்தன்!

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் சிறு கட்டடத் தில் அலுவலகம் வைத்திருந்தவர், 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் தேனாம்பேட்டை பகுதியில் 24 கோடி களைக் கொடுத்து, ஹரிகந்த் டவர் என்கிற கட்டத்தை விலைக்கு வாங்கி 'ஸ்டெர்லிங் டவர்’ என்று பெயர் மாற்றி னார். அதில் இருந்து அவரை 'ஸ்டெர்லிங்’ சிவசங்கரன் என்ற அடைமொழியுடன்தான் அழைப்பார்கள். சிவசங்கரனைப் பற்றி அவரது பிசினஸ் நண்பர்களிடம் கேட்டபோது, ''கடந்த 30 வருடங்களில் அவர் சுமார் 25 தொழில்களில் ஈடுபட்டு இருந்தார். எந்த பிசினஸையும் அவர் தொடர்ந்து நடத்தியது இல்லை. ஒரு தொழிலைத் துவக்குவார்; அதை நன்றாக வளர்ப்பார்; ஒரு லெவலுக்கு வந்ததும், அதைப் பல மடங்கு லாபம் வைத்து வேறு யாரிடமாவது விற்றுவிட்டு வேறு பிசினஸுக்குத் தாவிவிடுவார். உதாரணத்துக்கு, ரயில்வே ஸ்டேஷன்களில் காபி ஷாப்-களை பிரமாண்டமாகத் துவங்கி, பிறகு அதை அடுத்தவருக்குக் கைமாற்றிவிட்டார். இதுதான் சிவசங்கரனின் ஸ்டைல். ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு அடிக்கடி மாறியதால், பலத்தரப்பட்ட பிசினஸ் பிரமுகர்களுடன் மோதல், விரோதம் அதிகமானது. இதுவே அவருக்கு நிறைய தொழில்முறை எதிரிகளை உருவாக்கிவிட்டது!’' என்று சொல்கிறார்கள்.

கருணாநிதி, முரசொலி மாறன் அறிமுகம்!

1989-ம் ஆண்டில், அப்போதைய முதல்வர் கருணாநிதி, டிட்கோ நிறுவனம் சார்பாக பிரபல தொழில திபர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். திடீரென ஒரு பிரமுகர் எழுந்து, 'நான் ஒரு தொழில் அதிபர். பெயர் சிவசங்கரன். டிட்கோவில் போய்க் கடன் கேட்டால், முதலியாரா? ரெட்டியாரா? என்ன சாதி என்றுதான் கேட்கிறார்கள். தொழிற்சாலை துவங்குவது பற்றிக் கேட்காமல், இப்படிக் கேட்பது சரியா?’ என்று துணிச்சலாகக் கேட்க... முதல்வர் ஆச்சர்யத்தோடு திரும்பிப் பார்த்தார். 'யாருப்பா நீ? உனக்கு என்ன உதவி வேணும்?’ என்று கேட்டு விசாரித்து, ஒன்றிரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வழிவகை செய்தார். சென்னை டெலிபோன்ஸ் வெளியிடும் எல்லோ பேஜஸ் டெண்டரை பயங்கரப் போட்டியில் குதித்து வாங்கினார். சென்னையைச் சேர்ந்த பிசினஸ் நிருபர்கள் இதன் பிறகுதான், சிவசங்கரனை நெருக்கமாகக் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

தமிழகம் முழுக்க சிவசங்கரன் பிரபலம் ஆனது, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பங்குகளை வாங்கியபோதுதான். நாடார் சமூகத்தினர் மத்தியில் பலத்த கொந்தளிப்பைக் கிளப்பியது. 'முரசொலி மாறனின் நண்பரான சிவசங்கரன்தான் இதை வாங்கி இருக்கிறார்’ என்று சொல்லி தி.மு.க-வுக்கு எதிரான பிரச்னையாக மாற்றினார்கள். மெர்க்கன்டைல் வங்கி மீட்புக் குழுவினர் ஜெயலலிதாவைப் பார்த்து, அவரது ஆதரவைக் கோரினார். அதன்பிறகு, கணிசமான பங்குகளை மட்டும் நாடார் சமூகத்தவர்களுக்கு கொடுத்தார்.

1995-ம் ஆண்டு தமிழகத்தில் தொலைத் தொடர்புத் துறை லைசென்ஸ் பெற சிவசங்கரன் முயற்சித்தார். 97-98-ல் சென்னையைத் தலைமையகமாகச் கொண்டு ஏர்செல் தொடங்கினார். அப்போது முரசொலி மாறனுக்கும் இவருக்குமான நட்பு அதிகமானது. ஆர்.பி.ஜி. செல் நிறுவனத்தின் பங்குகளை சிவசங்கரன் வாங்க முரசொலி மாறன் உதவி செய்ததாகவும் சொல் கிறார்கள். இந்த நட்பு முரசொலி மாறன் மறைவுக்குப் பிறகு தொடரவில்லை.

சிவசங்கரனை விரட்டிய சம்பவம்!

2006-ம் வருடம் ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில், ஈரோட்டைச் சேர்ந்த ஏ.என்.சண்முகம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் (பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கின் எண் சி.சி. 191/2006) கொடுத்தார். அதில், ''சென்னை அய்யப்பன்தாங்கலில் எனக்கு 2.43 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வீடுகளைக் கட்டி விற்கும் திட்டத்தைச் செயல் படுத்தலாம் என்று ஸ்டெர்லிங் நிறுவனத் தலைவர் சிவசங்கரன் என்னிடம் கேட்டார். அவர் பேச்சை நம்பி, 1.05 ஏக்கர் நிலத்தை மட்டும் பவர் எழுதித் தந்தேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகுதான் தெரியவந்தது, அந்த நிலத்தை நான் சிவசங்கரனின் நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டதாக போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப் பதிவு செய்துவிட்டார்!'' என்று சொல்லப்பட்டது.

இந்தப் புகாரை பதிவு செய்த போலீஸார், ஸ்டெர்லிங் நிறுவன அலுவலர்கள் ஆறு பேர்களை கைது செய்தனர். நிறுவனத் தலைவர் சிவசங்கரனை விசாரணைக்காக போலீஸ் தேட... சிவசங்கரன் எங்கே போனார் என்று தெரியவில்லை. தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் படியேறினார் சிவசங்கரன். ஆனால், அங்கே இவரது கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. ''இந்த வழக்கைப் பின்னணியில் இருந்து போட வைத்ததே தயாநிதி மாறன்தான்!'' என்று சிவசங்கரன் ஆட்கள் செய்தியைக் கிளப்பினார்கள்.

இரண்டு தனி மனிதர்களுக்கு மத்தியிலான மோதலாகத் தொடங்கி இன்று இந்திய அரசியலையே ஆட்டிப் படைக்க ஆரம்பித்துள்ளது. சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யும் போதுதான் இந்தப் பகை யாரையெல்லாம் காவு வாங்கப் போகிறது என்பதும் தெரியும்!

- ஆர்.பி., ஆரோக்கியவேல்

ராசாவை கை விட்டது திமுக: நிர்வாகிகள், தொண்டர்கள் குமுறல்

கரூர்: திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவை திமுக கைவிட்டுவிட்டதாக திமுக தொண்டர்கள் மத்தியில் குமுறல் எழுந்துள்ளது.

சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் கடந்த 10-ம் தேதி நடந்தது.

2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ. ராசா ஊழல் செய்துள்ளார் என்றும், அதற்கான ஆதராம் இருப்பதாகக் கூறி சிபிஐ போலீசார் அவரை கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.

இதே போன்று திமுகவைச் சேர்ந்த எம்.பியும், முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழிக்கும் இந்த விவகாரத்தில் தொடர்புள்ளதாகக் கூறி அவரையும், கலைஞர் தொலைக்காட்சி இயக்குனர் சரத்குமார் ரெட்டியையும் சி.பி.ஐ. கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளது.

இந்த நிலையில் திமுகவின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் கடந்த 10-ம் தேதி சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. நடவடிக்கையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக எம்.பி. கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குனர் சரத்குமார் ஆகியோரை சி.பி.ஐ. குற்றவாளிகளாக சேர்த்து இருப்பது முற்றிலும் தவறானது என்றும், அதை கண்டிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஆனால் இந்த தீர்மானத்தில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசாவின் பெயர் இடம் பெறவில்லை.

இது குறித்து திமுக மூத்த நிர்வாகிகளும், திமுக தொண்டர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளளதாக கூறப்படுகின்றது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முதல் ஆளாக கைது செய்யப்பட்டவர் ராசாதான். அப்போது ராசாவுக்காக திமுக தீவிரமாக குரல் கொடுத்து வந்தது. ஆனால் தற்போது கருணாநிதியின் மகள் கனிமொழிக்காக மட்டுமே திமுக தலைமை பெரும் கவலைப்படுவதாக திமுகவினர் மத்தியில் முனுமுனுப்பும், குமுறலும் வெடித்துள்ளது.

English summary
DMK has passed a resolution in the party's high level meeting condemning CBI's arrest of Kanimozhi and Sharad Kumar. It has forgotten to leave A. Raja's name and abandons him.

மேலும் சில புள்ளிகள் கைது?ஸ்பெக்ட்ரம் வழக்கில் விரைவில் 3வது குற்றப்பத்திரிக்கை

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிபிஐ விரைவில் 2வது துணைக் குற்றப்பத்திரிக்கையை (இதுவரை 2 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே இது 3வது குற்றப்பத்திரிக்கையாகும்) தாக்கல் செய்யவுள்ளது. இதில் மேலும் சில முக்கியப் புள்ளிகளை அது சேர்க்கவுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் சில முக்கிய நிறுவனங்களின் தலைவர்களின் பெயர்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சிபிஐ தரப்பில் கூறுகையில், இரண்டு முக்கிய மிகப் பெரிய நிறுவனங்களின் அதிபர்களின் பெயர்கள் இந்த குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறும் வாய்ப்புள்ளது. இந்த மாத இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் இந்த துணைக் குற்றப்பத்திரிக்க்கையை சிபிஐ தாக்கல் செய்யும்.

சில முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு எதிரான ஆதாரங்களை நாங்கள் திரட்டியுள்ளோம். இவர்களிடம் மே மாதத்தில் விசாரணை நடந்தது.

மேலும் புதிய குற்றப்பத்திரிக்கையில் மேலும் பல நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெறவுள்ளன என்றார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் நேரடி மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது. ஏப்ரல் 25ம் தேதி 2வது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

முதல் குற்றப்பத்திரிக்கையில் ராசாவின் பெயர் இடம் பெற்றிருந்தது. 2வது குற்றப்பத்திரிக்கையில், கனிமொழி, சரத்குமார் ரெட்டி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஆசியாவிலேயே மிகப் பெரிய சிறையான திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது 3வது குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தயார் செய்துள்ளது. இதில் சிக்கப் போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

English summary
The CBI has been preparing to file the second supplementary charge (third one in the row) sheet in the 2G spectrum scam and likely to name some more 'big people' including top bosses of different firms whose names have figured in the ongoing probe. The CBI sources today said at least two top bosses of different firms are likely to be named in the supplementary charge sheet, which will be filed by end of this month or first week of July. The official added that several other private firms are also likely to be named in the supplementary charge sheet. The probe agency had on April 2 filed the first charge sheet in the scam while the supplementary charge sheet was filed on April 25.

ஞாயிறு, 12 ஜூன், 2011

Ex.CM குமாரசாமி- குட்டி ராதிகா :குழந்தை!



கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி, கன்னட நடிகை குட்டி ராதிகாவுடன் சுற்றுவதாக ஏற்கனவே தகவல் வந்தன. குட்டி ராதிகா இயற்கை, வர்ணஜாலம் உள்பட சில தமிழ்ப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்போது இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், 1 1/2 வயதில் ஷமிகா என்ற பெண் குழந்தை இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. குமாரசாமி நடிகை ராதிகா மற்றும் குழந்தையுடன் இருக்கும் படமும் வெளியிடப் பட்டுள்ளது.

இவர்கள் இருவருக்கும் உள்ள தொடர்பு குறித்து குமாரசாமியிடம் கேட்ட போது அதை மறுக்க வில்லை. இது எனது தனிப் பட்ட விஷயம் இது பற்றி யாரும் கேட்க வேண்டாம் என்று கூறினார்.


எனவே அவர் ராதிகாவை திருமணம் செய்து கொண்டது ஏற்கனவே உருதியானது. குமாரசாமிக்கும், ராதிகாவுக்கும் 2004-ம் ஆண்டிலிருந்தே தொடர்பு இருந்துள்ளது. அப்போது குமாரசாமி எம்.எல்.ஏ.வாக இருந்தார். குமாரசாமி அரசியலுக்கு வருவதற்கு முன்பே சினிமா உலகுடன் தொடர்பு உண்டு.

அவரது சொந்த ஊரான ஹசனில் சொந்தமாக சினிமா தியேட்டர் வைத்துள்ளார். படங்களை வினியோகம் செய்ததுடன், ஒரு படத்தையும் அவர் தயாரித்து உள்ளார். அப்போது தான் ராதிகாவுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது.

குமாரசாமிக்கு ஏற்கனவே அனிதா என்ற மனைவி இருக்கிறார். ஆனால் குமாரசாமி ராதிகாவை திருமணம் செய்து கொண்டதற்கு அனிதா தரப்பிலோ? தந்தை தேவே கவுடா தரப்பிலோ பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியதாக தெரிய வில்லை.

குமாரசாமிக்கு நடிகை ராதிகா 2-வது மனைவி ஆகி இருப்பது போல, ராதிகாவுக்கு குமாரசாமி 2-வது கணவர் ஆவார். ராதிகா ஏற்கனவே ரத்தன்குமார் என்பவரை திருமணம் செய்திருந்தார். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே இந்த திருமணம் நடந்தது.

2002-ம் ஆண்டு ரத்தன்குமார் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலையின் பின்னனிகுறித்து காரணம் இதுவரை தெரியவில்லை. அதன் பிறகுதான் குமாரசாமிக்கும், ராதிகாவுக்கும் அதிக நெருக்கம் ஏற்பட்டது. ராதிகா 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் புகழின் உச்சகட்டத்தில் இருந்தபோது 2005-ம் ஆண்டு திடீரென சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ராதிகா 1 1/2 வருடத்துக்கு முன்பு குழந்தை பெற்றபோது இந்த விஷயம் வெளியே கசிய ஆரம்பித்தது. அப்போது ராதிகாவிடம் உங்கள் கணவர் யார் என்று கேட்டதற்கு “ஒரு அரசியல் வாதி” என்று மட்டும் சொன்னார். பெயரை சொல்ல மறுத்துவிட்டார். இப்போது அது குமாரசாமி என்பது உறுதியாகி உள்ளது.

Infosys 1.3 லட்சம் ஊழியர்களுடன், 6 பில்லியன் டாலர் சொத்து.நாராயணமூர்த்தி

டெல்லி: இன்போசிஸ் நிறுவனம் பி1 விசா மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்க கோர்ட் கூறியிருப்பது வருத்தம் தருவதாகவும், இந்தப் புகார் தனது மனதை பாதித்துள்ளதாகவும் இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.

பெங்களூரில் இன்போசிஸ் நிறுவனத்தின் 30வது வருடாந்திர பங்குதாரர்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு நாராயணமூர்த்தி பேசினார். இதுதான் அவர் இன்போசிஸ் தலைவராக கலந்து கொள்ளும் கடைசிக் கூட்டம் என்பதால் அவரது பேச்சு உருக்கமாக இருந்தது.

நாராயணமூர்த்தி பேசுகையில், இன்போசிஸ் போர்டை விட்டு நான் விலகும் இந்த நேரத்தில், இன்போசிஸ் நிறுவனம் மீது அமெரிக்க கோர்ட் பி1 விசா மோசடிக் குற்றச்சாட்டை சுமத்தியிருப்பது வருத்தம் தருகிறது, வேதனை தருகிறது. இந்த விஷயத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இன்போசிஸ் மீதான களங்கம் துடைக்கப்படும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.

கடந்த மே மாதம் அமெரிக்க கோர்ட் ஒன்று இன்போசிஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் பிறப்பித்தது. அதில், பி1 வர்த்தக விசாவைப் பெற்றது தொடர்பான ஆவணங்கள், பதிவேடுகள் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்குமாறு அது உத்தரவிட்டிருந்தது.

இன்போசிஸ் நிறுவன முன்னாள் ஊழியர் ஜேக் பால்மர் என்பவர் இதுதொடர்பான வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

நாராயணமூர்த்தி தொடர்ந்து பேசுகையில், எனது கடைசி உரையை நிகழ்த்துவது எனக்கு எளிதாக இல்லை. கடந்த கால நினைவுகள் எனது மனதில் நிழலாடுகிறது.

இன்போசிஸ் தனது 30வது ஆண்டில் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. புதிய வாய்ப்புகளில் இன்போசிஸ் புக வேண்டிய நேரம் இது.

ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும், எனது வாழ்க்கை நல்ல நம்பிக்கையூட்டும் பாடமாக அமைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

வரும் ஆண்டுகளில் நமது வாடிக்கையாளர், பணியாளர், முதலீட்டாளர் உறவு மேலும் வலுப்பட வேண்டும். ஒரு டெக்னாலஜி நிறுவனமாக உருவெடுத்து இன்று வர்த்தக தீர்வுக்கான நிறுவனமாக இந்போசிஸ் மாறியிருக்கிறது என்றார் அவர்.

ஆகஸ்ட் 20ம் தேதியுடன் நாராயணமூ்ர்த்தி இன்போசிஸ் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1981ம் ஆண்டு வெறும் பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் நாராயணமூர்த்தி உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து இன்போசிஸ் சாம்ராஜ்யத்தை எளிய முறையில் தொடங்கினர். இன்று இந்தியாவின் 2வது மிகப் பெரிய ஐடி நிறுவனமாக இன்போசிஸ் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

இன்று உலகெங்கும் 1.3 லட்சம் ஊழியர்களுடன், 6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் கூடியதாக இன்போசிஸ் கிளை பரப்பி நிற்கிறது. நாஸ்டாக்கிலும் இது பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும்.

சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக கே.வி.காமத் நியமிக்கப்பட்டார். நாராயணமூர்த்திக்குப் பிறகு காமத்தான் இன்போசிஸை வழி நடத்திச் செல்லப் போகிறார்.

புதிய தலைமைச் செயலதிகாரியாக ஷிபுலால் நியமிக்கப்பட்டுள்ளார். இணைத் தலைவராக எஸ்.கோபாலகிருஷ்ணன் செயல்படுவார்.

English summary
Infosys founder NR Narayana Murthy on Saturday said he was hurt by B1 visa fraud charge inflicted by a US court on the company. Murthy was addressing the shareholders of Infosys at its 30th AGM in Bangalore, which was Murthy’s last as the chairman of the board. “As I leave the board, I feel sad that Infosys has been issued a subpoena by a grand jury in the US on the B1 issue. The issue will be decided on its merits in due course, ”Murthy said.

கால்வாயில் கிடந்த 9 பெண் சிசுக்களின் உடல்கள்!மகாராஷ்டிரம்


மும்பை: மகாராஷ்டிரத்தில் பீட் மாவட்டத்தில் ஒரு கால்வாயில் 9 பெண் சிசுக்களின் உடல்கள் கிடந்தன.

ஆனால், 2 சிசுக்களின் உடல்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. இந்த உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்தபோது அவை 4 மாதம், 5 மாதமே ஆன சிசுக்கள் என்று தெரியவந்துள்ளது.

வயிற்றில் வளர்வது பெண் குழந்தை என்று தெரிந்தவுடன், சிசுவை அபார்ஷன் செய்து, உடல்களை கால்வாயில் போட்டுள்ளனர். இந்த பாதக செயலை செய்தது ஏதாவது மருத்துவமனையா அல்லது தனி நபர்கள் யாருமா என்று தெரியவில்லை.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரத்திலேயே மிகக் குறைவான பெண் குழந்தைகள் உள்ள மாவட்டம் பீட் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு 1000 ஆண் குழந்தைகளுக்கு 801 பெண் குழந்தைகளே உள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை 1000 ஆண் குழந்தைகளுக்கு 883 பெண் குழந்தைகள் என்ற நிலை உள்ளது.

இந்த மாவட்டத்தில் ஸ்கேன் செய்து வளரும் சிசுவின் பாலினத்தை அறிந்து அது பெண் குழந்தையாக இருந்தால் அதை அபார்ஷன் செய்வது மிக அதிகமாக உள்ளது.

English summary
In yet another shocking case of female foeticide, nine foetuses have been found in a drain in Maharashtra's Beed district. But the district administration is trying to down play the situation and has been claiming that only two foetuses have been found, not nine as being claimed by the media.

கார்பரேட் சாமியார் ராம் தேவ் உண்ணாவிரதத்தை நிறுத்தினார் பசி தாங்க மாட்டாரம்

ஊழலுக்கு எதிராக தனது ஹரித்வார் ஆசிரமத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வந்த பாபா ராம்தேவ் இன்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

ஊழலுக்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவ் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். அதேபோன்று கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

அவரது உடல் நிலை நாளுக்கு நாள் மோசமானது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அவரை டேராடூனில் உள்ள மருத்துவமனையில் ஒன்றில் வலுக்கட்டாயமாக சேர்த்தனர்.

அவரை உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பலரும் கேட்டுக் கொண்டார். மருத்துவர்கள் அவருக்கு வலுக்கட்டாயமாக உணவு கொடுக்குமாறு வலியுறுத்தினர். இந்த நிலையில் வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஆன்மீகவாதி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பாபா ராம்தேவை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் உண்ணாவிரதத்தின் 9-வது நாளான இன்று அவர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக மற்றுமொரு கார்பரேட் சாமியார்  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார். ராம்தேவ், ஜூஸ் குடித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் என்று ரவிசங்கர் மேலும் தெரிவித்தார்.
வ்
English summary
Baba Ramdev has ended his fast unto death against corruption today. Spritual leader Sri Sri Ravishankar has told that, Baba has taken juice in front of some spritual leaders and ended his fast. 

ரீமா சென்: நல்ல நடிகைகளுக்கு இங்கே வாய்ப்பு கிடைக்காது

ஆயிரத்தில் ஒருவன் வெளியான பிறகு ஒரு தமிழ்ப் படத்தில் கூட நடிக்கவில்லை ரீமா சென். காரணம், அவரைத் தேடி எந்தத் தயாரிப்பாளரும், இயக்குநரும் வரவே இல்லை.

இந்தி, தெலுங்கு என எதிலும் போதிய வாய்ப்புகளில்லாத நிலையில், சில மலையாள வாய்ப்புகள் வர, சட்டென்று ஒப்புக் கொண்டார் ரீமா.

இவற்றில் ஒரு படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கிறார். ஷாஜி கைலாஷ் இயக்கும் படம் இது. படத்தின் பெயர் தி கிங் அண்ட் தி கமிஷனர்.

இந்தியில் தயாராகும் சுப்பிரமணியபுரம் ரீமேக்கில் நடிக்க முதலில் ரீமாவைக் கேட்டு வந்தார்கள். பின்னர் அந்த படமே கிணற்றில் போட்ட கல் மாதிரி கம்மென்று கிடக்கிறது.

தமிழ்ப் படங்களில் இனி பார்க்க முடியாதா ரீமாவை? இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டபோது, படு கோபமாக இப்படிச் சொன்னாராம்:

"தமிழில் நல்ல நடிகைகளுக்கு வாய்ப்பு ஏது... இனி நானாக யாரிடமும் வாய்ப்பு கேட்பதாக இல்லை. வரும்போது பார்த்துக் கொள்ளலாம்!"

English summary
Reema Sen, one of the hottest actresses in Tamil is now going to Malayalam industry due to lack of offers in Tamil. 

வாகன விபத்துக்கள்.அலட்சியம் அவசரம் தான் மட்டும் எப்படியாவது முந்த வேண்டும்


சென்னையிலிருந்து திருப்பூர் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் கவிழ்ந்து, தீப்பிடித்து எரிந்ததில் டிரைவர் மற்றும் ஒரே ஒரு பயணியைத் தவிர மீதமிருந்த 23 பேரும் உடல் கருகி அகால மரணமடைந்திருக்கின்றனர். அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோம்.
இந்த விபத்துக்கும் காரணம் முன்னே சென்று கொண்டிருந்த லாரி தான்! வலது ஓர பாதையில் வெகு மெதுவாக ஊர்ந்து செல்லும் லாரிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் வெகு சாதாரணம். பின்னால் வரும் வாகனங்கள் முன்னே செல்ல வேறு வழியின்றி இடது பக்கமாக தாண்டிச் செல்ல வேண்டும். அந்த நேரத்தில் திடீரென லாரி ஓட்டுனரும் இடது பக்கம் திடீரென திருப்புவதால் இந்த மாதிரியான விபத்துகள் ஏற்படத்தான் செய்யும்.
இரண்டு லாரி சுமையை ஒரே லாரியில் ஏற்றி, லாரியின் பின் புறம் விளக்கு எரியாமல் மெல்ல மெல்ல வலது ஓரம், இடது ஓரம், நடு ரோடு என்றெல்லாம் பார்க்காமல் தனது தாத்தா காசில் போட்ட ரோடு என்ற நினைப்பில் செல்லும் லாரிகளின் அலட்சியத்தால் பல விபத்துகள் நிகழ்கின்றன.
இதே போல தேசிய நெடுஞ்சாலைகளாகட்டும், சாதாரண சாலைகளாகட்டும் நாம் ஏற்கனவே முன்னர் ஒரு கட்டுரையில் சுட்டிக் காட்டியபடி, டூ வீலர்களும் இதே போலத் தான்! இடது ஓரமாக மட்டுமே டூ வீலர்கள் ஓட்டப்பட வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும் நடைமுறையில் இடது ஓரத்தைத் தவிர மீதி எல்லா இடங்களிலும் டூ வீலர்கள் ஓட்டப்படுகின்றன. ரோட்டில் போக்குவரத்து கம்மியாகவே இருந்தாலும் கூட டூ வீலர் ஓட்டுபவர்கள் நடு ரோட்டிலோ, வலது பக்க பாதையிலோ தான் ஓட்டுகிறார்கள். கடுமையான சட்டங்கள் தேவை. இப்படி இஷ்டத்துக்கு வாகனம் ஓட்டுபவரின் லைசன்ஸ் முதல் தடவையிலேயே ரத்து செய்யப்படும் என்று சட்டம் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தினால் பிறகு யாராவது அப்படி ஓட்டுவார்களா?!
விபத்தில் இறந்து போன குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நஷ்ட ஈடு…. அத்தோடு முடிந்தது. இதற்கு மேல் அடுத்த தடவை இதே போன்ற விபத்து நேரும் போது புள்ளி விபரத்திற்காக மட்டுமே இந்த விபத்து நினைவு கோரப்படும்!
அலட்சியம்… அலட்சியம்… அலட்சியம்… ஒரு அரசியல் தலைவர் படுகொலை செய்யப்பட்டால் மீண்டும் ஒரு முறை அதே போன்றதொரு கொலை அதே ஸ்டைலில் நடைபெற விடுவார்களா? எத்தனை எத்தனை கோடி செலவழித்து பாதுகாத்துக் கொள்கிறார்கள். ஆனால் இதைப் போன்ற விபத்துகளில் மட்டும் ஏன் அன்றைய பரிதாபத்தோடு மறந்து விடுகிறார்கள்?
எல்லாவற்றிலும் கடுமை காட்டக்கூடியவர் என்று பெயரெடுத்த முதல்வர், உடனடியாக இந்த விஷயத்தில் கடுமையான சட்ட நடைமுறைப்படுத்தலைக் கொண்டு வர வேண்டும்.
கடந்த முறை ஆட்சியிலிருந்து போது 2004-ம் வருடம் ஜூலை மாதம் 15-ம் தேதியை மறக்க முடியுமா? கும்பகோணத்தில் பள்ளிக்கூட தீ விபத்தில் 94 மாணவச் செல்வங்களை பறிகொடுத்தோம். இன்னமும் கூட அந்த விபத்திலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை! அதே கதியில் தான் பல பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன! பாடத்திட்டங்களையெல்லாம் விட அடிப்படை வசதிகள், சுகாதாரமான கழிப்பிடம், சுத்தமான தண்ணீர் போன்றவற்றை அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கட்டாயமாக்க வேண்டும்.

ஜெயலலிதா வீட்டில் குழந்தை தொழிலாளர்களை வைத்துகொண்டு மாநிலத்தையே குழந்தை தொழிலாளர்கள்

ஜெயலலிதாவின் பங்களாக்களில்  முன்பு பல  குழந்தைத் குழந்தை தொழிலாளர்கள் இருந்துள்ளார்கள் அவர் இப்போதும் குழந்தைகளை வீட்டு வேலைக்கு வைத்துள்ளார என்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும் 

குழந்தைத் தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.  இதுகுறித்து குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினச் செய்தியில் அவர் கூறியிருப்பது:  குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிந்து, மேம்படுத்தி அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டியது நமது கடமை.  அறிவும், வலிமையும் பொருந்திய தலைமுறையாக உருவாக வேண்டிய ஆயிரக்கணக்கான குழந்தைகள், கடும் உடல் உழைப்பின் சுமையால் நசுக்கப்படுகின்றனர். இவர்களை உடல் உழைப்பின் நிர்பந்தத்திலிருந்து விடுவித்து, அவர்களுக்கு இயல்பான வளர்ச்சியை உறுதி செய்வது நமது தலையாய கடமை.  அவர்களின் உரிமையை பறிப்பது இயற்கை நியதிக்கும், சமூக நீதிக்கும் புறம்பானது என்பதைக் கருத்தில் கொண்டு, உலகெங்கும் ஜூன் 12-ம் தேதி குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.  இந்த நாளில் நாம் அனைவரும் நம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப உறுதி ஏற்போம். தமிழகத்தை குழந்ததைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தி.மு.க.வின் வழக்கப்படி அவர்களாக ஒரு கட்சியோடு கூட்டணி உறவை முறித்துக்

சென்னை, ஜூன் 11: 2-ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கனிமொழியின் ஜாமீன் மனு தில்லி உயர் நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தி.மு.க.வின் உயர்நிலைச் செயல்திட்டக் குழுவின் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. விலகுவது குறித்து இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் ஒரு மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற கூட்டத்தில், ஜூலை மாதம் பொதுக்குழு கூடும், அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டன.  காங்கிரஸூடனான கூட்டணியில் பாதிப்பு இல்லை என்றும் செய்தியாளர் சந்திப்பின்போது கருணாநிதி கூறினார்.  ஆனால், காங்கிரஸூடனான உறவை முறித்துக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும், சில தயக்கங்களே அதைத் தடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.  கருணாநிதி தயார்: கனிமொழி கைது செய்யப்பட்டது, தேர்தல் தோல்வி உள்பட பல காரணங்களால் காங்கிரஸூடனான உறவை முறித்துக் கொள்ள கருணாநிதி தயாராக இருக்கிறாராம்.ஆனால் தி.மு.க.வின் வழக்கப்படி அவர்களாக ஒரு கட்சியோடு கூட்டணி உறவை முறித்துக் கொள்ளமாட்டார்கள். அதேவேளையில் விலகல் அறிவிப்பை கூட்டணிக் கட்சி அறிவிப்பதற்கான வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டே இருப்பார்கள்.  அதன் அடையாளமாகத்தான் "கூடா நட்பு' என்கிற வார்த்தை கருணாநிதியால் உபயோகிக்கப்பட்டு, அதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இரா.அன்பரசு போன்றோர் எதிர்த்து குரல் கொடுத்ததும். இதுபோன்ற குத்தல் வார்த்தைகள் இன்னும் தொடரும் என்று சொல்லப்படுகிறது. தயங்குவதற்கு காரணம்: கருணாநிதியைப் பொறுத்தவரை கூட்டணியிலிருந்து உடனடியாகக்கூட விலகத் தயாராக இருக்கிறாராம். ஆனால் தி.மு.க. எம்.பிக்கள், முக்கிய நிர்வாகிகள்தான் கூட்டணி முறிவைத் தள்ளிப்போட வைப்பதாகச் சொல்லப்படுகிறது.  மத்திய அரசின் ஆட்சிக் காலம் இன்னும் 3 ஆண்டுகள் இருக்கின்றன. அலைக்கற்றை ஊழல் வழக்கில் தயாநிதி மாறன் பெயரும் அடிபடுவதால் அவர் பதவி விலகினால் அவருடைய பதவியை அடைவதற்கு தி.மு.க. எம்.பி.க்கள் சிலர் ஆசைப்படுவதாகச் சொல்லப்படுகிறது.  இதைப்போல, அமைச்சரவையில் இருந்து விலகினால் அ.தி.மு.க. அரசால் அழகிரி மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு இடமளிக்கக் கூடாது என்றும் ஒரு தரப்பில் கருத்துச் சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகுவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பது மத்திய அமைச்சரான மு.க.அழகிரிதான் என்று கூறப்படுகிறது.  இதுபோன்ற காரணங்களாலே கூட்டணி விலகல் தள்ளிப்போகிறது என்கின்றனர்.  காங்கிரஸின் போக்கில் தி.மு.க.வினர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பது தெளிவாகவேத் தெரிகிறது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மூலம், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்ததற்கு காங்கிரஸ்தான் காரணம் என்று அறிக்கை விடச் செய்ததே தி.மு.க. தலைமைதான் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  "கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற தி.மு.க.விடம் இருந்து பணம் பெற்றபோதும், காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்காக தி.மு.க. பெரும் பணம் செலவழித்தபோதும்  இப்போது கசப்பது ஏன்?  வைகோவைத் தோற்கடித்தாக வேண்டும் என்பதைத் தென் மண்டல பொறுப்பாளர்  மு.க.அழகிரி ஒரு கெளரவப் பிரச்னையாக எடுத்துக் கொண்டு செலவழித்திருக்காவிட்டால்,  விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாக்கூர் வெற்றி பெற்றிருக்க முடியுமா?  இப்போது அவர்களெல்லாம் யோக்கியர் போலவும் நாம் எல்லாம் ஊழல் பேர்வழிகள் போலவும் பேசுகிறார்களே, இது என்ன நாடகம்? நாம் காங்கிரûஸத் தோலுரித்து காட்ட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் பல மூத்த தி.மு.க. தலைவர்களே வலியுறுத்தியதாகத் தெரிகிறது.கனிமொழி ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார். இந்த முடிவுக்காகத்தான் தி.மு.க. தரப்பில் காத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிட்டால் காங்கிரஸூடனான உறவை தி.மு.க. முறித்துக் கொள்ளும். மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் முடிவை எடுக்கக்கூடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

சி.பி.ஐ.,க்கு விலக்கு,தகவல் உரிமை சட்டத்திலிருந்து.பொதுமக்கள் அதிர்ச்சி

புதுடில்லி: தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து, சி.பி.ஐ.,க்கு விலக்கு அளிப்பது என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, சி.பி.ஐ.,யில் இனி, விசாரணையின் வெளிப்படைத்தன்மை தடைபடும் என்பதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளையும், மிகப்பெரிய அளவிலான ஊழல், மோசடி தொடர்பான வழக்குகளையும், சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் விசாரணையில் இருக்கும் போது, அது தொடர்பான விவரங்களை அளிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு, பலரும் கோரிக்கை விடுக்கின்றனர். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியும் தகவல்கள் கேட்கின்றனர். வழக்குகள் குறித்த தகவல்களை அளிப்பது, சம்பந்தப்பட்ட வழக்குகளின் விசாரணையை பாதிக்கும் என்பதால், இந்த சட்டத்திலிருந்து, தங்களுக்கு விலக்கு அளிக்கும்படி, மத்திய அரசிடம் சி.பி.ஐ., சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து, சி.பி.ஐ.,க்கு விலக்கு அளிப்பது என, முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அமைச்சரவையில் கருத்து வேறுபாடுகள் எழுந்தபோதும், "சி.பி.ஐ.,யின் இந்த கோரிக்கை, நியாயமானது தான்' என, மத்திய அமைச்சரவை, ஒருமனதாக பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சி.பி.ஐ., செய்தி தொடர்பாளர் தாரிணி மிஸ்ரா கூறியதாவது: தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து சி.பி.ஐ.,க்கு விலக்கு அளிப்பது குறித்து, மத்திய அமைச்சரவை எடுத்த முடிவு பற்றி, எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. இருந்தாலும், வழக்கு பற்றிய தகவல்களை மற்றவர்களுக்கு கொடுப்பதால், விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் என்பது, எங்களின் கோரிக்கை. சி.பி.ஐ.,யை பொறுத்தவரை, ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதும், அந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி, அது தொடர்பான தன் கருத்தை விளக்கி, இயக்குனருக்கு அறிக்கை அளிப்பார். சி.பி.ஐ., வழக்குகளில், இது முக்கியமான ஆதாரமாக கருதப்படுகிறது. இந்த தகவல்கள் பகிரங்கபடுத்தப்பட்டால், விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, பல்வேறு பிரச்னைகளும் ஏற்படும். இதன் காரணமாகவே, தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கும்படி வலியுறுத்துகிறோம். இவ்வாறு தாரிணி கூறினார். மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு, சி.பி.ஐ.,யால் தற்போது விசாரிக்கப்பட்டு வரும் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையின் வெளிப்படையான தன்மை குறித்து, கேள்வியை எழுப்பியுள்ளது.
ramanathan - petaling jaya,மலேஷியா
2011-06-12 04:25:14 IST Report Abuse
சிபிஜ அதிகாரிகள் நேர்மையானவர்களாக இருந்தால் மட்டுமே இச் சட்ட விலக்கு பொருத்தமாக இருக்கும்
VJ vk - chennai,இந்தியா
2011-06-12 00:25:17 IST Report Abuse
ஜனநாயக நாட்டில் அனைத்தும் வெளிப்படையாக நடைபெறவேண்டும். வெளிப்படை இல்லையென்றால் பிறகு எங்கே ஜனநாயகம்? மக்களும் ஜனநாயகத்தின் கோட்பாடுகளை நன்கு அறிந்து செயல்படவேண்டும். முக்கியமாக நம் தாய்நாட்டில் மக்களாகிய நாம் நம்மால் இயற்றிய சட்டங்களை மதிப்பதில்லை. முதலில் நம்மால் இயற்றப்பட்ட சட்டத்தை ஏற்று நடந்தாலே இது போன்ற தடைகள் தேவை இல்லை. உதாரணமாக, சாலை விதிகளை நாம் எப்போதாவது கடைபிடிதிருக்கிறோமா என்பதை இங்கு கருது வெளியிடும் அன்பர்கள் நண்பர்கள் தங்கள் மனதை தொட்டு உண்மையை சொல்லமுடியுமா? மக்கள் திருந்தினால் தான் ஜனநாயகம் தளரும் என்பதே என்னுடைய கருத்து.

மணிசங்கர் அய்யர்: சர்கஸ் நடத்தும் ஹசாரே, ராம்தேவ்


அண்ணா ஹசாரே ஜந்தர் மந்தரிலும், பாபா ராம்தேவ் ராம்லீலா மைதானத்திலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் இருவரும் சர்க்கஸ் நடத்தினார்கள் என்று ôங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார்.
சனிக்கிழமை அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்
அண்ணா ஹசாரே ஜந்தர் மந்தரிலும், பாபா ராம்தேவ் ராம்லீலா மைதானத்திலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் இருவரும் சர்க்கஸ் நடத்தினார்கள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். எனவேதான் அவர்களின் போராட்டத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

கறுப்புப் பணம், ஊழலை ஒழிப்பது குறித்து நாடாளுமன்றமே முடிவெடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இருவரும் முறையிட விரும்பி இருந்தால் முறைப்படி சம்பந்தப்பட்ட நிலைக்குழுவை அவர்கள் அணுகியிருக்க வேண்டும். அதைவிடுத்து போராட்டம் என்ற பெயரில் சர்க்கஸ் நடத்த முயலக்கூடாது.
இவர்கள்தான் இப்படி என்றால் மத்திய அரசின் செயல்பாடும் மோசம். பாபா ராம்தேவ் போராட்டம் என்று அறிவித்தவுடன் அவரை சமாதானப்படுத்த அமைச்சர்களை அனுப்பி வைக்கிறார்கள். நான் பிரதமராக இருந்தால் நிச்சயம் இப்படி ஒரு செயலை செய்திருக்க மாட்டேன் என்றார்.

இந்திய சுற்றுலாப் பயணிகளின் தொகையே அதிகம் என இலங்கை

இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டவர்களில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் தொகையே அதிகம் என இலங்கை சுற்றுலா சபையின் கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இவ்வருடத்தின் முதல் 5 மாதங்களில் மாத்திரம் 68,830 இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளதாகவும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 54.5 சதவீத வளர்ச்சியை இது காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் 5 மாதங்களில் இலங்கை வருகை தந்தவர்களில் பிரித்தானியர்கள் இரண்டாம் இடத்தைப் பெறுகின்றனர். சுமார் 41,474 பிரித்தானியர்கள் குறித்த காலப்பகுதியில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், பாகிஸ்தானிலிருந்து 6,027 சுற்றுலாப் பயணிகளும் வருகைத் தந்துள்ளனர். கடந்த வருடம் மொத்தமாக 650,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்திருந்தனர். எனினும் அந்த எண்ணிக்கை இவ்வருடம் 100,000ஆக அதிகரிக்கக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ். குடாநாட்டில் ஏழு மீன்பிடி துறைமுகங்களை அமைக்க திட்டம்!

யாழ். குடாநாட்டில் மயிலிட்டி உட்பட ஏழு மீன் பிடித்துறைமுகங்களை அமைக்கத் தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

டென்மார்க் உட்பட சில வெளிநாடுகளின் நிதியுதவியுடன் இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்த அமைச்சர், 300 கோடி டொலர் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தக் கைச்சாத்தொன்று அடுத்த மாதம் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று மீள்பிடித்துறை மேம்பாடு தொடர்பில் ஐ. ம. சு. முன்னணி எம். பி. விக்டர் அந்தனி முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்திற்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் ராஜித இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்; 2013 ஆண்டிற்குள் நாட்டில் மந்தபோசனத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நூற்றுக்கு 11 வீதமான மீன் பாவனையை நூற்றுக்கு 24 வீதமாக அதிகரிக்கத் தேவையான வேலைத்திட்டங்களை அமைச்சு முன்னெடுத்து வருகிறது.
நாட்டின் தேசிய மீன் தேவையில் 43 வீதத்தை வடக்கு கிழக்கிலிருந்தே நாம் கடந்த காலங்களில் பெற்றுக் கொண்டுள்ளோம். அந்நிலையை மீண்டும் தோற்றுவிப்பதற்காக அப்பகுதி மீனவர்களுக்கான சகல உபகரணகள் உதவிகளையும் வழங்கவுள்ளோம்.
இரணை மடுக்குளத்தை மீன் வளர்ப்புக்காகப் பெற்றுத்தருமாறு நான் பாதுகாப்பு அமைச்சர் போதாபய ராஜபக்ஷவைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.
விரைவில், அக்குளத்தில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட அப்பிரதேச மக்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அம்மக்களை ஊக்குவிப்பதற்கான திட்டங்களையும் செயற்படுத்தத் தீர்மானித்துள்ளோம்.
வடக்கில் இந்திய மீனவர்கள் ட்ரோலர் படகுகளில் மீன் பிடிப்பது பிரச்சினையாகியுள்ளது. இது சர்வதேசம் சம்பந்தமான பிரச்சினை என்பதால் உரிய வகையில் பேச்சுவார்த்தை நடத்தி இதற்குத் தீர்வு காண எண்ணியுள்ளேன்.
வடக்கு, கிழக்கு மற்றும் உடவளவை, தம்புள்ளை உள்ளிட்ட குளங்களில் நன்னீர் வளர்ப்புக்கான ஊக்குவிப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் 40 மில்லியன் மீன் குஞ்சுகளை அப்பிரதேசங்களுக்கு வழங்கியுள்ளோம்.
பால், மீன் எனப்படும் (MilK, Fish) மீன்வகை வடக்கில் பிரசித்தி பெற்றது. மலேசிய நிபுணர்களுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த வகை மீன்களின் பெருக்கத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இறால் வளர்ப்பிற்காக விசேட திட்டமொன்று வடக்கு கிழக்கில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கென மட்டக்களப்பில் 2820 ஏக்கர் காணியும் திருகோணமலையில் 2220 ஏக்கரும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
பிரபாகரன் கொல்லப்பட்ட நந்திக் கடல் பிரதேசத்தில் நாம் 1.4 மில்லியன் இறால் குஞ்சுகளை வளர்ப்புக்காக வழங்கியுள்ளோம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா தலையிடாது இந்தியதூதுக்குழு

:
sivashankar mஇலங்கையில் அரசியல் தீர்வு காணும் விடயத்தில் இந்தியா தலையிடாது எனவும் அது இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த விடயம் எனவும் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட தூதுக்குழு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வெளிவிவகார செயலர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலேசாகர் சிவ் சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோரடங்கிய இந்திய தூதுக்குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்க் கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது வடக்கு இராணுவமயப்படுத்தப்படுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடல்கள் தொடர்பாக இந்திய ஊடகங்களிடம் சிவ்சங்கர் மேனன் கூறுகையில், இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை வழங்குவதும் வடக்கில் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவமே உடனடி இலக்காகும் எனக்கூறினார்.
காணாமல் போனோர் தொடர்பாக விபரங்களை வெளியிடுவது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மீள்குடியேற்ற விடயத்தில் பணிகள் நடைபெறுகின்றபோதிலும் இன்னும் அதிகமாக செய்யப்பட வேண்டியிருப்பதாக சிவ் சங்கர் மேனன் கூறியுள்ளார்.
ஜனாதிபதியுடனான இரு மணித்தியால பேச்சுவார்த்தைகளின்போது, இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இந்திய பிரதமர் ஏற்றுக்கொண்டதை இந்திய தூதுக்குழு தெரிவித்தது. இருதரப்புக்கும் சௌகரியமான வேளையில் இந்த விஜயம் இடம்பெறும் எனவும் இதற்கான திகதி நிர்ணயிக்கப்படவில்லை எனவும் சிவ்சங்கர் மேனன் இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
மீனவர் பிரச்சினை குறித்து இரு நாடுகளின் மீனவர் சங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இருதரப்புக்கும் நன்மையளிக்கக்கூடிய தீர்மானங்களை அவர்கள் மேற்கொள்வார்கள் எனவும் மேனன் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தீர்மானம், நிபுணர் குழுஅறிக்கை குறித்து பேசப்படவில்லை: சிவ் சங்கர்மேனன்
இலங்கை தொடர்பாக தமிழக சட்டசபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய அரசின் உயர் மட்ட தூதுக்குழுவும் இடையிலான பேச்சுவார்த்தைகளின்போது கலந்துரையாடப்படவில்லை என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க விடயத்தில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எனும் சொந்த பொறிமுறையொன்றை இலங்கை கொண்டிருப்பதாகவும். ஆதனால் ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கை குறித்து கலந்துரையாடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின்கீழ் 50 வீடுகள் இம்மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் 1000 வீடுகளை இவ்வருட இறுதிக்குள் பூர்த்தியாக்கப்படும் எனவும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்தார்.

நேற்று இலங்கைக்கு வந்த இந்திய தூதுக்குழுவினர் இன்று சனிக்கிழமை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது

Colomboவிமான நிலைய சுத்திகரிப்பாளரிடம் இருந்து 71 லட்சம் ரூபா மீட்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுத்திகரிப்பு கடமையில் ஈடுபட்டுள்ள ஒருவரிடம் இருந்து வெளிநாட்டு நாணயங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. இவரிடமிருந்து யூரோ, யென், அவுஸ்திரேலிய டொலர் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதன் இலங்கைப் பெறுமதி 71 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் எனவும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நாணயங்கள் நேற்றிரவு 10 மணியளவில் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தனியார் நிறுவனமொன்றின் சுத்திகரிப்புப் பிரிவில் கடமையாற்றும் குறித்த சுத்திகரிப்பாளரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுங்க அதிகாரி குறிப்பிட்டார்.