புதன், 27 மார்ச், 2024

ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை பெற துரை வைகோ முயற்சி!

 மாலை மலர் :  திருச்சி பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது.
அத்தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ களமிறங்கியுள்ளார். இதையடுத்து ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை பெற அக்கட்சி முயற்சித்தது.
ஆனால் தலைமை தேர்தல் ஆணையம் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.விற்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது. ம.தி.மு.க. 2010-ம் ஆண்டு அங்கீகாரத்தை இழந்து விட்டது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இந்த வழக்கில் தீர்வு காண இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


இந்நிலையில், திருச்சியில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* பம்பரம் சின்னத்தை தர முடியாது என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.

* மேல்முறையீட்டுக்கு செல்லாம்... ஆனால் பிரசாரம் காரணமாக செல்லவில்லை.

* இருக்கும் சின்னங்களில் ஒன்றை தேர்வு செய்வோம்.

* சின்னம் கிடைக்காததால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை.

* வேட்பாளர் யார், அவரின் சின்னம் என்ன என்பதை தெரிந்து கொண்டு வாக்களியுங்கள்.

* தேர்ந்தெடுக்கும் புதிய சின்னத்தை மக்களிடம் விரைவில் கொண்டு செல்வோம்.

* தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசு பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது.

* திருச்சியில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

* சின்னம் குறித்து நாளை தெரியப்படுத்துவோம்.

இவ்வாறு துரை வைகோ கூறினார்.

கருத்துகள் இல்லை: