புதன், 27 மார்ச், 2024

திருநாவுக்கரசருக்கு எடப்படியார் தூது விட்டார்? மீண்டும் முதலில் இருந்து? ........... நடக்காது என்பார் நடந்துவிடும்

 tamil.oneindia.com - Shyamsundar :  அடடா.. சைடு கேப்பில்.. பெரிய மீனையே தூக்க பார்த்துட்டாரே எடப்பாடி! திமுக கூட்டணிக்கு போன திக் மெசேஜ்
சென்னை: காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை வேட்பாளர் ஒருவழியாக நேற்று இரவுதான் அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து சில மணி நேரங்களில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான சில அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் தமிழகத்தின் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் காங்கிரஸ் சார்பாக அறிவிக்கப்பட்டனர். திருவள்ளூர் தனி தொகுதியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கிருஷ்ணகிரி தொகுதியில் கே கோபிநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கரூர் தொகுதியில் மீண்டும் ஜோதிமணி எம்பிக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி உள்ளது.


Edappadi Palanisamy try to take a senior Congress leader into AIADMK party after candidate s announcement

கடலூர் தொகுதியில் டாக்டர் எம்கே விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். சிவகங்கையில் மீண்டும் கார்த்தி சிதம்பரம் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். விருதுநகரில் மீண்டும் மாணிக்கம் தாகூர் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்

கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் எம்பி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இரவோடு இரவாக அறிவிப்பு; இதையடுத்து மறுநாளே நெல்லை தொகுதியில் ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார். விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் டாக்டர் தாரகை வேட்பாளராக அறிவிப்பு வெளியானது. மயிலாடுதுறை மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

மயிலாடுதுறை ஏன் தாமதம்: இந்த நிலையில் நாளையோடு வேட்புமனு முடியும் நிலையில் பெரும் இழுபறிக்கு பிறகு மயிலாடுதுறை தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். மயிலாடுதுறை லோக்சபா தொகுதி வேட்பாளராக ஆர் சுதா என்பவர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இதை காங்கிரஸ் இவ்வளவு நாள் அறிவிக்காமல் இருக்க சில காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அங்கே அறிவிக்கப்பட இருந்த வேட்பாளரை திமுக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. திமுகவின் முழு விருப்பத்தோடு மட்டுமே வேட்பாளர்களை அறிவிக்க ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரவீன் சக்ரவர்த்தியை நியமிக்க காங்கிரஸ் நினைத்தது. இவர் ராகுலு நெருக்கம். ஆனால் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரவீன் சக்ரவர்த்தியை காங்கிரஸ் கைவிட்டது. இதோடு இல்லாமல் அந்த நபர் உள்ளூர் கிடையாது . அவர் வெளியூர் என்பதால் மயிலாடுதுறை காங்கிரஸ் நிர்வாகிகளும் அவரை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

நாசே ராமச்சந்திரன் என்பவரும் முன்னிலையில் இருந்தாலும் அவருக்கு உள்ளூர் அனுதாபிகள் அதிகம் இல்லை.

திடீர் அறிவிப்பு; கடைசியில் மயிலாடுதுறை லோக்சபா தொகுதி வேட்பாளராக ஆர் சுதா என்பவர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் இங்கே வாய்ப்பை இழந்த.. மேலே குறிப்பிடப்படாத ஒருவரை போன் போட்டு எங்க கட்சிக்கு வந்துவிடுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளாராம். உங்களுக்கு திருச்சியும் இல்லை.,. மயிலாடுதுறையும் இல்லை. எங்க கட்சிக்கு வாங்க. நாங்க ராஜ்ய சபா எம்பி சீட் அல்லது எம்எல்ஏ தேர்தலில் வாய்ப்பு தருகிறோம் என்றுள்ளாராம்.

ஆனால் எடப்பாடி ஆபரை அந்த போன் காலிலேயே மறுத்துள்ளார் இந்த தலைவர். நான் இங்கேயே இருக்கிறேன். உங்கள் கட்சியில் என் அரசியல் வாழ்க்கை தொடங்கி இருக்கலாம். ஆனால் இப்போது நிலைமை உங்களுக்கு சாதகமாக இல்லை. இங்கே இருப்பதே எனக்கும் நல்லது.. உங்களுக்கும் நல்லது என்று மறுத்து விட்டாராம்.

கருத்துகள் இல்லை: