ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

விளவங்கோட்டில் பச்சை துரோகம்! அன்றைய சமஸ்தான காங்கிரஸ்தான் இன்றைய கேரள காங்கிரஸ்

May be an image of text that says "മുന്നണി ഐക്യ ജനാതിപത്യ പ്രവീണിനെ സ്ഥാനാർഥി വിളവൻകോട് വിജയിപ്പിക്കുക"

 குமரிக் கிழவனார் :  காங்கிரஸ் பேரியக்கம் மாபெரும் வரலாற்று பிழையை விளவங்கோட்டில் நிகழ்த்தியிருக்கிறது.......
 வயனாட்டு மலைவாழ் பூர்வகுடிகளுக்கும் இஸ்லாமிய மதமேற்றவர்களுக்கும் சொந்தமான தொகுதியில் ராகுலை கொண்டு வந்து நிறுத்தி இஸ்லாமியர்களுக்கும் பூர்வகுடிகளுக்குமான பிரிதிநித்துவத்தை புடுங்கி பின்னர் அதில் பிரியங்காவை நிறுத்தி தொடர்ந்த இஸ்லாமியர் நீக்க அரசியலை செய்து கொண்டிருப்பது போல் இதோ தமிழ்நாட்டில் தமிழர் நீக்க அரசியலை செய்து கொண்டிருக்கிறது........
விளவங்கோட்டில் கை சின்னம் தொடர்ந்து வெற்றி பெற காரணம் தமிழர் மலையாள மொழி ஆதிக்கத்திர்க்கும் மலையாளிகளின் நில அதிகார ஆதிக்கத்திற்கும் எதிராக கிளர்ந்து எழுந்து தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் போராட்ட களத்தை கண்டு அதை வென்றெடுத்ததுதான். குமரி தமிழர்கள் அன்று போராடியது திருவாங்கூர் சமஸ்தானம் மற்றும் திருகொச்சி மாநில ஆரசுக்கு எதிராக என்றாலும் அன்று அவர்கள் களத்திவ் நேரடியாத எதிர்த்தது சம்ஸ்த்தான காங்கிரஸைதான்.


 சமஸ்தான காங்கிரஸின் அடியாட்கள் தான் தமிழர்களை மூனாறிலும் தேவிகுளத்திலும் பீர்மேடிலும் செங்கோட்டையிலும் நெய்யாற்றின் கரையிலும் கல்குளத்திலும் விளவங்கோட்டிலும் தாக்கினார்கள் உயிர்பலி எடுத்தார்கள். அவர்களின் இனவெறியைத்தான் நம் முன்னோர்கள் உயிர் தியாகங்களின் மூலம் இல்லாமல் செய்தனர். இந்த நிலத்தை மீட்டு தமிழர் நிலமாக நமக்கு தந்தார்கள்......
 அன்றைய சமஸ்தான காங்கிரஸ்தான்  இன்றைய கேரள காங்கிரஸ். அந்த கேரள காங்கிரஸ் நபரை தமிழ்நாட்டில் அதுவும் குமரி விடுதலை போராட்டத்தின் போது மிக அதிக துயரங்களை சந்தித்த விளவங்கோட்டு மக்கள் பிரதிநிதியாக தேர்தலில் நிற்க வைத்திருக்கிறார்கள். இங்கிருந்து கனிமங்கள் அங்கே செல்லவும் அங்கிருந்து கோழிக்கழிவுகள் இங்கே வரவும் ஏதுவாக இருக்கும் எல்லையில் சரியாக ஒரு நேரடி கேரள மலையாளியை களமிறக்கியிருக்கிறது காங்கிரஸ் பேரியக்கம். இது தமிழ்நாட்டு வழி வந்த வேட்பாளரல்ல முழுக்க முழுக்க கேரள காங்கிரஸின் இறக்குமதி........
 ஒருவேளை கேரளாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரமேஷ் சென்னித்தலைக்கும் கேசி வேணுகோபாலுக்கும் கேரள மாநில வளர்ச்சிக்காக இந்த நிலமும் அதன் வளமும் தேவை. அதற்காக மட்டுமே கேரள காங்கிரஸ் டில்லி வழி கேரளத்துக்காரரை இங்கே இறக்கியிருக்கிறது......
தமிழர்களே தமிழர்களே உணர்வு செத்த விளவங்கோட்டு தமிழர்களே நீ யாராக வேண்டுமென்றாலும் இரு எந்த கட்சிக்காரனாக வேண்டுமென்றாலும் இரு எந்த சாதிக்காரணாகவும் இரு எந்த மதத்தினாகவும் இரு ஆனால் முதலில் தமிழன் என்ற உணர்வு கொள்.......
நான் தமிழன் நான் தமிழன் என்று சொல்லித்தான் வட்டியூர் காவு வீரன் தாத்தன் குஞ்சன் நாடார் மலையாள அரசு ஏவிவிட்ட காவல்துறை பூட்சுகளால் நெஞ்சில் மிதிவாங்கினார்.........
தமிழர்களாக உணருங்கள் தமிழர்களாய் ஒன்று சேருங்கள் என்று சொல்லித்தான் மார்ஷல் நேசமணி நம்மை வழிநடத்தினார்.......
தமிழர் நிலத்தின் அதிகாரமும் உரிமையும் தமிழர்களிடம் இல்லை என்றுதான்  தோழர் ஜீவா களத்தில் நின்றார்........
காந்திராமனும் ஐயா மணியும் நத்தானியலும் தமிழர்களுக்கான இயக்கம் கட்டினர்....... 
ஐயா சைமனும் ஏஏ ரசாக்கும் களம் கண்டது தமிழர்களுக்காகத்தான் இந்த நிலத்தை சமஸ்தான காங்கிரஸிடமிருந்து காத்தார்கள்.....
மீண்டும் சொல்கிறேன் விளவங்கோட்டான்களே தமிழன் எனும்  உணர்வுகொள்ளுங்கள்......
கேரள நேரடி இறக்குமதி வேட்பாளரை தோற்கடியுங்கள். நம் மூப்பர்களின் தியாகத்திற்கு மரியாதை செய்யுங்கள்.......

கருத்துகள் இல்லை: