வியாழன், 27 நவம்பர், 2025

1951 கலைஞரின் கார் -.மணமகள் - சுப்பிரஜா - கலைவாணர்!

May be an illustration of text that says "KARUNANDHI AND ANNADURAI seated beside the car gifted to Karunanidhi by N.S. Krishnan for penning the creenplay of the film "Manamagal" in 1951. எெங்கே கொக்கேபிவிம்ாரின் பிலிம்ாரின் மணமகள்"

ஆனந்த்குமார் சித்தன்  :  கலைவாணர் என் எஸ் கே பொருளாதார ரீதியாக தோல்விகளை சந்தித்த காலம்..
லட்சுமி காந்தன் என்கிற பத்திரிகையாளர் கொலை வழக்கில் இவரையும் சேர்த்து விட்ட பின்னர், போராடி வெளியே வந்த காலம்..
அப்போது
1950 களில் மலையாளத்தில் சுப்ரபா என்று ஒரு நாடகம் மிகப் பிரபலமாக இருந்தது.. அந்த நாடகத்தை திரைப்படமாக எடுக்க நினைத்தார் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன்.
அதை அப்போதைய நண்பரான கலைஞரிடம் சொன்னார்..
பின்னர்
சுப்ரபா நாடகத்தின் எழுத்தாளர் அடூர் முன்ஷி பரமேஸ்வரன் பிள்ளையும், கலைஞரும் இணைந்து திரைக்கதை உருவாக்கினர்.
படத்தின் வசனம் முழுமையாக கலைஞர் எழுதினார்..
கட்டாயத்திருமணமும், பெண் சுதந்திரத்தையும் அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை என் எஸ் கே தயாரித்து இயக்கினார்.



1951 ஆகஸ்டில் வெளிவந்த மணமகள் படம்
மிகப்பெரிய வெற்றியையும், கலைவாணருக்கு மீண்டும் வாழ்க்கையும் மீட்டுக் கொடுத்தது..

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் அடுத்த மாதமே கலைஞருக்கு ஒரு ஸ்டாண்டர்ட் காரை பரிசாக அளித்தார். அந்தக் காருடன் அறிஞர் அண்ணாவுடன் எடுத்துக்கொண்ட படம் இது.

1951 இல் காரே வைத்திருந்த கலைஞர், ரயிலில் 2 ரூபாய் டிக்கெட் எடுக்காமல் போனார் என்று இஷ்டம் போல பேசிக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் ஊரான் வீட்டுக் காசில் ஹெலிகாப்டர் ஏறி ஊர் சுற்றிய ஜெயாவின், தமாஸ் குருவின் பின்பாட்டுகளாகதான் இருப்பார்கள்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

நீ யாருடா வேசி மகன் கருணாநிதியோட நாய்க்கு பிறந்த பயலா