வெள்ளி, 10 ஏப்ரல், 2026

கேரளா மேற்கு வங்கம் புதுசேரி வாக்கு பதிவு நிறைவு - தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு ஏன் வெளியாகவில்லை?

 tamil.news18.com  : புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாம் ஆகிய மூன்று சட்டமன்றங்களுக்கும் வாக்குப் பதிவு நிறைவடைந்தும் ஏன் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகவில்லை தெரியுமா?
தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலத் தேர்தல் இந்த மாதம் நடைபெறும் நிலையில், புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

தமிழ்நாட்டிற்கு வரும் 23ஆம் தேதி ஒரே கட்டமாகவும், மேற்குவங்கத்திற்கு வரும் 23ஆம் தேதி முதற்கட்டமும், 29ஆம் தேதி இரண்டாம் கட்டம் வாக்குப் பதிவும் நடைபெறுகிறது.

இந்நிலையில், இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாம் ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகவில்லை. இதற்கு என்ன காரணம்?

எப்போது தேர்தல் நிறைவடைந்து சில நிமிடங்களில் இருந்தே, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகும். ஆனால், இந்த முறை அப்படி நடக்கவில்லை.

இதற்கு காரணம், இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, ஏப்ரல் 9ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடக்கூடாது என அறிவித்தது.

அப்படி மீறி வெளியிட்டால், 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126A பிரிவின் கீழ் தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. தடைசெய்யப்பட்ட காலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது அல்லது ஒளிபரப்புவது, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது இரண்டும் சேர்த்து தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதன் காரணமாகவே மூன்று சட்டமன்றங்களுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்தும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகவில்லை.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
 
கருத்துகள் இல்லை: