![]() |
பிரம்ம ரிஷியார் : தன் ஒரு நாள் கெடு முடிவடைந்த நிலையில் மிக உக்கிரமான தாக்குதலை அமெரிக்கா தொடுத்ததை அடுத்து,
ஈரான் இப்போதைக்கு ஹோர்ம்ஸ் நீரிணையினை நிபந்தனையின்றி கப்பல் போக்குவரத்துக்கு திறப்பதாக அறிவித்துள்ளது ,
இதை அடுத்து 15 நாட்களுக்கு டிரம்பர் போரை நிறுத்தியுள்ளார்
இது ஈரானின் சரணாகதியினை காட்டுகின்றது, 1980 முதல் 1988 வரை இதே போன்றதொரு போரை அரபுலகம் சந்தித்தது அப்போது ஈராக்கில் சதாமும் ஈரானில் பெரிய கொமேனியும் இருந்தார்கள் சண்டை உள்நாட்டில் பெரிதாக இல்லை மாறாக ஈராக்கிய எண்ணெய் கப்பல்களை ஹோர்ம்ஸ் பக்கம் அனுமதிக்கமாட்டோம் என ஈரான் கிளம்ப ஈராக் அதை எதிர்த்து தாக்க இந்த நீரிணைக்கு எதிராக வந்த முதல் சண்டை அதுதான்
ஆனால் அங்கே ஈரானை முறைத்து கொண்டு அமெரிக்கா வந்தது, அக்காலகட்டத்தில் சோவியத் ஆப்கானில் சிக்கியிருந்தது இதனால் பல ராணுவ கணக்குடன் அமெரிக்கா இங்கு கப்பல்களை அனுப்பியது ஒரு வகையில் ஈராக்கிற்கே உதவிற்று ஈரான் கடலில் போரை சந்தித்து பின்னால் அமைதியாக போரை நிறுத்திற்று
அதன் பின் குவைத்தை பிடித்து மொத்த எண்ணையும் இந்த கடல்பாதை வழியாக அனுப்புவோம் என சதாம் எழுந்தபோது விவகாரம் அமெரிக்காவுக்கும் அவருக்குமான போராயிற்று
அதுவரை அமெரிக்காவுக்கு அராபியாவில் பெரிய ராணுவமுகாம் இல்லை காரணம் சோவியத் பலமாக இருந்தது , லெபனானில் இருந்த அமெரிக்க முகாமை கூட ஹெஸ்புல்லா விரட்டியிருந்தது
ஆனால் 1990களில் சோவியத் தடுமாறி உடைய தன் ஆக்டோபஸ் கரங்களால் ஜோர்டான், சவுதி, பஹ்ரைன் ,கத்தார் என சுமார் 10 இடங்களுக்கு மேல் தன் ராணுவநிலையினை அமைத்து கொண்டு அமர்ந்தது அமெரிக்கா
அதிலிருந்து இந்த ஹோர்ம்ஸ் நீரிணைக்கு தானே காவல் என அங்கே அமர்ந்திருந்தது, அரபுநாடுகளுக்கு இது பிடிக்கவில்லை என்றாலும் ஈரானை அடக்க வேறுவழியும் தெரியவில்லை
ஒருவேளை அமெரிக்கா அகன்றால் அங்கு சீனா வந்து அமரும் இல்லை ரஷ்யா வரும் என்பதால் அப்படியே விட்டுவிட்டார்கள்
ஈரானும் முரட்டு தீவிரவாதம் அனைத்தும் செய்தது மேற்காசியா முழுக்க சுமார் 20 தீவிரவாத இயக்கங்களை வளர்த்தது, வடகொரிய ஏவுகனைகள் முதல் எல்லாம் வாங்கிகுவித்து அணுகுண்டு செய்யுமளவு ஆடியது
அரபுநாடுகளிலே இஸ்ரேலை அழிப்போம் என அல்குர்ட்ஸ் படைபிரிவு வைத்து மிரட்டும்நாடு அதுதான், இப்படி பெரிய தீவிரவாத கும்பலை உருவாக்கியதால் அது தாய்நாகம் போல அச்சுறுத்தலானது
ஹமாஸினால் ஏற்பட்ட போரை அடுத்து இனி ஈரானை விட்டுவைக்கமுடியாது என அமெரிக்காவும் இஸ்ரேலும் இப்போரை துவக்கின, அவர்கள் இலக்கு ஈரானை ஆக்கிரமிப்பது அல்ல மாறாக பலவீனமாக்கி ஆட்சிமாற்றம் ஏற்படுத்துவது
ஆனால் அங்கு எத்தனையோ தலமைகளை கொன்றும் ஆட்சி மாறவில்லை ஈரானிய ராணுவம் தொடர்ந்து ஆள்கின்றது, இதனால் ஈரானை பல வகையில் பலவீனபடுத்தி வெளியில் இருந்து தாக்குவது அதுவும் ராணுவ நிலைகளை தாக்குவது போதுமென அமெரிக்க தரப்ப்பு முடிவெடுத்தது
ஈரானோ ஹோர்ம்ஸ் கடல்பாதையினை விடமாட்டோம் இனி கப்பலுக்கு 20 லட்சம் டாலர் கப்பம் வசூலிப்போம் என கிளம்ப போர் ஹோர்ம்ஸ் நீரிணை பக்கம் வந்தது
டிரம்பர் தன் மிரட்டலை ஈரானிய ராணுவ இலக்கை தாண்டி மக்கள் பயன்பாடு திட்டம் மேல் மாற்றினார், அதாவது மக்களுக்கு நெருக்கடி கொடுக்க கொடுக்க அவர்கள் ஈரானிய அரசை நெருக்குவார்கள் என்பது அவர் கணக்கு
ஈரானிய மக்கள் அவர்கள் ஆட்சியாளர்களை மாற்றுவார்கள் என நம்பி டிரம்பர் போரை துவக்கினார் அது நடக்காமல் போக அந்த மக்கள் எப்படிபோனால் என்ன என அவர் மிரட்ட துவக்கினார், முதல் கட்டமாக ஈரானின் பாலம் தகர்க்கபட்டது அடுத்து மின்சார மையங்கள் குறிவைக்கபட்டன
அமெரிக்காவின் வியூகம் உள்நாட்டில் மின்சாரம்,குடிநீர், எரிபொருள் இல்லாமல் மக்களை தவிக்கவிட்டால் அவர்கள் ஈரானுக்குள் குழப்பம் விளைவிப்பார்கள் போராடுவார்கள் அல்லது அயல்நாட்டுக்கு அகதியாய் செல்வார்கள் அந்த குழப்பத்தில் ஹோர்மஸ் பக்கம் இருக்கும் தீவுகளை கைபற்றலாம் என செல்வதை உணர்ந்த ஈரான் இப்போது இறங்கி வநதிருக்கின்றது
போரில்யாருக்கு வெற்றி என்றால் இருவருக்கும் முழு வெற்றி அல்ல, அமெரிக்காவுக்கு ஈரானில் ஆட்சிமாற்றம் செய்யமுடியவில்லை ஆனால் ஹோர்ம்ஸ் பக்கம் வெற்றிபெற்றிருக்கின்றது
எப்படியோ அடுத்த இரு வாரங்களுக்கு கப்பல் போக்குவரத்து முதல் பல விஷயம் சிக்கலின்றி நடக்கும், தமிழக ஹோட்டல்களின் இட்லி தோசைக்கு ஆபத்தில்லை
இது எகிப்து ஓமான் ஊடாக நடந்த பேச்சுவார்த்தையின் முதல்கட்ட வெற்றி, அதே நேரம் மிகபெரிய வல்லரசுக்கும் முரட்டு முல்லா கூட்டததுக்குமான இந்த தற்காலிக அமைதி அடுத்த பெரும்போரின் துவக்கமாகவும் இருக்கலாம்
போரில் யாருக்கு பெரிய சேதம் என்றால் நிச்சயம் அமெரிக்காவுக்கு அல்ல அதன் விமானம் வீழ்த்தபட்டது போர் செலவு எல்லாம் அமெரிக்கா எனும் பிரமாண்ட சக்திக்கு யானைமேல் கொசு கடித்தல் போன்றது,, இனி சக அரபுநாடுகளின் பாதுகாப்பு செலவு என பெரிய தொகையினை அமெரிக்கா வசூலிக்கும்
ஆனால் ஈரான் அப்படி அல்ல, அது சுமார் 50 முக்கிய தலைவர்களை இழந்தது, 900 தளபதிகளை இழந்தது, தேசம் முழுக்க பெரும் அழிவுகளை பெரும் பெரும் மீளமுடியா சேதங்களை பெற்றது அதை இனி மீளகட்ட 50 வருடமாகலாம்
நிஜமான உள்நாட்டு கலகம் இனி துவங்கலாம் , காரணம் ஈரானின் பொருளாதாரம் அந்த அளவு அதளபாதாளத்தில் கிடக்கின்றது
சில இஸ்லாமிய கும்பல்கள் சொல்வதுபோல் ஈரான் ஒன்றும் யோக்கிய தேசம் அல்ல , ஒருவேளை பெரும் பலம் பெற்றுவிட்டால் 20 தீவிரவாத குழுக்களோடு 21ம் குழுவாக இந்தியாவில் அயோத்தி மீட்போம் காஷ்மீர் மீட்போம் என ஒரு குழுவினை வளர்ப்பார்கள் அவர்கள் இயல்பு அது, அதனால் ஈரான் இப்படி பலவீனமாவது தேசத்தின் ரகசிய பாதுகாப்புக்கும் நல்லது
சில அடிப்படைவாத இந்திய ஜிகாதிகள் ஏன் ஈரான் என்றால் கொண்டாடுகின்றார்கள் என்றால் இதுதான் ஒரே காரணம்
சரி, போரில் ஈரானை அமெரிக்கா முழுமையாக அழிக்குமா என்றால் இல்லை, அமெரிக்கா ஒரு வியாபார நாடு போர் அவர்களின் வியாபாரங்களில் ஒன்று, ஒரு போர் மிரட்டல் இருக்க எதிரி அவசியம்
நாளையே ஈரான் பலமிழந்தோ இல்லை பெரிய மாற்றம் வந்து அதன் மிரட்டல் இல்லாமல் போனாலோ மறுநிமிடம் கத்தார்,சவுதி போன்றவை அமெரிக்காவினை கிளம்ப சொல்லும், சல்லி காசு கொடுக்காது, அமெரிக்காவின் தேவை தீர்ந்தபின்னால் வைத்து தீனிபோட விரும்பமாட்டார்கள்
இதனால் இவர்களை எல்லாம் மிரட்டி காலடியில் வைக்க அமெரிக்காவுக்கு ஒரு சக்தி அவசியம், அப்படி சதாமை முதலில் உருவாக்கினார்கள் ஆனால் அவர் எல்லை மீறியதால் அடித்துவிட்டார்கள், இப்போது ஈரான் அவர்களுக்கு அப்படி மிரட்ட அவசியம் ஆனால் அது பலவீனமான ஈரானாக இருத்தல் மிக அவசியம்
அந்த இலக்கை எட்டிவிட்டார்கள், கப்பல் போக்குவரத்தும் துவங்கிவிட்டது இனி மெல்ல மெல்ல ரகசிய பேச்சில் ஈரானுக்கு பணமாக பொருளாக கொடுத்து வளைப்பார்கள்
ஒருவகையில் ஈரானின் பழைய பிடிவாத தலைவர்கள் அனைவரையும் தூக்கிவிட்டார்கள், இப்போது இருப்பது புதிய தலைமுறை அதுவும் கொஞ்சம் சிந்தனை மாறிய தலைமுறை இவர்களை வளைப்பது எளிது
இதனால் இனி வெளிதெரியா வகையில் சில ஒப்பந்தத்தோடு போர் முடியலாம் ஆனால் ஈரானை காட்டி அமெரிக்கா அங்கேதான் நிற்கும், ஈரான் இல்லை என்றால் அவர்களின் அரபு அரசியல் இல்லை, பெரிய பிம்பம் இல்லை, வருமானமில்லை என்பதால் அங்கே நிலை கொள்வார்கள்
எப்படியோ பெரும் துயரம் பெற்றுவிட்ட ஈரானிய மக்கள் இன்னொரு காசா மக்களாக தென் லெபனான் மக்களாக மாறிவிடாமல் அமைதியாக நன்றாக வாழட்டும், இனியாவது ஈரானிய முல்லா கூட்டம் திருந்தட்டும் என்பதே உலகத்தார் பிரார்த்தனை
ஆக தான் நிறுத்திய அடுத்த பெரும்போர் என நோபல் கமிட்டியினை நோக்கி டிரம்பர் கைநீட்டபோகும் நேரம் என்பதால் அவர்களும் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக