திங்கள், 30 மே, 2011

கூட்டணியால் மரியாதை இழந்தேன்: வைகோ பேச்சு

சென்னை:""கூட்டணி ஏற்படுத்தியதன் மூலம் மரியாதையை இழந்தேன்; மதிப்பை இழந்தேன்; பரிகாச பேச்சுகளுக்கு ஆளாகினேன்,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார்.

ம.தி.மு.க., 18வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசியதாவது:ம.தி.மு.க., துவக்கி 18 ஆண்டுகளில் இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் என, பல தேர்தலை சந்தித்துள்ளோம். ம.தி.மு.க., தனியாகவும், கூட்டணியும் அமைத்து போட்டியிட்டுள்ளது. தனியாக நின்று தோல்வி அடைந்த போது, கூட்டணி அமைக்க வேண்டும் என, கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் வலியுறுத்தினர்.ம.தி.மு.க., கூட்டணி வேண்டுமென அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் அழைப்பு விடுத்தன. இதற்கு கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் சம்மதம் தெரிவித்தனர். பல சமரசங்களை செய்து கொண்டு, கூட்டணி ஏற்படுத்தியதன் மூலம் மரியாதையை இழந்தேன்; மதிப்பை இழந்தேன்; பரிகாச பேச்சுகளுக்கு ஆளாகினேன்.

கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க.,வை, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் தான் கூட்டணியை விட்டு வெளியேற்றின. நாங்களாக வெளியேறவில்லை. வெற்றி, தோல்வி எங்களுக்கு கிடைத்தாலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். அது என்றும் தொடரும். பணம் வாங்கிக் கொண்டு கூட்டணி அமைத்ததாக எங்கள் மீது பழி சுமத்தினர். ஆனால், நடந்து முடிந்த தேர்தலை நாங்கள் சந்திக்காததால், அப்பழியிலிருந்து விடுபட்டுள்ளோம்.அ.தி.மு.க.,வின் புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. இந்த அரசின் நல்ல திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்போம். ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளி என அறிவித்து, சர்வதேச கோர்ட்டில் விசாரிக்க, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இலங்கை அரசுக்கு மத்திய அரசு, பணம் மற்றும் ஆயுத உதவிகளை வழங்கக் கூடாது என, அ.தி.மு.க., அரசு வலியுறுத்த வேண்டும்.

சமச்சீர் கல்வி திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால், அவற்றை களைந்து விட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். புதிய தலைமைச் செயலக கட்டடம் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. அதை, தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ம.தி.மு.க., தனக்கென தனிப்பாதையை வகுத்துக் கொண்டு மக்களுக்காக, தொடர்ந்து பாடுபடும்.இவ்வாறு வைகோ பேசினார்.

புனர்வாழ்வு பெற்றுவந்த சுமார் 900 முன்னாள் போராளிகள் எதிர்வரும் ஐந்தாம் திகதி வவுனியாவில் விடுதலை


புனர்வாழ்வு பெற்றுவந்த சுமார் 900 முன்னாள் போராளிகள் எதிர்வரும் ஐந்தாம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் வைத்து பெற்றோரிடம் கையளிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதீஷ்குமார் தெரிவித்தார்.

இந் நிகழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பு அமைச்சின் சந்திரசிறி கஜதீர தலைமையில் வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இதில் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்கவும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை எதிர்வரும் 4 ஆம் திகதி சனிக்கிழமை பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் சிநேகபூர்வ விளையாட்டு விழா நடைபெறவுள்ளது. இதன்போது அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையிலான புனர்வாழ்வு பெற்று வருவோரும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் திறன்விருத்தி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தலைமையிலான தேசிய இளைஞர் மன்றத்தின் மாணவர்களுக்கிடையில் கிரிக்கெட் போட்டி இடம்பெறவுள்ளது. இப் போட்டியின் பின்னர் இசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

TNA உள்ளே பேச்சு: வெளியே வசை பாடல்

தமிழருக்கான தீர்வை TNA பெற்றுத்தரும் என நம்புவது எப்படி?
சிவராசா
ஊடகங்களில் அரசை விமர்சிப்பதை விடுத்து பேச்சுக்களின்போது அவைகுறித்துக் கலந்துரையாடுவதே சிறப்பு. ஊடகங்கள் ஊதிப் பெருப்பிக்கவில்லை, ஹினிதி ஊதுவதை ஊடகங்கள் உள்வாங்கி வெளிக்கக்குகின்றன.

அரசாங்கத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் பேச்சுவார்த்தை நடத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் அரசாங்கத்தை விமர்சிப்பதிலேயே தனது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் குறித்து தமிழ் மக்களிடையே பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பேச்சுக்களில் தமக்குத் திருப்தி இல்லையென்றும், அரசாங்கத்திடமிந்து எதனையும் பெற்றுக்கொள்ளலாம் எனத் தாம் நம்பவில்லை எனவும் பேச்சுக்களில் பங்கெடுத்துவரும் கூட்டமைப்பு பிரமுகர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்து வருகின்றனர். இது ஆரோக்கியமானது அல்ல எனவும் பேச்சுக்களை நம்பிக்கையுடன் தொடர்ந்தும் நடத்த வேண்டும் எனவும் அதே அணியிலுள்ள பலர் கூட்டமைப்பின் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழ்க் கூட்டமைப்பிற்குள் இப்போது உட்கட்சிப் பூசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என உண்மையாகவே கூட்டமைப்பு நினைக்குமாயின் அரசாங்கத்துடன் இதயசுத்தியுடன் பேச வேண்டும். அரசாங்கம் ஏமாற்ற முயன்றால் கூட இவர்கள் விட்டுக் கொடுத்துப் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும். ஆனால் இன்று மாறாக இவர்கள் ஊடகங்களுக்குத் தம்மைப் பற்றித் தாறு மாறாக விமர்சனம் செய்கிறார்கள் எனத் தெரிந்திருந்தும் அரசாங்கம் விட்டுக் கொடுத்து பேச்சுக்களை நடத்தி வருகிறது.

இதனை இவர்கள் அரசாங்கத்தின் இயலாமை அல்லது கோழைத்தனம் எனக் கருதினால் அதனைவிட முட்டாள்தனம் எதுவுமாக இருக்க முடியாது. ஏனெனில் அரசாங்கம் இவர்களை நம்பி மட்டும் பேசவில்லை. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே அரசாங்கம் பேசிவருகிறது. அதனை இவர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்டுத்தி அரசாங்கத்தைக் குறைத்து எடை போட்டு வருகின்றனர். அதன் விளைவே இவர்களது கட்டுமீறிய பொய்யான ஊடகப் பிரசாரம்.

இந்த உண்மை நிலையை தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்காக எனக் கூறும் கூட்டமைப்பு என்றாவது தமிழ் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்டதா என்றால் இல்லை என்பதே பதிலாக அமையும். கேட்டால் தேர்தலில் எமக்கு மக்கள் ஆணை தந்துள்ளனர் எனத் தெரிவிப்பர். உண்மையில் இதுவரை காலமும் தேர்தலில் மக்கள் வேறு தெரிவின்றியே கூட்டமைப்பைத் தெரிவு செய்து வந்துள்ளனர். அத்துடன் கூட்டமைப்பு புலிகள் போன்று சில வீர வசனங்களைப் பேசி வந்தமையால் பாமர மக்களை இலகுவாக ஏமாற்றக் கூடியதாக உள்ளது.

ஆனால் இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இனியும் புலிக்கதை விளையாட்டு தமிழ் மக்களிடம் எடுபடாது. தமக்கு உண்மையாக சேவை செய்யக் கூடிய தலைவர்களையே அவர்கள் இனித் தெரிவு செய்வர்.

உண்மையில் தமிழ்க் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் முக்கியஸ்தருமான நல்ல தம்பி ஸ்ரீகாந்தா கேட்டது போன்று அரசாங்கம் தமிழருக்கு ஒன்றுமே செய்யாது, பொய்யாக ஏமாற்றுவதற்கே பேச்சுக்களைத் தம்முடன் நடத்துகின்றது எனக் கூட்டமைப்பு தெரிவித்துவரும் நிலையில் ஏன் அரசுடன் தொடர்ந்தும் பேச்சுக்குச் செல்கிறது. எனவே தமிழ்க் கூட்டமைப்புத்தான் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது என்பது தெளிவாகப் புரிகிறது. இதனை சரியாக விளங்கிக் கொள்ள தமிழருக்குச் சிறிது காலம் தேவையாகவுள்ளது என்பதே உண்மை.

தேர்தல் என்றதும் தமிழ் மக்களைச் சந்திக்கச் செல்வது கூட்டமைப்பின் தந்திர வழக்கமாகும். இப்போது வடக்கில் தடைப்பட்டிருந்த உள்ளூராட்சி தேர்தல்கள் இடம்பெறவிருப்பதால் முல்லைத்தீவிற்கும் கிளிநொச்சிக்கும் போட்டிபோட்டு செல்லத் தொடங்கியுள்ளனர். இதுவரை காலமும் அந்தப் பக்கமே திரும்பியும் பார்க்காத இவர்கள் இப்போது அங்கு சென்று மக்கள் சிரமப்படுவதாக அறிக்கை விடுகின்றனர்.

உண்மையில் இவர்கள் அங்கு வருவதை அப்பகுதி மக்கள் விரும்புவதில்லை. அண்மையில் இவர்களது வருகைக்கு மக்கள் நேரடியாகவே எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். ஆனால் தம்மை மக்கள் சந்தித்துக் குறைகளைத் தெரிவித்ததாகவும் தாம் ஏதோ தீர்த்து வைத்ததாகவும் அறிக்கைகள் விட்டுள்ளனர். இவர்களது வருகை காரணமாக தமக்கு அரசாங்கத்தினால் கிடைக்கும் அபிவிருத்திகள் மற்றும் நிவாரணங்கள் தடைப்பட்டு விடுமோ என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். காரணம் மக்கள் குறை தெரிவிப்பது போலக் கூறி இவர்கள் தமது கற்பனையில் அறிக்கை விடுகிறார்கள்.

இதேவேளை தமிழ்க் கூட்டமைப்பினர் தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா ஜெயராமைச் சந்தித்து உரையாடுவதற்கு சந்தர்ப்பம் கேட்டும் இதுவரை அவர் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. காரணம் தமிழ்க் கூட்டமைப்பின் தந்திரக் காய் நகர்த்தலும், இரட்டை வேடமும் இலங்கையில் மட்டுமல்ல; தமிழகத் தலைவர்களுக்கும் தெரிந்து விட்டது.

அடுத்து இன்னுமொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதாவது தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையில் ஏற்படும் பிரச்சினை குறித்து தமிழ்க் கூட்டமைப்பி னால் ஒரு தீர்வை தமிழக அரசுடன் பேசி ஏற்படுத்தியிருக்க முடியும். ஏனெனில் தமிழக மற்றும் வடபகுதி மீனவர்களிடையேதான் கடந்த காலங்களிலும் சரி இன்றும் சரி பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆனால் கூட்டமைப்பு இவ்விடயத்தில் தமிழகத்தை ஒருபோதும் குற்றம் சாட்டியதே கிடையாது. வாய் திறந்தால் அங்கேயிருக்கும் தமது மனைவி பிள்ளைகளுக்குச் சிக்கல், தாம் அடிக்கடி சென்று ஓய்வெடுத்து வருவதற்குத் தடைவரும் என்பதால் நமது மீனவர்கள் துன்பப் பட்டாலும் பரவாயில்லை இவ்விடயத்தில் மெளனம் காப்போம் என்று இருந்து வருகின்றனர்.

உண்மையை உரைத் தால் இன்று தமிழ்க் கூட்டமைப்பு ஊடகங் களில் மட்டும்தான் அரசியல் நடத்தி வருகின்றது. கூட்ட மைப்பி லுள்ள சில பாராளு மன்ற உறுப் பினர்கள் ஊட கங்கள் சிலவற்றை நிர்வகித்து வருவத னால் அவர்களது ஊடகப் பிரசாரத்திற்கு குறை இல்லாதுள்ளது. தமிழ் மக்களும் இதனை நம்பி தமி ழ்க் கூட்டமைப்பினரே தமிழ் மக்களின் பிரதி நிதிகள் என்பதாக ஆதர வளித்து வருகின்றனர். ஏனைய சில தமிழ் ஊடகங்க ளும் தமிழ் மக்களி டையே கூட்டமைப்பை வளர்த்து விடுவதற்காகவும் தமது விற்பனைக்காகவும் பொய்ப் பிரசாரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

கூட்டமைப்பிலுள்ள ஆயுதக் குழுவில் அங்கம் வகிக்காத சிரேஷ்ட அங்கத்தவர்கள் ஓரளவு பொறுப்புடன் செயற்பட்டு வரு கின்றனர் எனக் கூறலாம். ஆனால் ஆயு தக் குழுவில் அங்கம் வகித்து அரசியலுக்கு வந்த பலரது போக்கு புலிகளின் அழிவுக்குப் பின்னர் சற்றே மாறுபட்டுக் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

முன்னாள் புலி உறுப்பினர்களை முன்னிலைப்படுத்தி புலம்பெயர் சமூகத்திடம் வசூல் செய்வதில் வடக்கிலுள்ள சில தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இவ்வாறானவர்களில் சிலர் கையும் களவுமாகப் பிடிபட்டும் உள்ளனர். இதனால் கூட்டமைப்பிற்கே அவப்பெயர் ஏற்படுகிறது. எனவே கூட்டமைப்பு இப்போது தமது அணிக்குள்ளே உள்ள புல்லுருவிகளை களைய வேண்டும்.

எவ்விடயத்திலும் காத்திரமான ஒரு அறிக்கையை தலைமை மட்டுமே விட வேண்டும். பக்குவமடையாத அனுவமில்லாத உறுப்பினர்கள் மக்களது தேவைகளை மட்டும் பூர்த்தி செய்பவர்களாக இருக்க வேண்டும். மக்களுக்குப் பல தேவைகள் உள்ளன. அரசியல் அதிகாரத்தை அனுபவம் உள்ளவர்களே கையாள வேண்டும். உங்களை நம்பியே மக்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர். அதற்கு கைமாறு செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு அல்லவா?

அரசாங்கத்திற்கு தமது நல்லெண்ணத்தைக் காட்டுகின்றோம் எனப் புறப்பட்டு இன்று அரசாங்கத்தின் மீது வசைபாடும் வேலையிலேயே கூட்டமைப்பு ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக தமிழ் மக்கள் தொடர்பாக கலந்துரையாடப் பல விட யங்கள் உள்ளன. அவை தொடர்பாக எதுவுமே பேசப்படுவதில்லை. முயற்சி எடுப்பதுவும் இல்லை. இறுதி யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் முழுமையாக இயல்பு வாழ்வுக்குச் திரு ம்பவில்லை.

பலரைத் தேடி இன்றும் அவர்களது உறவுகள் அங்கும் இங்கும் அலைகின்றன. இவற்றைத் துரிதப்படுத்தி தமது மக்களுக்கு உதவுமாறு அரசாங்கத்திடம், கூட்டமைப்பு எப்போதாவது கேட்டார்களா? அரசாங்கமே கருணையுடன் அவை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தி செயற்பட்டு வருகின்றது. அதனை உங்களது தேவைக்காகக் கெடுத்துவிடாதீர்கள்

admk அமைச்சர் செல்லூர் ராஜூ வீடு முற்றுகை


அமைச்சர் செல்லூர் ராஜூ வீடு முற்றுகை

மதுரையில் கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜு வீடு நெசவாளர்களால் முற்றுகையிடப்பட்டது.
கரடிப்பட்டியில் அரசு ஒதுக்கிய நிலத்தில் வீடு கட்ட அனுமதி பெற்றுதரக்கோரிக்கை விடப்பட்டது.
கரடிப்பட்டியில் வீடு கட்ட 234 நெசவாளர்களுக்கு 2002ல் இலவச பட்டா தந்துள்ளது அரசு.அரசு ஒதுக்கிய இடத்தை ஊராட்சி தலைவர் கரடியப்பன் அபகரிக்க முயல்வதாக புகார் கூறியுள்ளார்.<
அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதை ஏற்று முற்றுகையை கைவிட்டனர் நெசவாளர்கள்.

ஞாயிறு, 29 மே, 2011

Rahul ஆந்திராவிலும் மராட்டியத்திலும் விவசாயிகள் தற்கொலை செய்யும் போது எங்கே போனார்?

ராகுல் என்ற சீரியல் மாமியார்...!ந்திய அரசியல் வானம் என்பது பல விசித்திரமான நிலவுகளை கொண்ட வினோத வானம்
 இங்கே கருப்பாகவும் சந்திரன் உதிப்பான் அவன் கால் முளைத்து சூரியனையும் மிதிப்பான்
 அதாவது உண்மைக்காகவே வாழ்ந்த காந்தியும் அதற்கு நேர் விரோதமான பல காந்திகளும் வாழ்வதை இங்கே மட்டுமே காண முடியும்
 நான் எந்த காந்திகளை பேசுகிறேன் என்பது யாரும் அறியாத ரகசியம் அல்ல

கடந்த சில காலமாக நமது நாட்டை பொம்மைகளை வைத்து அரசாளும் சோனியா மற்றும் ராகுல் காந்திகள் அடிக்கும் கூத்துக்கள் பல நேரம் மனதிற்கு வேதனையாக இருக்கிறது சில நேரம் சிரிப்பு வருகிறது

  நாம் அரசியலில் புதியதாக ஜோக்கர்களை சந்திக்க வில்லை

 இந்திராகாந்தி காலத்தில் ராஜ் நாராயணன்,சரண் சிங் போன்ற ஜோக்கர்களையும் வி.பி. சிங் காலத்தில் தேவிலால் சௌதாலா போன்ற ஜோக்கர்களையும் சந்தித்து இருக்கிறோம்

 அப்போது எல்லாம்  கூட இந்த ஜோக்கர்கள் நகைச்சுவையாக நடந்து கொண்டாலும் சிந்தனையில் கொடூரம் தெரியாது
ஆனால் இன்று இந்திய அரசியல் வானில் ஜோக்கராக பவனி வரும் ராகுல் காந்தியின் செயல்களை பார்க்கும் போது சிரிப்பாகவும் இருக்கிறது கூடவே பயமாகவும் இருக்கிறது
உத்திரபிரதேச அரசு விவசாய நிலங்களை கையக படுத்தியதை எதிர்த்து விவசாயிகள் நடத்திய எதிர்ப்பு கூட்டத்தில் பேசிய ராகுல்

  விவசாயிகளின் துன்பத்தை பார்க்கும் போது நான் இந்தியன் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப் படுகிறேன் என வீரா வேசமாக வசனங்களை அள்ளி வீசி இருக்கிறார்
 ஆடு நனைவதை பார்த்து ஓநாய் அழுத போது ஆடுகளே இறக்கப்பட்டு ஓநாய்க்கு ஆறுதல் சொன்னதாம்

 அதே போலவே ராகுலின் போலியான கரிசன பேச்சை கேட்டு பல விவசாயிகள் ஐயோ பாவம் எவ்வளவு பெரிய வீட்டு பிள்ளை இப்படி நம்மக்காக வந்து குரல் கொடுக்கிறதே என அங்கலாயித்து போகிறார்கள்
 விவசாயிகளின் நலனுக்காக இவ்வளவு வருத்தப்படும் ராகுல் காந்தி ஆந்திராவிலும் மராட்டியத்திலும் விவசாயிகள் தற்கொலை செய்யும் போது எங்கே போனார்?

ஒரு வேளை அப்போது அவர் இந்தியாவில் இல்லையா? அல்லது இந்தியராக இல்லையா? நமக்கு ஒன்றும் விளங்க மாட்டேன் என்கிறது

நாடு முழுவதும் உள்ள விவசாய நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் கொள்ளை அடிக்க படுகிறது

 ரியல் எஸ்டேட் தொழிலால் மொட்டை அடிக்கப் படுகிறது
 கிராம புறங்களில் உள்ள ஏரி குளங்கள் தூர் வாரப்படாமல் கரைகள் உறுதிப்படுத்தப் படாமல் வேலி காத்தான் முளைத்து அப்படியே கிடைக்கிறது

 சில சிறிய பெரிய நகரங்களில் உள்ள நீர்ஆதார பகுதிகள் அரசியல்வாதிகளால் கபளீகரம் செய்யப்பட்டு இல்லாமல் காணமல் மறைந்தே போய்விட்டது

 இதனால் விவசாயமும் அதற்கு தேவையான தண்ணீரும் நாட்டை விட்டு வெகு தொலைவிற்கு போய் கொண்டே இருக்கிறது
 ரசாயன உரங்களால் இந்திய மண் வகை 90 பகுதி விஷமாகி விட்டது
  நவீன வேளாண்மை என்ற பெயரில் மரபு சார்ந்த வேளாண் தொழில் நுட்பம் எல்லாமே மயானத்தில் சிதையேறி விட்டன

இதனால் ஒரு மாட்டை வைத்து கொண்டு பிழைப்பு நடத்தும் பல லட்ச்சம் விவசாயிகளின் வாழ்க்கை இன்று முடியுமோ நாளை முடியுமோ என்று ஊசலாடி கொண்டு இருக்கிறது

இறந்து போக போகிறவனின் உடல் உறுப்புகள் துடிப்பதை பார்த்து கிண்டல் செய்யும் கதையாக தான் ராகுல் காந்தியின் இந்த கரிசன பேச்சை இன்றைய சூழலில் நம்மால் எடுத்து கொள்ள முடிகிறது

 ஆட்சி அதிகாரம் அவர்கள் கையில் தான் இருக்கிறது சுண்டு விரல் அசைந்தால் போதும் மக்களின் தலை எழுத்தையே ஒரே நொடியில் மாற்றி விடலாம்
அப்படி பட்ட நிலையில் இருக்கும் ஒரு மனிதன் தனது சொந்த கட்சியின் நலனுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பது அப்பட்டமான குரூர நகைச்சுவை ஆகும்

 திடிரென இவருக்கு உத்திர பிரதேச விவசாயிகளின் மீது அக்கறை ஏற்பட்டிருப்பது இப்படிதான் நினைக்க வைக்கிறது
 இது மட்டும் அல்ல அந்த கூட்டத்தில் உத்திர பிரேதேச கிராம ஒன்றில் 70  விவசாயிகளின் இறந்த உடல்கள் அடிக்கி வைக்கப்பட்டுள்ளது என இல்லாத நடக்காத ஒரு விஷயத்தை சீரியல் மாமியார் போல மற்றவர்களை அழ வைக்க பேசி இருக்கிறார்

  இது என்ன அபாண்டமான பொய்யாக இருக்கிறது என்று மற்ற அரசியல் கட்சிகளும் பதிலுக்கு ஆற்பறிக்க ஆரம்பித்து விட்டன

 இதில் நிஜமான வேதனை என்ன வென்றால் உத்திர பிரேதேசத்தில் மாயாவதி அரசு விவசாயிகளுக்கு பல வித இடைஞ்சல்களையும் ஏமாற்று வேலைகளையும் செய்து வருகிறது
 மாயவதியின் மாயா ஜால அரசியல் சித்து விளையாட்டுகளால் விவசாயிகளில் பலர் பலவற்றை அநியாயமாக இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள்
 ராகுல் காந்தியின் பக்குவமற்ற பேச்சால் விவசாயிகளின் உண்மையான பிரச்சனைகள் தேசிய அளவில் பேச முடியாமலே போய் விட்டது

 உத்திர பிரேதேச விவசாயிகளின் கண்ணீர் ராகுல் என்ற குழந்தை நிழலால் முற்றிலுமாக மறைக்கப்பட்டு விட்டது
உண்மையில் விவசாயிகளின் வேதனை ராகுலின் இதயத்தை தொட்டால் ஓட்டுக்காக செயல் படுவதை விட்டு விட்டு அப்பாவி உழவர்களின் வீட்டு அடுப்பு எரிய எதையாவது செய்யலாம்
முடிய வில்லை என்றால் மவுன விரதம் எடுக்கலாம்
 இது அவருக்கும் நல்லது விவசாயிகளுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது
இதை அவர் செய்ய மறுத்தால் நிச்சயம் மக்கள் வாய் பூட்டு போடுவார்கள்

Jaffna Hospital பாவனைக்கு உதவாத வடைகள் பொதியுடன் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன

யாழ்.போதனா வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையில் பாவனைக்கு உதவாத நிலையில் இருந்த வடைகள் பொதியுடன் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

கடந்த சில காலமாக இந்தச் சிற்றுண்டிச் சாலையில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருள்கள் இருந்தமை குறித்து வைத்தியசாலை சுகாதார பரிசோதகர் எச்சரிக்கை செய்திருந்தார்.

உணவு உற்பத்தி செய்யும் பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் அனுமதி அட்டையை ஒரு வாரத்தினுள் சமர்ப்பிக்கும்படியும் அவர் கூறியிருந்தார்.

இதுவரை அவர்கள் அதைச் சமர்ப்பிக்கவில்லை. இந்த நிலையில் சுகாதார முறைப்படியான பாதுகாப்பற்று அசுத்தமான முறையில் பையினூடாக எண்ணெய் ஊறிய நிலையில் நேற்று முற்பகல் 10 மணியளவில் சிற்றுண்டிச்சாலைக்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்ட வடைகள் அனைத்தையும் யாழ். போதனா வைத்தியசாலைச் சுகாதாரப் பரிசோதகர் முரளிதரன் கைப்பற்றி அழித்துள்ளார்.

ஏற்கனவே சிற்றுண்டிச்சாலை உணவுகளில் சுகாதாரக் குறைபாடுகள் இருப்பதாக மக்கள் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

UNP எதிர்ப்பு,மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம்

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம்: ஐ.தே.க. எதிர்ப்பு!


அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அடியொட்டி இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்கப்போவதாக அரசு தெரிவித்து வரும் நிலையில், 13 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

“மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் அவற்றை மாகாண நிர்வாகங்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடும். அத்துடன், வெளிச்சக்திகள் (மூன்றாம் தரப்புகள்) பொலிஸ் நிர்வாகத்தில் ஊடுருவி மீண்டும் கிளர்ச்சிகளை ஏற்படுத்தவும் கூடும்” என்று தெரிவித்துள்ளார் கட்சியின் பிரதித் தலைவர் கருஜெயசூரிய. இதனால் பொலிஸ் அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்படுவதைக் கட்சி விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அந்தச் செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபை நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும் என்று இன்று வலியுறுத்தப்படுகிறது.அவ்வாறு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால், அவை தவறாகப் பயன்படுத்தப்படக் கூடும் என்ற சந்தேகமும் தயக்கமும் நிலவுகிறது.மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால், வெளிச்சக்திகள் அதில் தலையிட்டு, ஊடுருவி தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். அதனால் எதிர் காலத்தில் கிளர்ச்சிகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இதனாலேயே பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதை நாம் எதிர்க்கிறோம்.
இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமானால், இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது போன்ற அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளலாம்.அவசரகாலச் சட்டம், பயங்கரவாத தடுப்புச் சட்டம் போன்றவற்றைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுவதால் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சட்டங்களைத் தொடர்ந்து நடைமுறையில் வைத்திருப்பதால், எமது நாட்டைப் பயங்கரவாத நாடாகவே உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.இந்த நிலையை நீக்கி, உடனடியாக இந்தச் சட்டங்கள் நீக்கப்படவேண்டும் என்றும் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.ஐ.தே.க. தற்போது மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுவதை எதிர்க்கின்ற போதும், 1987 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் அந்தக் கட்சியின் முன்னாள் தலைவரான ஜெ.ஆர்.ஜெவர்த்தனாவே கையெழுத்திட்டிருந்தார். அந்த ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தில் மாகாணங்களுக்குப் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிமுக வெற்றி :விரலை வெட்டி பெண் நேர்த்திக்கடன்

நாம் முன்பே குறிப்பிட்ட படி இதோ ஒரு மாது சிரோன்மணி ஜெயலலிதா அம்மையாருக்கு மிகவும் பிடிக்கும் என்பது தெரிந்தவுடன் தனது கால்விரலை வெட்டி காணிக்கையாக்கி உள்ளார். ஒரு மெகலோ மேனியா பெண்மணியின் ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் இனி தொடரும் வாழ்க தமிழ் நாடு.

சேலம் தாதகாப்பட்டி கேட் விவேகானந்தா தெருவை சேர்ந்தவர் பழனிசாமி. அ.தி.மு.க. மேலவை பிரதிநிதி. இவரது மனைவி வாணி(40). அ.தி.மு.க. மீது தீவிர பற்று கொண்டவர். தேர்தல் நேரத்தில் இவர் அந்த பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

அப்போது அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா வெற்றி பெற்று விட்டால் கை பெருவிரலை காணிக்கையாக்குகிறேன் என்றார். அதன்படி அ.தி.மு.க. அமோக வெற்றி ஜெயலலிதாவும் முதலமைச்சர் ஆகிவிட்டார் என்பதால் நேர்த்திக்கடன் செலுத்த வாணி முடிவு செய்தார்.
இன்று காலை தனது வீட்டில் இருந்து வாணி கோவிலுக்கு புறப்பட்டார். பின்னர் காளியம்மனுக்கு முன் நின்று கத்தியால் தனது பெருவிரலை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினார். ரத்தம் அதிகளவில் வெளியேறியதால் வாணி மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்தவர்கள் ஓடிச்சென்று அவரை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.  ஏராளமான அ.தி.மு.க.வினர் வாணியை சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாணிக்கு ரூ. 50 ஆயிரம் நிதி உதவி கொடுத்து கோவைக்கு சிகிச்சைக்கு செல்லுமாறு பரிந்துரை செய்தார்.

ஆட்சி ஆரம்பத்துலேயே, வசூல்ல இறங்கிட்டாங்களாங்க

பாடப் புத்தகங்களை அச்சடிக்கும் நிறுவனங்கள்ட்ட பேசி, கமிஷன் தொகையை முடிவு செஞ்சிட்டாங்க பா...!

ஆட்சி ஆரம்பத்துலேயே, வசூல்ல இறங்கிட்டாங்களாங்க...'' என்று கேட்டார் அந்தோணிசாமி.
""போன ஆட்சியில, சென்னையைச் சேர்ந்த சில ஏஜன்டுகள், அச்சக உரிமையாளர்கள்ட்ட கமிஷன் விவகாரங்களை பேசி, மேலிடத்துக்கு பணத்தை வாங்கி கொடுத்தாங்க பா... அதே ஆட்கள், இப்பவும் வேலையை காட்டீட்டாங்களாம்... சென்னை அண்ணா சாலையில இருக்கற ஒரு, "கிளப்'ல, அச்சக உரிமையாளர்களை அழைச்சு, கூட்டம் நடத்திருக்காங்க பா... அப்ப, "கமிஷன்' விவகாரங்களை பேசி முடிவு செஞ்சிருக்காங்க... அதோட, டெண்டர் விலையில பத்து ரூபாய் அதிகமா வச்சு, அதன் மூலமா பெரிய தொகையை வசூல் செய்யவும் திட்டம் இருக்காம்...'' என்றார் அன்வர்பாய்

Power Cut அமைச்சரும், அதிகாரிகளும் கையை பிசைஞ்சுகிட்டு இருக்காங்க வே

"நஷ்டக் கணக்கை பார்த்து அமைச்சரே, "ஷாக்' ஆகிட்டாரு வே"

எந்த துறையில பா...'' என்று கேட்டார் அன்வர்பாய்.
""மின்சார வாரியத்துல தான் வே... இந்த வாரியம், 15 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்துல செயல்படறதா எல்லாரும் சொல்லிட்டு இருந்தாவ... இப்ப, இதோட அமைச்சரா இருக்கற நத்தம் விஸ்வநாதன் கூட, எதிர்க்கட்சி வரிசையில இருந்தப்ப, மின் வாரியம், 15 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்துல இயங்கறதா பேசினாரு வே...

""இப்ப, அவரே இந்த துறைக்கு அமைச்சரா வந்ததும், ஆய்வுக் கூட்டம் நடத்திருக்காரு... அப்ப, மின் வாரியம், 40 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்துல செயல்படறது தெரிஞ்சு, அமைச்சர், "ஷாக்' ஆகிட்டார்... அதுவும், கடந்த மூணு வருஷத்துல தான், இழப்பு அதிகமா இருந்திருக்கு... இதை எல்லாம் சரி செஞ்சு, தடையில்லா மின்சாரத்தை எப்ப கொடுக்கப் போறோம்ன்னு, மின் வாரியம் இப்ப முழிச்சிட்டு இருக்கு வே...

""மூணு மாசத்துக்குள்ள மின் தட்டுப்பாடு இருக்கக் கூடாதுன்னு முதல்வர் உத்தரவிட்டிருக்காங்க... அதனால, என்ன செய்யறது தெரியாம, அமைச்சரும், அதிகாரிகளும் கையை பிசைஞ்சுகிட்டு இருக்காங்க வே...'' எனக் கூறிவிட்டு, கிளம்பினார் அண்ணாச்சி; மற்ற பெரியவர்களும் புறப்பட்டனர்.

டெல்லியில் தங்கிடவா? கனியிடம் தழதழத்தார் கலைஞர்

15க்கு 10 அடி நீள அகலம்தான் அந்த அறை. கல் படுக்கையும் ஒரு காற்றாடியும். தமிழகத்துக்கே இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி அளித்தவரின் மகளுக்கு சிறையில் சிறப்புச் சலுகையாக ஒரு சின்னத் தொலைக்காட்சிப் பெட்டி. படிப்பதற்கான மனநிலை இருக்குமோ இருக்காதோ... கைவசம் ஆறு புத்தகங்கள்... ஆம், திஹார் சிறையில் கனிமொழி!
தி.மு.க-வின் ராஜ்யசபா எம்.பி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள்... சக்தி வாய்ந்த அடையாளங்கள் சட்டத்தின் முன் தோற்கடிக்கப் பட, திஹாரில் சிறை எண் 6இல் அடைக்கப்பட்டார் கனிமொழி. அலைக் கற்றை விவகாரத்தில் கனிமொழியின் பெயர் அடிபடத்தொடங்கிய நாளில் இருந்தே, கருணாநிதியின் தூக்கம் தொலைந்துவிட்டது. கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுவைக் கூட்டி இது கனிமொழி மீதான பிரச்சினை இல்லை. கட்சியின் மதிப்புக்கு பங்கம் உண்டாக்கும் பிரச்சினை! எனச்சொல்லி தீர்வுக்கு வழி கேட்டார்.
ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவது நல்லதல்ல! என கட்சிக்காரர்களே கருணாநிதியின் எண்ணத்துக்கு அணை போட்டார்கள். ‘கனிமொழி என் மகள் மட்டுமல்ல... இந்தக் கட்சிக்காக பெரிதாகத் தொண்டாற்றியவர். அவரும் அவருடைய தாயாரும் படுகிற பாட்டை என்னால் சொல்ல முடியவில்லை!’ எனக் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கருணாநிதியால் தழுதழுக்க மட்டுமே முடிந்தது.
‘பிரசித்தி பெற்ற வழக்கறிஞரான ராம்ஜெத்மலானியை வாதாட வைத்தால், நிச்சயம் கனிமொழிக்கு வெயில் கிடைக்கும்’ என நம்பினார் கருணாநிதி. ஆனால், ஜெத்மலானியின் வாதமும் கனிமொழியைக் காப்பாற்றாமல் கைவிட்டதுதான் கருணாநிதியின் பெரும் துயரம்.
20ஆம் திகதி காலையில் கணவர் அரவிந்தனுடன் சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்தார் கனிமொழி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க. எம்.பிக்களுடன் மகளிர் அணியினரும் குழுமி இருந்தார்கள். ‘வெயில் மனு நிராகரிக்கப்பட்டால், அடுத்த கணமே கைதாக வேண்டியிருக்கும்!’ என்பதால், மகன் ஆதித்யனை கனிமொழி கோர்ட்டுக்கு அழைத்து வரவில்லை.
மீடியா வெளிச்சம் படாமல் பையனை வளர்ப்பதில் ஒரு காலத்தில் உறுதியாக இருந்தவர் கனிமொழி. ஆதித்யனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த ஒரு முன்னாள் அமைச்சரைக் கையெடுத்துக் கும்பிட்டு, ‘அவனைப் பெரிய ஆளா ஆக்கிடாதீங்க!’ என வேண்டியவர். ஆனால், கோர்ட்டுக்கு அனுதினமும் வந்து கையெழுத்திட வேண்டும் என உத்தரவு வந்தபோது, மகனோடு வரவேண்டிய இக்கட்டு கனிமொழிக்கு.
20ஆம் திகதி மதியம் தீர்ப்பை வாசித்த நீதிபதி சைனி, ‘குற்றச் சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் வலுவாக இருக்கின்றன. சாட்சிகளைக் கலைக்கும் வாய்ப்பும் அதிகம். அதனால், முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது!’ என அறிவிக்க, அரவிந்தனின் தோளில் சாய்ந்து கண் கலங்கினார் கனிமொழி.
மகளுக்கு எப்படியும் வெயில் கிடைத்துவிடும் என நம்பி இருந்த ராஜாத்தி அம்மாள் பதறி அடித்து டெல்லிக்குக் கிளம்பினார். ஆனால், அவர் வருவதற்கு முன்னரே, திஹார் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கனிமொழி, சிறைக்குள் போகும் முன்னர் கனிமொழி, அரவிந்தனைக் கூப்பிட, அவர் பதறியடித்து ஓடி வந்தார். ‘நான் ஆதித்யனிடம் பேசணுமே...’ எனக் குரல் உடைந்து சொல்லியிருக்கிறார் கனிமொழி. அதற்கு பொலிஸ் அனுமதி மறுக்க, ‘என்னைப் பிரிஞ்சு ஒரு நாள்கூட இருக்க மாட்டான். ஆதிகிட்ட நான் ஸாரி கேட்டதா சொல்லிடுங்க!’ என்ற படியே சிறை வளாகத்துக்குள் போனார் கனிமொழி.
சிறை விதிகளின்படி, வாட்ச், அணிகலன்கள் உள்ளிட்டவற்றைக் கழற்றிவிட வேண்டும். கைப்பையை நீங்கள் வைத்துக்கொள்ளலாம். ஆனால், மூக்குத்தியைக் கழற்றிக் கொடுங்கள்! என சிறை அதிகாரி சொல்ல, கனிமொழி எதிர்பாரா அதிர்ச்சியில் நிலை குலைந்தது அங்கேதான்.
அஞ்சாவது படிக்கிற காலத்தில் இருந்து மூக்குத்தி போடுறேன். அவசியம் கழற்றித்தான் ஆகணுமா? எனக் கலங்கினார் கனி. மூக்குத்தியை அவ்வளவு சுலபமாகக் கழற்ற முடியவில்லை. தி.மு.க வின் எம்.பிக்களான வசந்தி ஸ்டான்லியும் ஹெலன் டேவிட்சனும் பொலிஸ் அனுமதி பெற்று உள்ளே போக, அங்கே கனி அமர்த்தப்பட்டு இருந்த கோலம் அவர்களைக் கதறவைத்து விட்டதாம். சிறை சம்பிரதாயங்களை முடித்துவிட்டு, கண்ணீர் முட்ட உள்ளே போன கனிமொழி திரும்பத் திரும்பச் சொன்ன வார்த்தைகள்... ‘ஆதித்யனைப் பத்திரமாப் பார்த்துக்கங்க!
திஹார் சிறையில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன் சி.ஐ.டி நகருக்கு அழைத்து வரப்பட்டார். சிறை எப்படி இருக்கும், என்னென்ன சாப்பாடு, உள்ளே யாருக்கு அதிகாரம் அதிகம் போன்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். அதனால், 6ஆம் எண் அறையைப் பார்த்து கனிக்கு பெரிதாக அதிர்ச்சி இல்லை. அரை மணி நேரத்துக்குப் பிறகு கூடுதலாக இரண்டு தலையணைகள் கேட்டு வாங்கிக்கொண்டார். இரவு அவர் சரியாகத் தூங்கவில்லை. பெண் அதிகாரி ஒருவர் மூலம் மகனுடைய செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பச் சொன்னார். இந்த வருடம் ஆதித்யன் ஆறாம் வகுப்பு சேர வேண்டும். அவனைப் பற்றிய கவலைதான் கனிமொழியை வாட்டுகிறது! என்கிறார்கள் டெல்லி தி.மு.க. புள்ளிகள்.
அடுத்த நாள் பாட்டியாலா சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்தார் கனிமொழி. அதற்கு முன்னதாகவே கோர்ட்டுக்கு வந்து வராண்டாவில் காத்திருந்த ராஜாத்தி அம்மாள் மகளைக் கட்டிப் பிடித்துக் கலங்கினார். என்னால்தானே இத்தனையும்... என ராஜாத்தி சொல்லி அழ, அவரை அமைதியாக்கி இரகசியமாக ஏதோ சொன்னார் கனிமொழி. உடனே சரத் ரெட்டியையும். ஆ.ராசாவையும் சந்தித்து ஏதோ பேசினார் ராஜாத்தி அம்மாள். அப்போது கண்ணீர் மறைந்து... கோபமும் ஆவேசமுமாக இருந்தது அவருடைய முகம்.
ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி ஆதித்தியனை அழைத்து வர கனிமொழிக்கு மீண்டும் கண்ணீர் கோத்துக்கொண்டது. “அம்மா எப்போ வெளியே வரப்போகிறேன்னு தெரியலை பத்திரமா இரு. அம்மாவைப் பாக்கனும் என்னு அடம்பிடிக்காதே... எனத் தளும்பிய கண்களுடன் கனிமொழி சொல்ல, “நான் பத்திரமாப் பார்த்துக்கிறேன். நீங்க தைரியமா இருங்க!” என ஆறுதல் சொன்னார் பரமேஸ்வரி. டெல்லியில் உள்ள ஆ.ராசாவின் வீட்டில் அவருடைய மனைவி பரமேஸ்வரியின் பராமரிப்பில்தான் இருக்கிறார் ஆதித்யன். காந்தி அழகிரி, துரை தயாநிதி ஆகியோர் கோர்ட்டில் கனிமொழியைச் சந்தித்தனர். ‘அண்ணி...’ என அடக்க மாட்டாமல் கனிமொழி விசும்ப, அவரைத் தோளில் சாய்த்துத் தேற்றினார் காந்தி அழகிரி இதற்கிடையில், ஸ்டாலின் சொல்லி அனுப்பிய ஆறுதலும் கனிமொழிக்கு ஆறுதல் வார்த்து இருக்கிறது.
23ஆம் திகதி காலையிலேயே டெல்லி கிளம்பிய கருணாநிதி, திஹாருக்குப் போய் கனிமொழியைச் சந்தித்தார். அங்கே கனிமொழி சில விடயங்களை வேதனையோடு சொல்லிக் கலங்க, ‘நான் இங்கேயே தங்கிடவாம்மா?’ என தழுதழுத்திருக்கிறார் கருணாநிதி. விழிகள் துடைத்து தன்னைத்தானே தேற்றிக்கொண்ட கனிமொழி, ‘நீங்க கிளம்புங்கப்பா... நான் பார்த்துக்கிறேன். ஆதித்யனை கவனிச்சுக்கங்க!’ எனச் சொல்லியிருக்கிறார்.
எப்போதும் இல்லாத அளவுக்கு டெல்லியில் தற்போது 42 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக அனல் அடிக்கிறது. மக்கள் படும் துயரம் பொறுக்காமல் கருணாநிதி எத்தகைய முடிவையும் எடுப்பார் என்கிற நிலையில், டெல்லியின் அனல் இன்னும் அதிகமாகலா

இந்தியாவின் முதல் தலித் மில்லியனர்!

இந்தியாவின் முதல் தலித் பெரும் பணக்காரர் என்ற பெயரையும், பெருமையும் பெற்றுள்ளார் ராஜேஷ் சரையா.

டேராடூனில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ராஜேஷ். ரஷ்யாவில் ஏரோநாட்டிகல் என்ஜீனியரிங் படித்தார். தற்போது உக்ரேனில் வசித்து வருகிறார். அங்கு பல கோடி மதிப்புள்ள ஸ்டீல்மான்ட் பிரைவேட் லிமிட்டெட் என்கிற ஸ்டீல் நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறார்.

சமீபத்தில் டேராடூன் வந்திருந்த ராஜேஷ் கூறுகையில், மக்கள் முதலில் தங்களுக்குள் மாற வேண்டும். கொள்கைகளை மாற்ற வேண்டும். மனநிலையை மாற்ற வேண்டும். உலகைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். நமக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்பதை உணர வேண்டும் என்றார் ராஜேஷ்.

டேராடூனில் தலித் சிறு தொழிலதிபர்களின் வளர்ச்சி தொடர்பான கருத்தரங்கு நடந்தது. அதில்தான் கலந்து கொண்டு ராஜேஷ் பேசினார்.

அங்கீகரிக்கப்படாத பிரிவுக்கான தேசிய ஆணையத்தின் கணக்குப்படி, 88 சதவீத தலித் மக்கள் ஆதிவாசி மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய்தான் செலவழிக்கிறார்களாம்.

தலித் மக்கள் சிறுதொழில் பிரிவில் பெரும் பணக்காரர்களாக என்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை அறியும் நோக்கில்தான் இந்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ராஜேஷ் சரையாவின் வளர்ச்சி இந்திய தலித் தொழிலதிபர்களுக்கு உத்வேகம் அளிக்கும். மேலும் பல பெரும் பணக்கார தலித்களை நாடு காணும் நிலையும் ஏற்படும் என நம்புவோம்.
 

English summary
Rajesh Saraiya might be a name that is not known to many but for the people of his community, he is their superhero. Rajesh is India's first Dalit billionaire. Born in a middle class family in Dehradun, Rajesh studied aeronautical engineering in Russia. Now based in Ukraine, he runs a multi-national company SteelMont Pvt Ltd that deals in metals. "People have to change from inside. They have to change their ideology, their mentality and look around the world for what is happening. There are so many opportunities," Saraiya says.

மாநில அண்ணா பல்கலை கழகங்களுக்கு மூடுவிழா ? மீண்டும் சென்னைக்கு கொண்டுவர திட்டம்?

பிரிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகங்களை இணைக்க அதிமுக அரசு திட்டம்

சென்னை: திமுக ஆட்சிக்காலத்தில் ஊர் ஊருக்கு ஒரு அண்ணா பல்கலைக்கழகத்தை ஆரம்பித்து அண்ணா பல்கலைக்கழகத்தை கூறு போட்டனர். தற்போது அனைத்து பல்கலைக்கழகங்களையும் இணைத்து சென்னையில் மட்டும் இயங்கும்படி செய்ய அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளில் ஒன்று சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்தது.

இந்தப் பல்கலைக்கழகத்தைப் பிரித்து கோவை, திருச்சி, நெல்லை, மதுரை என பிரித்து கிளைகளை அமைத்தனர். அதன் பிறகு சென்னை அண்ணா, கோவை அண்ணா, நெல்லை அண்ணா, திருச்சி அண்ணா என்று அவை அழைக்கப்பட்டன.

தற்போது இந்த பல்கலைக்கழக பிரிவினையை ரத்து செய்து விட்டு ஒரே அண்ணா பல்கலைக்கழகமாக, முன்பு போல மாற்றியமைக்க அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது


100 பவுன் நகைக்காக நின்று போன சுனிதாவின் திருமணம்! பின்னணித் தகவல்கள்!!

மணமகள்(சுனிதா) எம்பிஏ படித்திருக்கிறார். மணமகன்(சதீஷ் ஜனார்தனன்) ஐடி துறையில் வேலை செய்கிறார். நிச்சியிக்கப்பட்ட திருமணத்தில் மணமகளுக்கு 100 சவரன்களும்., மணமகனுக்கு 25 சவரன்களும் போடுவதாக ஏற்பாடு. கூட இன்னொரு 100 சவரன்கள் கொடுத்தால்தான் கல்யாணத்தன்று மண்டபத்துக்கே வருவேன் என்று மணமகன் வீட்டார் சொன்னதை அடுத்து இந்த திருமணம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதுபோன்ற செய்திகள் ஒரு சிறு செய்திக்குறிப்பைப் போல் மட்டுமே பெட்டிக்குள் அடங்கிவிடுகிறது.  சமூகமும் இந்த நாற்றமெடுத்த குப்பைகளை தனக்குள் மூடிமறைத்து,  ”இந்த காலத்துலே யாருங்க வரதட்சிணை எல்லாம் வாங்குறாங்க, பெத்தவங்கதான் பொண்ணுங்களுக்கு கொடுக்கறாங்க,அதெல்லாம் ஊர்ல கிராமத்துலதாங்க” என்று சொல்லிக்கொண்டு  எப்போதும்போல இயங்கத் தொடங்கி விடுகிறது.  . இந்த செய்தியை  பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது.

தமிழ் மேட்ரிமோனி வாயிலாக இருகுடும்பங்களும் பரிச்சயம். ஜாதகத்தை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.  இருவருக்குமிடையே  பொதுவான உறவினர்கள் இருக்கவே, இருவரும்  தூரத்துச் சொந்தமென்று தெரிய வந்திருக்கிறது.  மணமகனுக்கு தந்தை இல்லை. தாயும், மணமகனது மாமாவும்தான்  சம்பிரதாயமாக கை நனைத்து, திருமணத்தை பேசி நிச்சயித்திருக்கிறார்கள். அப்போது மணமகனின்  தாய் சந்திரிகா தனது மகளுக்கு திருமணத்தின்போது 50 சவரன்கள் நகை போட்டதாகவும் சுனிதாவுக்கும் அதே அளவு நகை போட்டால் கவுரவமாக இருக்குமென்றும் சூசகமாக பெண் வீட்டாரிடம் சொல்லியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, கோயம்பேடு அருகில் உள்ள பெரிய ஹோட்டலில் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. நிச்சயத்துக்கு பின்னர்,
50 சவரன்களை 100 சவரன்களாக போடுமாறும் அது அல்லாது மணமகனுக்கு 25 சவரன்கள் போடவேண்டுமென்றும் மணமகன் வீட்டார் தொலைபேசி மூலமாக  வலியுறுத்தியிருக்கின்றனர். திருமணத்தை நிச்சயித்து விட்டதால் பெண் வீட்டாரும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். அதோடு, ஐந்து கிலோ வெள்ளிச் சாமன்களும் வேண்டுமென்றும் கூறியிருக்கின்றனர்.
சதீஷ்  டிசிஎஸ் நிறுவனத்தில் ஐ.டித்துறையில் வேலை செய்வதாகவும் மாதம் 45 ஆயிரம் சம்பளம் வாங்குவதாகவும், கையில் 42 ஆயிரம் வருவதாகவும் கூறியிருக்கின்றனர்.  தற்போது மும்பையில் வேலை செய்வதாகவும் திருமணத்துக்கு பின்னர் மும்பையில்தான் குடித்தனம் என்றும் தெரிவித்திருக்கின்றனர். மணமகனின் தாய் சந்திரிகா. கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர். கோயம்பேடு மார்க்கெட்டில் அவரைத் தெரியாதவர்கள் யாருமில்லை. தெரிந்தவர்களாக, தூரத்து உறவினர்களாக இருப்பதாலும், உறவினர் ஒருவர் மணமகன் வீட்டாரைப் பற்றி நல்லவிதமாகக் கூறியதாலும்  பெண் வீட்டார் மணமகனைப் பற்றி பெரிதாக எதுவும் கவலை கொள்ளவில்லை. நிச்சயத்துக்குப் பின்னர்தான்  வேலையைப் பற்றி மிகவும் வற்புறுத்திக் கேட்ட பின்னரே சதீஷ் டிசிஎஸ் பி.பி.ஓவில் வேலை செய்வதாக சொல்லியுள்ளனர்.
மணமகனின் மாமா ராகவன் என்பவர்தான் மணமகள் வீட்டாருடன் அடிக்கடி தொடர்பு கொண்டுள்ளார். ஒரு சில சம்பிரதாயங்களில் இரு குடும்பத்தினருக்கும்  கருத்து வேறுபாடுகள் வந்தபோது இதற்கெல்லாம் ஒப்புக் கொள்ளாவிட்டால் கல்யாணத்தை நிறுத்திவிடுவோம் என்றும் சொல்லியிருக்கின்றார். பொதுவாக திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் இதுபோல அபசகுனமாக பேசமாட்டார்கள் என்றும் மணமகனது மாமா, திருமணத்தை நிறுத்துவதிலேயே குறியாக இருந்ததாகவும் நினைவு கூர்கிறார் சுனிதா. திருமணம் இந்த மாதம் 17-ஆம் தேதி காலை ராமாவரத்தில் நடைபெறுவதாக இருந்தது.முதல்நாள் மாலை ரிசப்சன்.
திருமணத்துக்கு  இரண்டு நாட்கள் இருக்கும்போது மணமகனது மாமா நேராக வீட்டிற்கு வந்து, ஒப்புக்கொண்டதற்கும் மேலாக 100 சவரன் நகை போட்டால்தான் திருமணம் நடக்குமென்று கூறியிருக்கிறார். பெண் வீட்டார், எப்படி அதற்குள் 100 சவரன் போடமுடியுமென்றும் இரண்டு நாட்களுக்குள் கொடுக்க முடியாதென்றும் கூறியிருக்கின்றனர். கொடுக்காவிட்டால் திருமணம் நடக்காதென்று கறாராக கூறிவிட்டுச் சென்றிருக்கிறார், ராகவன். சுனிதாவின் பெற்றோர் சதீசின் தாயை தொடர்பு கொண்டபோது ராகவன் போனிலும் மிரட்டியிருக்கிறார். கூட 100 சவரன்கள் இல்லாவிட்டால் மணமகன் மண்டபத்துக்கு வரமாட்டாரென்றும் சொல்லியிருக்கிறார்கள். பத்திரிக்கை அச்சடித்து ஊரெல்லாம் கொடுத்த பின்னால் இது போல சொல்வது சரியல்ல என்று பெண் வீட்டாரும் கேட்டிருக்கிறார்கள்.
அதோடு, ஞாயிற்றுக்கிழமை சுனிதா பியூட்டி பார்லர் சென்று கைகளில் மருதாணியிட்டு ஒப்பனை செய்து கொண்டு மண்டபத்தில் காத்திருந்தார். மணமகன் வீட்டாரோ அவர்களது உறவினர்களோ ஒருவரும் வரவில்லை. இரவு எட்டரை மணிவரை பார்த்த பின்னர், பெண் வீட்டார் மணமகன் வீட்டாரை தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார்கள். ரீச் ஆகவில்லை.
உடனே சில உறவினர்கள் பெரம்பூரில் உள்ள மணமகன், அவரது அக்கா, மாமா வீட்டுக்குச் சென்று பார்த்திருக்கிறார்கள். வீடு பூட்டப்பட்டிருக்கிறது. யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை. சனிக்கிழமை மாலையே அவர்கள் வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பி விட்டதாக அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அவர்கள் பக்கத்து சில உறவினர்களிடம் கேட்டபோது, சுனிதாவின் பெற்றோர் சதீசின் வீட்டை சுனிதாவின் பெயரில் எழுதித்தர கேட்டதாகவும் அப்போதுதான் திருமணம் நடக்குமென்று சொன்னதாகவும், அதனால் திருமணத்தை நிறுத்தி விட்டதாகவும் சதீசின் தாய் தெரிவித்ததாக சொல்லியிருக்கிறார்கள். அப்போதுதான், சதீஷ் வீட்டினர் திட்டமிட்டு இந்த திருமணத்தை நிறுத்தியிருப்பது சுனிதாவின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் தெரியவந்துள்ளது. ”எங்கள் வீட்டிற்கு நான் ஒரே பெண். இருக்கும் சொத்தெல்லாம் எனக்குத்தானென்று முன்பே பேச்சு. இதில், எதற்காக சதீசின் வீட்டை எழுதிக் கேட்கப் போகிறார்கள்? இதில் ஏதாவது லாஜிக் இருக்கிறதா? ”என்கிறார் சுனிதா.
அதன்பின் சுதாரித்துக் கொண்ட சுனிதா வீட்டினர் ஆதம்பாக்கத்தில் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.  வரதட்சிணைக் கொடுமையால் திருமணம் நின்று போனதாக  போலீசில் கேஸ் கொடுத்திருக்கிறார்கள்.
சதீசுக்கு சொந்த ஊர் ஆற்காடு. அங்கும், மும்பையிலும் போலிசார் தற்போது தேடி வருகிறார்கள். சதீசின் மாமா ராகவன் எக்மோரில் ஒரு ஜூஸ் கடை வைத்திருக்கிறார். அவர்தான் காலையில் கடையைத் திறந்து கொடுத்துவிட்டு மாலையில் பூட்டிவிட்டு பணத்தை வாங்கிச் செல்வாராம். கடையைப் பார்த்துக் கொள்பவர் 70 வயது முதியவர் ஒருவர்.அங்கும் கடந்த மூன்று நாட்களாக சுனிதாவின் உறவினர்கள் சென்று பார்த்து வருகிறார்கள். அவர் வருவதேயில்லையாம். அதோடு, அந்த முதியவருக்கும் எந்த தகவலும் தெரியவில்லையாம்.
அந்த மாமாவுக்கு மூன்று மகள்களென்றும் அவரது மகள்களில் ஒருவரை திருமணம் செய்து கொடுக்க அவருக்கு விருப்பமிருந்ததாக தெரிகிறது. அவரால் இவ்வளவு வரதட்சிணை கொடுக்க முடியாததால், சதீசின் தாய் சந்திரிக்காவுக்கு அதில் விருப்பமில்லை. அதனாலேயே சுனிதாவை நிச்சயம் செய்திருக்கிறார்கள். ஆனாலும், ராகவன் இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்த விரும்பியிருக்கலாமென்றும் அதற்காக இந்த திட்டத்தை நிறைவேற்றியிருக்கலாமென்றும் சுனிதாவின் உறவினர்கள் கருதுகிறார்கள்.
சதீஷ் எப்படியாவது தண்டிக்கப்படவேண்டுமென்று கோபத்தோடு இருக்கிறார்கள் சுனிதாவின் வீட்டினர். நான் வீட்டிற்குச் சென்றபோது சுனிதாவோடு ஒரு சில நண்பர்கள் இருந்தனர். அவர்களும் மிகுந்த கோபத்தோடு இருந்தனர்.  சுனிதாவின் பெற்றோர் மணமகன் வீட்டாரைப் பற்றி நன்றாக விசாரித்திருக்க வேண்டுமென்றும் இப்படியா அசால்டாக இருப்பதென்பதும்தான் அவர்களுடைய கோபம். அதோடு, சதீஷ் போன்ற பொறுக்கிகளை சும்மா விடக்கூடாதென்றும்  வரதட்சிணை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பரவ வேண்டுமென்றும் உறுதியாகக் கூறினர்.
“அவனைப்பாருங்க, எவ்ளோ டீசண்டா இருக்கான், அவனைப் பாத்தா இந்த மாதிரின்னு சொல்ல முடியுமா” என்றார்கள், சதீசின் படத்தைக் காட்டியபடி.  ஆமாம், பார்க்க டீசண்டாக இருந்தாலும் சதீஷ் செய்தது பச்சை அயோக்கியத்தனம்தான். பணத்தாசைக்கும் நுகர்வு கலாசாரத்துக்கும் டீசண்டெல்லாம் இல்லையே!
முதலிலேயே 100 சவரன் என்று கேட்கும்போதே அதாவது வரதட்சிணை கொடுத்துதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலை வரும்போதே நீங்கள் எதுவும் ஆட்சேபிக்க வில்லையா என்று சுனிதாவிடம் கேட்டதற்கு  ”வரதட்சிணையை வேண்டாமென்று இளையோராகிய நாங்கள் சொன்னாலும் பெற்றோர் கேட்க மாட்டார்கள். உறவினர்களுக்காகவாவது தங்க நகைகள், சீர்கள்  போட்டாக வேண்டியது கட்டாயம். அதுவும் எங்கள் சாதியில் (முதலியார்) குறைந்தது ஜம்பத்துக்கும் அதிகமாக போடுவார்கள். சாப்பாட்டிற்காக அதிகம் செலவு செய்வார்கள்.” என்றார்.

வரதட்சிணையை பல்வேறு வழிகளில் நியாயப்படுத்தும் சமூகம்!


வரதட்சிணையால் நின்றுபோன திருமணம்! அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட்!!
100 பவுன் நகைக்காக திருமணத்தை நிறுத்திய சதீஷ் - கோட்டு சூட்டு டீசெண்ட் உடையில்!
அவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. சாதிப் பெருமைக்காகவும், தங்கள் பணபலத்தை பறை சாற்றவும் பணம் படைத்தவர்கள் திருமணத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.  முதலியார்,நாடார், தேவர், கம்மா நாயுடு போன்ற சாதிகளில் 100 சவரன் என்பது மிகவும் சாதாரணமாம், அதோடு, பெண்களுக்கும் நகை மற்றும் சீர் செனத்தியோடு புகுந்த வீட்டுக்குச் சென்றால்தான் மதிப்பு என்ற எண்ணமும் இருக்கிறது. இயல்பாகவே, பொருள் இருந்தால்தான் தனக்கு மதிப்பு என்ற சமூக அடையாளம் குடும்பங்களிலும் பிரதிபலிக்கிறது.
என்னதான்  புகுந்த வீட்டில் சமையல் முதற் கொண்டு பாத்ரூம் வரை சகல வேலைகளையும் தானே செய்வதாக இருந்தாலும் தனது மதிப்பு என்பது தன்னுடன் கொண்டு வந்திருக்கும் அல்லது தான் அணிந்திருக்கும் தங்க நகைகளில் இருப்பதாக எண்ணிக் கொள்வது வேதனையானது. வீட்டுவேலைகள் செய்வதை தவறென்று சொல்லவில்லை. ஆனால், விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒருவீட்டுக்கு மருமகளாகி விட்டால் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாக வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு இருக்கிறது. ஒரு வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் கொண்டு வந்தாலும் மணப்பெண் அடுத்த நாளே அந்த வீட்டின் சமையற்காரியாகவும், வேலைக்காரியாகவும் சமயங்களில் கால் மிதியடியாகவும் மாறிவிடவேண்டும். மணமகனிடம் அது போன்ற கடமைகளை நமது சமூகம் எதிர்பார்ப்பதில்லை. அவன் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வதையே இழிவாக கருதுகிறது.
தங்கள் பெண்ணுக்கு நிலபுலன்களை, நகைகளை அளிப்பது  அவர்களுக்கு தாங்கள் அளிக்கும் பாதுகாப்பாகக் கருதுகிறார்கள் பெற்றோர்கள். பெண்கள் இரண்டாந்தரமாக நடத்தப்படும் நமது சமூகத்தில் இதனை புரிந்து கொள்ள முடிகிறது. கணவன் இறந்துவிட்டால் அல்லது அவசரத்துக்கு உதவும் என்ற எண்ணத்தில் வரதட்சிணை பெண்ணுக்கு ஒரு முதலீடாக பயன்படலாம். எனினும், திருமணம் என்பது பெற்றோருக்கு மகிழ்ச்சியானதானதொன்றாக இல்லாமல் பெரும் சுமையாக மாறிப் போய்விடுவதுதான் நடைமுறையில் காணப்படும் சோகம். திருமணம் என்பது இரு குடும்பங்களுக்கிடையிலான ஒரு பிசினஸ் ஒப்பந்தம் என்பதாகத்தான் இருக்கிறது.
முன்பெல்லாம் பெண் படித்திருந்தால், ”பொண்ணு படிச்சிருக்கு” என்று  சொல்லி வரதட்சிணை குறைவாக போடுவதைப் பார்த்திருக்கலாம். அதாவது படிப்பே ஒரு இன்வெஸ்ட்மெண்ட் மாதிரிதான்,  பெண் வேலைக்குப் போகிறாள்,அந்த சம்பளம் உனக்குத்தானே வரப்போகிறது  அப்படி வேலைக்குப் போகவில்லையென்றால், கல்யாணத்துக்குப் பிறகு உன் மனைவியை நீ வேலைக்கு அனுப்பிக்கொள் என்பது அதன் உள்ளர்த்தம். மனைவி வேலைக்கு போவதில் தப்பில்லை. ஆனால், சம்பளத்தை வாங்கி கணவன் கையில் கொடுப்பதற்காக வேலைக்கு போவது என்பது மறைமுக வரதட்சிணைதானே!
பெண் பிறந்து விட்டாலே  செலவுதான் என்ற எண்ணமே நமது சமூகத்தில் மேலோங்கி இருக்கிறது. பெண்கள் சகல துறைகளிலும் முன்னேறி விட்டார்கள் என்றாலும் இன்றும் அது பெருமளவு மாறிவிடவில்லை. மாறாக, அதிகரித்திருக்கிறது. ”எந்த குழந்தைன்னாலும் பரவாயில்ல” என்று கூறும் நகரத்துப் பெற்றோர்களோ இரண்டாவது குழந்தையும் பெண்ணாகி விட்டால் முகத்தை தொங்கப் போட்டுக் கொள்வதையோ அல்லது மனதுக்குள் மறுகுவதையோ காணமுடிவது இதனால்தான். கிராமப்புறங்களில் சொல்லவே வேண்டாம்.
கொஞ்சம் உற்றுப் பார்த்தால், நகர்ப்புறமாக இருந்தாலும், கிராமப்புறமாக இருந்தாலும், ஒரு பெண் தனது குடும்பத்தினருக்கு, தந்தைக்கு, அண்ணனுக்கு, பின்னர் புகுந்த வீட்டினருக்கு சொந்தமான பொருளாகத்தான் எப்போதும் இருக்கிறாள். அவளைப் பற்றிய அனைத்தையும் மேலே குறிப்பிட்டவர்களே தீர்மானிக்கின்றனர். என்ன உடுத்துவது, என்ன படிப்பது என்பது முதல் யாரைத் திருமணம் செய்து கொள்வது என்பது வரை தந்தையோ, அண்ணனோ, உற்றார் உறவினர்களோ, சோசியரோ, கணவனோதான் தீர்மானிக்கிறார்கள்

அதிமுக அரசின் சா(சோ)தனைகள் என்ற பெயரில் மதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு

தமிழகத்தில் அதிமுக அரசு பொறுப்பேற்று இரண்டுவார காலம் ஆன நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அதிமுக அரசின் சா(சோ)தனைகள் என்ற பெயரில் மதிமுகவினர் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். இந்த சுவரொட்டி விவகாரம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சுவரொட்டியில்,
சட்டசபை இடமாற்றம் ரூபாய் 1100 கோடி நஷ்டம்
சமச்சீர் கல்வி திட்டம் ரத்து ரூபாய் 500 கோடி இழப்பு
ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் கொள்ளை சட்டம், ஒழுங்கு-சந்தி சிரிப்பு
சட்ட, மேல்-சபை முடக்கம் சர்வாதிகார ஆட்சியின் துவக்கம்
இவ்வாறு வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல், மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், அதிமுகவின் சர்வாதிகார போக்கு தொடங்கியுள்ளது. ஆட்சி பொறுப்பேற்று ஒரு வார காலத்திற்குள்ளாகவே, ஒரு சர்வாதிகார ஆட்சிதான் கொடுப்பேன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு சட்டசபை இடமாற்றம், சமச்சீர் கல்வி ரத்து என்று ஆயிரக்கோடி ரூபாயான மக்களின் வரிப்பணத்தை இன்றைக்கு பாழாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளோம் என்றார்.

மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம்

சென்னை: என் மகன் விஜய ஸ்ரீஹரியை மீட்கும் வரை நான் ஓயமாட்டேன். இன்று முதல் நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்று நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.

நடிகை வனிதாவுக்கும், அவரது மூத்த கணவர் ஆகாஷுக்கும் தங்கள் மகன் விஜயஸ்ரீஹரி குறித்து பல மாதங்களாக தகராறு நடந்து கொண்டிருக்கிறது. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை மாலை வரை விஜயஸ்ரீஹரி ஆகாஷுடனும், வார இறுதி நாட்களில் தாய் வனிதாவுடனும் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து சில மாதங்களாக வனிதா சத்தம் இல்லாமல் இருந்தார். தற்போது மீண்டும் மகனுக்காக போராட வந்துவிட்டார்.

இது குறித்து அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து நிருபர்களிடம் கூறியதாவது,

எனது மகன் விஜயஸ்ரீஹரியை மீட்டுத் தருமாறு கமிஷனர் திரிபாதியிடம் கடந்த வாரம் புகார் கொடுத்தேன். அவரும் இணை கமிஷனரை விசாரிக்க உத்தரவிட்டார். எனினும் விசாரணை ஒழுங்காக நடக்கவில்லை.

சட்டப்படி, நியாயப்படி எனது மகன் என்னுடன் தான் இருக்க வேண்டும். இதற்காகத் தான் நான் கடந்த 7 மாத காலமாக போராடிக் கொண்டிருக்கிறேன். தற்போதைய அரசு என்னுடைய பிரச்சனைக்கு தீர்வு காண உதவும் என்று நம்புகிறேன்.

எனது மகனை அழைத்துவருவதற்காக நேற்றிரவு நான் ஆகாஷ் வீட்டிற்குச் சென்றேன். ஆனால் நான் குடித்துவிட்டு தகராறு செய்ததாக சில போலீசார் கமிஷனரிடம் தெரிவித்துள்ளனர். மகனுக்காக ஏங்கும் என்மீது இப்படியெல்லாமா பழி சுமத்துவது.

நான் கமிஷரிடம் நடந்த எல்லாவற்றையும் தெரிவித்துவிட்டேன். அவரும் எனது மகனை மீட்டுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.

விஜயஸ்ரீஹரியை அழைத்து வருவதற்காக கடந்த மாதம் விருகம்பாக்கம் சென்றேன். அப்போது ஆகாஷ் என்னை நடுத்தெருவில் வைத்து அடித்தார். இது குறித்து நான் விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தும் அவர்கள் வழக்கும் பதிவு செய்யவில்லை, எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பற்றியும் கமிஷனரிடம் கூறினேன்.

எனது மகனை மீட்கும் வரை ஓயமாட்டேன். அதுவரை நான் தண்ணீர் கூட குடிக்க மாட்டேன். இன்று முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளேன் என்றார்.

அதிர்வை ஏற்படுத்தும் ஆண் - பெண் விகிதம்: உரத்த சிந்தனை

"நமது சென்சஸ், நமது எதிர்காலம்' - இது, 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முத்திரைச் சொல். ஆனால், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகள், நமது எதிர்காலம் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகை, வேலையின்மை, குறைந்து வரும் பெண் குழந்தைகள் என, பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

கடந்த, 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், இந்தியாவின் மக்கள் தொகை, 102 கோடி. 1991ல், 84.63 கோடியாக இருந்தது. இவ்விரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கும் இடையிலான பத்தாண்டுகளில், மக்கள் தொகை, 21.34 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 2001 முதல், 2011 வரையான, பத்தாண்டுகளில், 18.1 சதவீதம் அதிகரித்து, 121 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம், குறைந்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 1,000 ஆண்களுக்கு பெண்களின் எண்ணிக்கை, 933 என்றிருந்தது. இது, கிராமப் பகுதிகளில், 946 ஆகவும், நகர்ப்புறங்களில், 900 ஆகவும் இருந்தது. கடந்த பத்தாண்டுகளில், அறிவியல் வளர்ச்சி காரணமாக, மருத்துவத் துறையில் மாற்றங்கள், நாகரிக வளர்ச்சி காரணமாக, ஆண் - பெண் விகிதத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், அதாவது, 1901ம் ஆண்டு, 1,000 ஆண்களுக்கான பெண் குழந்தைகள் எண்ணிக்கை, 972 என இருந்தது. அதன் பிறகு, சில மாநிலங்களில் மெல்ல குறையத் துவங்கியது. ஆனால், கடந்த, 40 ஆண்டுகளாக பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, பெரும்பாலான மாநிலங்களில் குறைந்து கொண்டே வருகிறது.

காலங்காலமாக பெண் தான் எல்லாவற்றுக்கும் பிரக்ருதி என்றபோதும், சமூகத்தில் எல்லாரும் ஆண் குழந்தையைத் தான் விரும்புகின்றனர். ஆண் குழந்தை, சமூகத்தில் அந்தஸ்தை பெற்றுத் தரும், கவுரவத்தின் சின்னம் என்றெல்லாம் கருதப்படுகிறது. மேலும், எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பில், ஆண் குழந்தையை வளர்ப்பது, படிக்க வைப்பது என அனைத்து செலவினங்களும் முதலீடாகக் கருதப்படுகிறது. ஆனால், பெண் என்றால் வளர்ப்பு, படிப்பு, திருமண செலவு போன்ற அனைத்தும், செலவினங்களாகவே கருதப்படுகிறது. காலங்காலமாக நிலவிவரும் இந்த பாலின பாகுபாடு, கிராமப் பெண்களிடம் தான் அதிகமாக இருந்தது. ஆனால், காலப்போக்கில், நகர்ப்புற பெண்களிடமும் அதிகரித்து வருகிறது. மக்கள் மத்தியில் நிலவும் இத்தகைய நம்பிக்கையால், பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில், மருத்துவத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றத்தால், கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறியும் முறை, புழக்கத்திற்கு வரும் முன், எந்த குழந்தையாக இருந்தாலும், ஏற்றுக் கொள்ளும் பழக்கமும், பக்குவமும் பெண்களிடம் இருந்தது. ஆனால், இந்த முறை புழக்கத்திற்கு வந்து பிரபலமடையத் துவங்கிய பின், மக்களின், குறிப்பாக பெண்களின் மனநிலை மாறிவிட்டது. கருவில் இருப்பது ஆண் என்றால் ஏற்றுக் கொள்வதும், பெண் என்றால், கருக்கொலையில் ஈடுபடுவதும், இன்று, சாதாரண நிகழ்வாகிவிட்டது. இதையடுத்து, கருக்கொலைக்கு எதிராக, நடைமுறையில் இருந்த சட்டத்தில், 2003ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டதுடன், இச்சோதனைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதற்கான பலன், எதிர்பார்த்த அளவில் கிடைக்கவில்லை.

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறிந்து கூறும் முறை, கிராமப்புற பெண்களைக் காட்டிலும், நகர்ப்புற பெண்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாகவுள்ளது. இதன் விளைவாக, கடந்த, 50 ஆண்டுகளாக பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, கிராமப்புறங்களைக் காட்டிலும், நகர்ப்புறங்களில் அதிகளவில் குறைந்து வருகிறது. கடந்த, 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், ஆறு வயது வரையான, 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 927 பெண் குழந்தைகள் என்றிருந்த நிலை, இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 914 ஆகக் குறைந்துள்ளது. மேலும், ஆறு வயது வரையான குழந்தைகளின் எண்ணிக்கை, 15.58 கோடி. இது, 2001ம் ஆண்டைக் காட்டிலும், 50 லட்சம் குறைவு.

நம் நாடு சுதந்திரமடைந்த பின், முதன் முறையாக நடந்த, 1951ம் ஆண்டு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது இருந்த நிலை, பல்வேறு மாநிலங்களில் மாறிவிட்டது. எழுத்தறிவில் முன்னிலை வகிக்கும் கேரளா, இதில் முன்னுதாரணமாக விளங்குகிறது. இம்மாநிலத்தில், கடந்த, 50 ஆண்டுகளாகவே பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கேரளாவில், 1951ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 1,028 ஆக இருந்த பெண்கள் எண்ணிக்கை, 2001ல் நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 1,058 ஆக அதிகரித்து, தற்போது, 1,084 ஆக உயர்ந்துள்ளது. அரியானா, இமாச்சல பிரதேசம், மிசோராம் போன்ற பல்வேறு மாநிலங்களிலும், தனிநபர் வருமானம் அதிகமுள்ள, "இந்தியாவின் உணவுக் களஞ்சியம்' என வர்ணிக்கப்படும் பஞ்சாப் மாநிலத்திலும், பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் அதிகப்படியான மக்கள் தொகையைக் கொண்டதும், மிகப் பெரியதுமான உத்தர பிரதேச மாநிலத்தில், பெண்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதேபோன்று, நாட்டின் தலைநகராகவும், உயர்வகுப்பினர் அதிகமாக வசிக்கும் பகுதியாகவும் விளங்கும் டில்லியிலும், பெண்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தென் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தமிழகத்திலும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, குறைந்து வந்துள்ளது. தமிழகத்தில், 1901ல், 1,044 ஆகவும், 1951ல், 1,007 ஆகவும் இருந்த பெண்கள் எண்ணிக்கை, 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 946 ஆகக் குறைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் மதுரை, சேலம், தர்மபுரி மாவட்டங்களில், பெண் சிசுக்கொலை அதிகமாக நடைபெறுவதாக கண்டறியப்பட்ட பகுதிகள். இதையடுத்து, இம்மாவட்டங்களில், 1992ம் ஆண்டு, தொட்டில் குழந்தைத் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பின், இத்திட்டம் சரியான கவனிப்பின்றி புறக்கணிக்கப்பட்டது. இத்திட்டம், பெண் சிசுக்கொலை சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாவிட்டாலும், இதனால், சிசுக்கொலை சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன. ஒவ்வொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிவும், இவ்வகையான பல அதிர்ச்சி தகவல்களையும், ஆட்சியாளர்களின் அலட்சியத்தையும் உணர்த்துவதாகவே இருந்து வருகிறது. ஆனால், எதிர்கால சமூகத்திற்கு சவால் விடுக்கும் வகையில், பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிக அளவாக குறைந்துள்ளது. இனிவரும் காலங்களில், அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், மக்கள் மத்தியில் ஏற்படும் மன மாற்றங்களும் தான், இப்பிரச்னைக்கு தீர்வாக அமையும். இ-மெயில்: subramani.ps71@gmail.com

பெ.சுப்ரமணியன், சமூக ஆர்வலர்

சிறுநீரக கற்களை கரைக்கும் வெங்காயம்

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் உள்ள "அலைல் புரோப்பைல் டை சல்பைடு" என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது.வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.
1. வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.
2. குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம் கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.
3. யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.
4. முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.
5. செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.
6. சீதோஷ்ண நிலை மாறும் போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.
7. புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.
8. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
9. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.
10. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர பல் வலி, ஈறு வலி குறையும்.
11. அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்

புலிகளின் பதுமனுக்கு தடுப்புக் காவல் உத்தரவு

 புலிகளின் திருகோணமலைக் கட்டளைத் தளபதியாக இருந்த பதுமனுக்கு திருமலை உயர்நீதிமன்றம் தடுப்புக்காவல் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் கட்டளைத் தளபதி பதுமன் மீது திருகோணமலை உயர் நீதிமன்றத்தில் பொலிசாரால் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
சிவசுப்பிரமணியம் வரதநாதன் எனும் இயற்பெயர் கொண்டவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பதுமன் என்ற பெயரில் அறியப்பட்டிருந்தவருமான அவரை பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவின் பொலிஸார் நேற்று திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நிறுத்தியிருந்தனர்.
விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்டக் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட காலத்தில் அவருடைய கட்டளையின் கீழ் விடுதலைப் புலிகள் பல இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அத்துடன் ஏராளமான படையினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் அவருக்கும் தொடர்புகள் இருப்பதாகவும் பொலிசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
அவ்வாறான சம்பவங்கள் காரணமாக பதுமனுக்கு எதிராக 1979ம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 48வது சட்டப்பிரிவின் பிரகாரம் பயங்கரவாதத்துக்கு உதவியளித்தமை மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பொலிசார் முன்வைத்த விடயங்கள் மற்றும் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட திருகோணமலை உயர்நீதிமன்றம் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி பதுமனை ஜுலை 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ​நேற்று இரவு மருத்துவ சிச்சைக்காக சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரஜினிக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் கட்டமாக மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் சுவாசக்கோளாறுக்கு சிகிச்சை தரப்படுவதாகவும், பிரபல சுவாசக்கோளாறு சிகிச்சை மருத்துவர் கியான் சங் ஒங் சிகிச்சை அளித்து வருவதாகவும், ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை தரப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசியாவிலேயே மிகவும் சிறந்த மருத்துவமனை என கருதப்படும் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் அமர்சிங் இம்மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

ஜெர்மனில் ஈழத்தமிழர் பொருளியல் செனட்டராக நியமனம்

இலங்கையின் வடக்கே யாழ். குடாநாட்டை பிறப்பிடமாகக் கொண்ட தமிழர் ஒருவர் ஜொ்மனியில் பொருளியல் செனட்டராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இயன் கிருகரன் என் 72 வயதுடைய தமிழரே ஜெர்மனியின் ஹம்பேர்க் பகுதியின் பொருளியல் செனற்றராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறையில் 1939 ஆம் ஆண்டு பிறந்த அவர் 1970 காலப்பகுதியில் ஜெர்மனிக்கு சென்றிருந்தார்.

அதற்கு முன்னர் தனது கல்வியை இங்கிலாந்தில் நிறைவு செய்திருந்த இவர், ஜொ்மனியில் கொள்கலன்களை வாடகைக்கு விடும் உலகின் மிகப்பெரும் நிறுவனத்தில் பணியாற்றி பின் சொந்த நிறுவனமொன்றை ஆரம்பித்தார் என தெரியவருகிறது.

ஜொ்மனியில் அமைச்சர் நிலைக்கு உயா்ந்து ஈழத்தமிழர்களுக்குப் பெருமை சோ்த்துள்ள கிருகரன் வசிக்கும் ஜெர்மன் நாட்டில் அரை இலட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் ஈழத்தமிழ் மக்கள் வசிக்கின்றனர்.

புலியை பிடித்து கூண்டிலடைத்து போற்றிப் புகழுகிற உலகம் !!


- எஸ்.எம்.எம்.பஷீர்
“நூறு ஆண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசிபோல் வேர் கொள்ளாதே”  (அதிவீரராம பாண்டியர்)
இலங்கை அரசின் தகவல்களின் அடிப்படியிலே நெதர்லாந்தில் புலிப் பயங்கரவாதிகளின் முக்கியஸ்தர்கள் சிலர் தொடராக கைது செய்யப்பட்டுவருவதனை செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது. ஆனால் இந்த பயங்கரவாதிகள் மீண்டும் புலிகளின் பயங்கரவாதத்தை இலங்கையில் கட்டியெழுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் என்றும் இவர்கள் மீது நெதர்லாந்து தமிழ் மக்கள் வழங்கிய புகார்களை அடிப்படையாகக் கொண்டே இவர்களை கைது செய்யப்பட்டதாகவும் முதலில் செய்திகள் வந்தன. என்றாலும் இவர்களின் கைதுகள் நெதர்லாந்து நாட்டின் பயங்கரவாத தடை சட்டப்படி நடை பெற்றதாக குறிப்பிடப்படுகிறது.
அண்மையில் நோர்வேயில் கைதுசெய்யப்பட்ட நெடியன் நெதர்லாதில் கைது செய்யப்பட்ட பலர் குற்றவியல் சட்ட விசாரணைகளுக்கு உட்பட்டிருக்கிறார்கள் என்பதுடன் , அவர்கள் தொடர்பான கடிதுகளின் மூலம் தெரியவரும் தகவல்களை கொண்டு நோர்வே நாடும் ஐரோப்பிய ஒன்றிய நாடு என்ற வகையில் புலிகளை பயங்கரவாதிகளாக் பிரகடனப்படுத்திய தமது கடப்பாட்டில் எவாறு இறுக்கமாக நடக்கப்போகிறது என்பதும் நோர்வே அரசு நெடியனை கையளிக்குமாறு கோரும் இலக்கை அரசின் கோரிக்கைக்கு என்ன சொல்ல போகிறார்கள் என்ற கேள்விகள் நிச்சயமாக எதிர்மறையான விடைகளையே வழங்கப்போகிறது. ஏனெனில் பயங்கரவாதம் என்பதும் நாடுகடத்தல் என்பதும் அமெரிக்காவின் வரைவிலக்கனத்துக்குட்பட்டு நடப்பதாகும் என்பதுவே இன்றைய உலகின் நியமங்களாக உறுதிசெய்யப்பட்டு வருகின்றன.
நோர்வேயில் சின்னம் சிறுசுகளுடன், சிறுவர்களை தற்கொலை குண்டுதாரிகளாக்கி அழித்த நெடியவன் போலீஸ் பரிசோதனைகளை  தாண்டி எவாறு பணியில் அமர்த்தப்பட்டார் என்ற கேள்விக்கப்பால் , உலகின் சிறுவர்களை இயக்கத்தில் சேர்த்து அழித்தொழித்த மாபெரும் மனித கொடுமையினை செய்த நெடியவன் போன்றோர் எவ்வித தண்டனையுமில்லாது மேற்குலகில் மீண்டும் சிறுவர்களுடன் சம்பந்தப்பட்ட பணியில் நோர்வே நெடியவனை அமர்த்தியது என்பது நோர்வே என்ன புலிகளை போஷிக்க புதிய உபாயங்களை கண்டுபிடுத்துள்ளார்களாஎன்ற கேள்வியையும் எழுப்புகிறது     
நெடியவன் கைது ஒருபுறம் விசாரணைகளின் பின்னர் சாதாரண குற்றவியல் சட்டத்தின் பின்னர் அவர் விடுவிக்கப்படலாம் என்ற கருத்து வெகுவாக நிலவுகிறது, இதனையே குணரத்த கூட குறிப்பிடுகிறார். நோர்வே தொடர்புகள் மூலம் உறுதிப்படுத்தமுடியாத  தகவல்களின் படி அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. புலிப் பயங்கரவாத ஆதரவாளரும் புகிகளுக்கு ஆயுதங்கள் வாங்க துணை புரிந்தார் என்று கூறப்பட்ட சாந்தன்  பிரித்தானியாவில் கைது செய்தப்பட்டு விசாரணைகள் நடந்த பொது, அவரை விடுவிக்க புலிகள் தமது ஜனநாயக் கவசங்களுடன் பல முயற்சிகளை செய்த்தனர், அதில் ஒன்று உலக சமாதான ஆதரவுக் குழு , ஐக்கிய இராச்சியம் என்று ஒரு நிறுவனமயப படுத்தப்பட்ட பிரச்சார வேலைத்திட்டத்தின் மூலம் சாந்தன் ஜெனீவாவில்  நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டாரென்றும் அந்த பேச்சுவார்த்தைகளை பிரித்தானிய ஆரசு  நடத்த உதவியதென்றும் அதனால் சாந்தன் பிரித்தானிய அரசுக்கு பயங்கரவாத குற்றசாட்டு தொடர்பில் பதில் கூற தேவை இல்லை என்று கூட அவரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கூறினார். எவாறேனினும் சாந்தன் ஆயுதங்கள் வாங்க முயன்ற ஆதாரங்கள் அவருக்கு எதிராக சான்றாய் அமைந்தன. எனவே இறுதியில் சிறை செல்ல நேரிட்டது. ஆனால் ஒன்று நிச்சயமாக சிறை மீண்டது இவர் " சிறை மீண்ட செம்மலாக" வரவேற்கப்படுவார் என்பதும் மீண்டும் தமது தனி நாட்டு கனவுக்கு அர்பணிப்புடன் செயற்படுவார் என்பதும் , திருந்தாத உள்ளங்களில் பலர் இன்னமும் இருந்து கொண்டிருப்பதை கொண்டு எதிர்வு கூறக்கூடியதாக உள்ளது. மேற்குலகின் பாரபட்ச ஜனநாயக  நடைமுறைகள் அதற்கு வாய்ப்பளிக்கும்.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இராக் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய தனது சிறப்பு தொழிசார் உயிரியல் விஞ்ஞான தகைமையின் அடிப்படையில் அபிப்பிராயத்தினை முன்வைத்ததுடன் டோனி பிளயரின் முந்திய தொழிற்கட்சி அரசு இடைச்செருகல் செய்த மிகயூட்டிய தகவல்கள் பற்றி வெளிப்படையாக குறிப்பீட்டு சர்ச்சையை ஏற்படுத்திய கலாநிதி   டேவிட் கெல்லி என்பவரின் மரணம் குறித்து பல சூழ்ச்சி கோட்பாடுகள் டோனி பிளயரின் அரசுக் கெதிராக உலாவந்தன . அத்துடன் தொழித் கட்சி நியமித்த பிரபு ஹட்டன் தலைமையிலான  விசாரணைக் குழுவும் கலாநிதி டேவிட் கெல்லியின் சந்தேகத்துக்கிடமான மரணம் குறித்து முக்கிய சாட்சிகளை தவிர்த்தே அம்மரணம் குறித்த முடிவுகளை மேற்கொண்டு அம்மரணம் தற்கொலை என முடிவி செய்ததது என்பதும் அப்போது எதிர்கட்சியான மரபுவாதக்கட்சி ஒரு பூரண மரண அத்தாட்சி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. டேவிட் கமரூனும் அதனை வலியுறுத்தி வந்தார். இப்போது திடீரென்று அதற்க்கு அமசியமில்லை என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார். அதிலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் கமரூன் கூட்டமைத்துள்ள லிபரல் கட்சியின் அமைச்சர்களில் ஒருவரான நோர்மன் பெக்கர் கெல்லி கொலை செய்யப்பட்டார்  என்று ஒரு புத்தகமே எழுதியவர் , ஆனால் இப்போது மவுனமாகி விட்டார். இப்படித்தான் இருக்கிறது மேற்குலகின் வெள்ளைக்காரனின் நீதி முறையும் நியாயங்களும். இந்த இலட்சணத்தில் இன்னுமொரு சம்பவமாக ஜனவரி இரண்டாயிரம் ஆண்டில் இருத்து ஆப்கானிஸ்தான் தொடங்கி உலகின் பல பாகங்களிலிருந்தும் பயங்கரவாத சந்தேக நபர்கள் என கைது செய்யப்பட்ட பலர் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பல வருடங்களாக குவாண்டனாமோ சிறையில் அமெரிக்காவால் அடைத்து வைக்கப்பட்டிருப்பதுடன் , இதுவரை அங்கு எட்டு பேர் இறந்துள்ளனர், மே மாதத்தில் குவாண்டனாமோவில் இறந்து போன ஆப்கானிய சந்தேக நபரான இனாயத்துல்லா எவ்வாறு மரணமானார் என்பதனை கூட வழக்கம் போல் அமெரிக்கா சொல்லமுடியாமல் மறைத்திருக்கிறது. இந்த இலட்சணத்தில் மேற்குலக நாடுகள் இலங்கையில் புலிப்பயங்கரவாதிகளின் சர்வதேச பரிமானத்தை திட்டமிட்டு ஒருபுறம் அடிப்படை உரிமை விவகாரமாக அனுமதித்துள்ளன.
அமெரிக்காவின் ஜனனாயகம்  பயங்கரவாத எதிர் நடவடிக்கை குறித்த் இரட்டை நியமங்கள் (Double standard) பற்றி பார்க்கும் போது லூயிஸ் பொசாடா காரிலோஸ் (Luis Posada Carriles) எனும் நபர்  பற்றி குறிப்பிடாமலிருக்க முடியாது.   கியுபாவின் தேசிய விமானமான கியூபன் ஏர்லைன்ஸ் விமானத்தில் (Cuban airlines) 1976 இல் குண்டு வைத்து அதில் பிரயாணம் செய்த எழுபத்தி மூன்று பிராணிகளையும் பார்போடாசில் விமானம் வெடித்து கொல்லபபட காரணமாயிருந்த லூயிஸ் பொசாடாவை அவர் அப்போது வாழ்ந்து கொண்டிருந்த வெனிசுவேலாவில் கைது செய்து சிறையில் வழக்கு விசாரணைக்காக வைந்திருந்த பொழுது , அவர் அங்கிருந்து தப்பி ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று தன்னை பாதுகாத்து கொண்டார். அவரை மீண்டும் விசாரணைக்காக தம்மிடம் ஒப்படைக்கும்படி வெனிசுவேலாவும், அக்குற்றம் இழக்கப்பட்ட நாட்டு மக்களின் சார்பில் கியுபாவும் கேட்டபோது புஷ் அரசாங்கம் அக்கோரிக்கையினை நிராகரித்துவிட்டனர். "தென் அமெரிக்காவின் பின் லேடன்" என்று அவரின் எதிரிகளால் அழைக்கப்பட்ட பயங்கரவாதியான லூயிசை  விசாரணைக்காக  (அமெரிக்காபோல் எங்கும் எப்படியும் புகுந்து விசாரணையின்றி கொல்லாமல் )  கையளிக்க கோரியதற்கும் மறுத்த அமெரிக்காவின் ஜனநாயகம் , நீதி என்ன என்பதை உலகின் சிறுபான்மையினரான நீதி நெறியாளர்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். மேற்குலக ஊடகங்களும் இவ்வாறான  சம்பவங்களை ஒரு சிறு செய்தியாக சவ்கரியமாக மறந்து மூன்றாம் உலக நாடுகளிற்கு ஜனநாயகமும் நீதியும் போதிக்க சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் அனுசரணையுடன் தங்களின் மனித உரிமை மீறல்களை காணாமல் செய்ய பண்ணிவிடுகிறார்கள்.  
நெதர்லாந்தில் பிடிபட்டு வழக்கு விசாரணைகளில் சிக்கியிருக்கும் சிலர் புலிகளின் புலம் பெயர் அமைப்புக்களுடன் தொடர்புகளை கொண்டவர்கள் என்பது அமர்கள் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து தெரியவந்துள்ள போதும் அவர்களில் முக்கிய இருவருக்காக வாதாடும் சட்டத்தரணிகள் இருவர் அவர்களின் காசு சேர்த்தல் , சட்ட முறையற்ற காசு பரிமாற்றங்களை (Money Laundering) எல்லாம் தள்ளி வைத்துவிட்டு அவர்களின்  செயற்பாடுகள் சுதந்திர போராட்டமாகும் என்று நியாயப்படுத்துவதும் மேற்குலகின் நீதி குறித்த பாரபட்சமான பார்வையை ஏற்படுத்த  நீதித் துறையும் துணை போகிறது.
இந்த கட்டுரை எழுதி முடித்த பின்னர் தான் நெடியவன் நான் எதிர்பார்த்தது போல் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தியை அறியமுடிந்தது. மேற்குலகின் இரட்டைத்தன்மை புலத்தில் வாழும் பயங்கரவாதிகளுக்கும் பலமாகவே இருக்கிறது.!! ஆனால் தர்மம் என்றும் வெல்லும் என்று நம்புவோம்!!

Kodikamam இவளது பேஸ்புக்கில் இவளைத் தொடர்பு கொண்டு தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வலுக்கட்டாயப்படுத்தி

பேஸ்புக்' - உண்மைக் கதையுடன் ஒரு செய்தி
கொடிகாமத்தில் உள்ள எனது நண்பனின் அப்பாவின் ஆண்டுத் திவசத்துக்குச் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தேன். ஒருபோன் வருகிறது. உடனே வீதி ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுப் போனை எனது சேட் பொக்கெற்றிலிருந்து எடுத்து யார் என்று கதைக்க எங்கே நிற்கிறாய்? ஒரு பெண் குரல்... யார் என்று கேட் டேன் நான்தான் தம்பி உனது பெரியம்மா எனச் சொல்ல, ஓ... என்ன விசயம் என்று கேட்க, ஒருக்கால் வீட்டை வந்து போயேன் என்று சொன்னா. என்ன விசயம் என்று மறுபடியும் கேட்டேன். நேரில் வா சொல்கிறேன் என்று சொல்லிப் போனை பெரியம்மா துண்டித்துவிட்டா.
கொடிகாமத்தில் இருந்து வந்த களைப்பைப் பாராமல் வலிகாமம் பகுதியில் இருக்கும் பெரியம்மா வீட்டுக்குச் சென்றேன். என்னைக் கண்டதும் அங்கே நின்ற எல்லோரின் கண்ணில் இருந்தும் கண்ணீர் வந்து கொண்டிருந்தது.
என்ன நடந்தது என்று கேட்டேன். பெரியம்மா உடனே உள்ளே வாவன் என்று அக்கம் பக்கம் பார்த்துச் சொல்லிவிட நானும் உள்ளே பதற்றத்துடன் சென்றேன்.
 இதைப் பாரண்டா, பெரியப்பாவின் மண்டையை பக்கத்து வீட்டுப் பெடியன் கொட்டனாலே அடித்து உடைத்து விட்டான். இப்ப ஆஸ்பத்திரியிலே மறிச்சுப் போட்டாங்கள். ஏன் என்ன நடந்தது என்று கேட்க... வேறு என்ன என்ர மகள் கம்பசில படிக்கப் போய் பேஸ்புக்கில தனது படத்தையும் விலாசத்தையும் போன்நம்பரையும் கொடுத்து வைத்ததாலே பிரச்சினை வந்திட்டுதடா என்றார். பிரச்சினை என்ன என்று கேட்க பிரச்சினையோ... வெளிநாட்டில் வேலை பார்க்கிற ஒருவன் இவளது பேஸ்புக்கில் இவளைத் தொடர்பு கொண்டு தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வலுக்கட்டாயப்படுத்தி வருகிறான்.
அவன் யாரென்றும் தெரியாது. இவளது போன் நம்பரில கதைக்கிறான். பக்கத்து வீட்டுப் பெடியனுக்கு அவனைத் தெரியும். ஆதலால் பக்கத்து வீட்டுப் பெடியனுடன் அவன் கதைத்து என்ர மகளோடு பேசும்படியும் சொல்லியிருக்கிறான். அவனும் அடிக்கடி என்ற மகளை வீதியில் மறிக்கிறதும் அவனைத் திருமணம் செய்யும்படியும் வற்புறுத்துகிறதும் நாளுக்குநாள் கூடிக் கொண்டே செல்கிறது. இதனைக் கண்ட என்ர அவர் போய்க் கேட்டதும் என்ன ஏது என்று சொல்லாமல் தலையில் கொட்டனால் அடித்துவிட்டான்.
நீங்கள் ஏன் பொலிஸுக்குப் போகவில்லை என்று கேட்க... பொலிஸுக்குப் போகப் பயமாக இருக்கிறது. பொலிஸுக்கு முறைப்பாடு செய்தால் என்ன நடக்கும் என்று தெரியுமோ என்று வெருட்டுகிறான். என்ன நீங்கள் எந்த உலகத்திலே இருக்கிறியள். பேஸ் புக்கில் பிரச்சினைகள்வரும் என்று தெரியாதா என்றேன். எனக்கு என்னடா விளங்கும். பேஸ்புக்  என்றால் ஏதோ ஒரு படிக்கிற புத்தகம் என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது. அது இணையத்தள வசதி என்று. படிச்ச இவளுக்கு என்ன தெரியும். இப்படி மாட்டுப்பட்டுப் போய் இருக்கிறாள்.
சரி சரி நடந்தது நடந்து போச்சு. மகளிட்ட போனைக் கொடுக்காதேங்கோ. இனி ஏதாவது நடந்தால் பார்ப்பம் என்று சொல்லி விட்டு பெரியம்மா வீட்டை விட்டு வெளிக்கிட்டுச் சென்றேன். அந்தப் பக்கத்து வீட்டுப் பெடியன் வீட்டு போட்டிக் கோவில் நின்று கொண்டு என்னைப் பார்த்துக் கொண்டு நின்றான். எனக்குப் பயமாக இருந்தது. அவன் ஏதோ தன்னைக் கட்டுப்படுத்த வந்தனான்போல என்னைப் பார்த்துக் கொண்டு நின்றான்.
அவனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் மோட்டார் சைக்கிளை வேகமாக எடுத்துக் கொண்டு வந்தேன். பார்த்தியளோ  உந்த பேஸ் புக்காலை வந்த வினையை. இது உலகத்திலை பேசுகிற ஒரு விடயம். பேஸ்புக் சம்பந்தமாக எத்தனை குற்றங்கள் நடந்திருக்கின்றன என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படு கிறது. பேஸ்புக்கைப் பயன் படுத்துபவர்களுக்குத் தெரிய வில்லையா ஆழம் தெரிந்தும் காலை விட்டு விட்டு எடுக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறவர்களில் கூடுதலானவர்கள் பெண்கள்தான்.
ஆகவே, பெண்கள்தான் இந்த பேஸ்புக்கைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டு மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் கூட்டிக் கொண்டு கொக்குவில் பகுதிக்கு வரும்போது அங்கே இருந்த நெற்கபேயில் இருந்து பல இளம் பெண்கள் வெளியேறிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டு வந்தேன்.

இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகைதந்தவுடன் விசா வழங்கும் முறை நீக்கப்படவில்லை குடிவரவு,குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்

இலங்கைக்கு இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகைதந்தவுடன் விசா வழங்கும் முறைமையை அரசாங்கம் நீக்கியிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்த செய்தியை குடிவரவுகுடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் டபிள்யூ.ஏ.சூலாநந்த பெரேரா மறுத்துள்ளார். தான் தெரிவித்திருந்த விடயம் தவறாக மேற்கோள்காட்டப்பட்டிருப்பதாக அததெரண இணையத்தளத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை கூறியுள்ளார். இந்தத் தீர்மானத்தை இலங்கை எடுத்திருப்பதாக இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்று முன்தினம் வியாழக்கிழமை குறிப்பிட்டிருந்தது. சிங்கப்பூர், மாலைதீவு நாடுகளைச் சேர்ந்த உல்லாசப் பயணிகளுக்கு மட்டுமே தொடர்ந்தும் வருகைதந்தவுடன் விசா வழங்கும் நடைமுறை மேற்கொள்ளப்படுமெனவும் இந்நாடுகள் இலங்கையர்கள் அங்கு சென்றவுடன் விசா வழங்கும் நடைமுறையைக் கொண்டிருப்பதாகவும் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்திருந்ததாக இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. அதேசமயம், இது தொடர்பாக நேற்று கருத்துத் தெரிவித்த குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம், இந்தியப் பத்திரிகை எதற்கும் தான் கருத்து எதனையும் தெரிவித்திருக்கவில்லை. அதாவது வருகைதந்தவுடன் இந்தியர்களுக்கு விசா வழங்குவது தொடர்பாக எதனையும் குறிப்பிட்டிருக்கவில்லையென்று தெரிவித்துள்ளார். புதிய முறைமையான இணையத்தினூடாக விசா வழங்கும் முறை குறித்தே தான் கதைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தியர்கள் வருகைதந்தவுடன் விசா வழங்கும் முறையை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ் தேவி இரு வருடங்களுக்குள் காங்கேசன்துறையை சென்றடையும்'



omanthai trainவட மாகாணத்திற்காக யாழ். தேவி ரயில் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் காங்கேசன்துறையை சென்றடையும் என போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்தார். இந்த வேலைத்திட்டம் இந்திய அரசின் கடனுதவியுடன் நடைபெறவுள்ளதாக அவர் கூறினார். சிங்கர் நிறுவன அனுசரணையில் அமைக்கப்பட்ட ஓமந்தை புகையிரத நிலைய திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாட்டிலுள்ள புகையிரத பாதைகள் அனைத்தையும் புனர்நிர்மாணம் செய்யவேண்டியுள்ளது. இதன் மூலம் புகையிர பாதைகளின் வேகத்தை அதிகரித்து குறைந்த நேரத்திற்குள் பயணத்தை நிறைவுசெய்ய முடியும் என அவர் குறிப்பிட்டார். புகையிர சேவையை விணைத்திறனுள்ளதாக மாற்றுவதற்கு புகையிரத திணைக்கள ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைத்து பாடுபட வேண்டும் என அவர் கூறினார். கம்பனித்துறை சமூக பொறுப்புடமை திட்டத்தின் கீழ் சிங்கர் நிறுவனத்தை போன்று ஏனைய தனியார் நிறுவனங்களும் நாட்டில் அபிவிருத்தியை மேற்கொள்ள அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பட்டார். ஓமந்தை புகையிரத நிலையம் மற்றும் தாண்டிக்குளம் முதல் ஓமந்தை வரையான புகையிர பாதை புனர்நிர்மானம் ஆகியவற்றிக்காக சிங்கர் நிறுவனம் 10 மில்லியன் ரூபா நிதியுதவியளித்திருந்தமை குறிப்பிட்டத்தக்கது. தாண்டிக்குளம் வரை இடம்பெற்று வந்த வட மாகாணத்திற்கான யாழ் தேவி ரயில் சேவை நேற்று வெள்ளிக்கிழமை ஓமந்தை வரை உத்தியோகபூர்வமாக நீடிக்கப்பட்டது