அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அன்னை சோனியா காந்தியை இழிவு படுத்துவதாக கருதிக்கொண்டு கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறிந்த நிகழ்ச்சியானது திரு இவிகேஸ் இளங்கோவன் அவர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கியது
அதற்கு இளங்கோவன் அவர்கள் கொடுத்த பதிலடி .. கோமளவல்லி!
கோமளவல்லி என்ற பெயருக்கு பின் இவ்வளவு பெரிய கதை இருக்கா தெரியவேயில்லை
'கோமளவல்லி' என்கிற பெயர் பிரபலமான கதை..!
அது எந்த ஆண்டு என்று ஞாபகமில்லை.
ஜெயலலிதா ஒரு பத்திரிகையாளர்
சந்திப்பில்(டெல்லி என்று ஞாபகம்)
நிருபர்களிடத்தில் பேசினார். பேசிக்கொண்டேயிருந்தார்.
பத்திரிகையாளர்கள் கேட்ட
கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னவர் கடைசியாக “ஒரு
கேள்வியை நீங்க கேட்பீங்கன்னு நான் ரொம்பவே எதிர்பார்த்தேன்.
ஆனால் நீங்கள் கேட்கவேயில்லையே..?” என்று
பத்திரிகையாளர்களை பார்த்து கேட்டார்.
நிருபர்கள் திகைத்துப் போய் நிற்க, ஜெயலலிதா அவராகவே
கேள்வியையும் கேட்டு அதற்கான பதிலையும் சொன்னார்.
“அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால்
அண்டோனியா அல்பினா மைனோ இந்தியாவின் பிரதமராக முடியுமா..?
அது நியாயமா..?” என்றார் ஜெயலலிதா நிருபர்கள் முழித்தனர்.
“புரியலையா.. அண்டோனியா அல்பினா மைனோ என்பதுதானே #சோனியாகாந்தியின்
இயற்பெயர்?
அவர் இத்தாலிக்காரர். இத்தாலி நாட்டில் பிறந்தவர். இன்னொரு நாட்டில் பிறந்தவர் எப்படி
இந்தியாவிற்கு பிரதமராக முடியும்?
இதை நாம் அனுமதிக்கக் கூடாது அ.தி.மு.க. இதனை ஒருபோதும்
ஆதரிக்காது…” என்று ஒரு போடு போட்டார்.
கேட்காத கேள்விக்கு எதிர்பாராமல் கிடைத்த அந்த பதிலையே தலைப்புச்
செய்தியாக போட்டார்கள் பத்திரிகையாளர்கள்.
அதன் எதிர்வினை சென்னையில் கிடைத்தது.
அப்போதைய காங்கிரஸ் கட்சியின் தமிழ்மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
அடுத்த நாளே பிரஸ் மீட்வைத்து பொரிந்து தள்ளிவிட்டார்.
அவர் பொரிந்ததில் ஹைலைட்டான விஷயம்,
“#கர்நாடகாவில்_பிறந்த கோமளவல்லி என்னும் ஜெயலலிதா.! "
தமிழ்நாட்டுக்கு வந்து சினிமாவில் ஜிகினா டிரெஸ்ஸில் டான்ஸ் ஆடி,
மூப்பனார்களின் குடும்ப திருமணத்தில் நடனமாடி காசு சேர்த்து,
கல்யாணம் ஆகாமலேயே ஒரு நடிகருடன் கோயிங் ஸ்டெடி நடத்திவிட்டு,
கடைசியில் புரட்சி தலைவியாகி தமிழ்நாட்டு்க்கே முதலமைச்சராகும்போது..!
தன்னுடைய மாமியார், மற்றும் தன்னுடைய கணவரை இந்த
நாட்டுக்காகவே இழந்து…இப்போதுவரையிலும் இந்த
தேசத்திற்காக அல்லும் பகலும் உழைத்து வரும் எங்களது சோனியா
அம்மையார் பிரதமராகக் கூடாதா..?
நிச்சயமாக அவர் பிரதமாவார்..” என்று கத்தித் தீர்த்தார் ஈவெகி இளங்கோவன்.
அப்போதுதான் ஜெயலலிதாவின் இயற்பெயர் ‘கோமளவல்லி’ என்பது
தமிழ்நாட்டுக்கே தெரிய வந்தது.
இதன் பின்பு தமிழக அரசியலில் காங்கிரஸ்-அ.தி.மு.க. மோதல் கிளை
பிரிந்து இளங்கோவன் ஜெயலலிதா மோதலாக உருவெடுத்து
இளங்கோவனை தனித்த அரசியல் தலைவராக தமிழகத்திற்கு அடையாளம் காட்டியது.
அந்தப் புகழ் பெற்ற ‘கோமளவல்லி’ என்கிற பெயர் இன்றைக்கு ‘சர்கார்’ படபுண்ணியத்தில், தமிழகத்தில்
தலையெடுத்திருக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் போய் சேர்ந்துவிட்டது.
நன்றிகள் அண்ணன் ஈவிகேஎஸ்_இளங்கோவனூக்கு
நன்றி - பூபதி டி கே
கலைஞர் மறைவின் போது இளங்கோவன் பேசியது : கலைஞர் இப்படி கூறியிருப்பதற்கு பதிலாக எனக்கு அடித்திருக்கலாமே? அது எனக்கு வலித்திருக்காது.
இன்று வரை என்மனதில் அவரின் குழந்தை என்ற வார்த்தைகள் எனக்கு வலியை தருகின்றது! இளங்கோவனின் இந்த பேச்சில் பொய் இல்லை. இளங்கோவனின் பேச்சுக்கள் எப்பொழுதும் உணர்ச்சி குழம்பாகத்தான் வெளிவரும்!
ஒரு பரம்பரை எதிரி என்று கருதப்பட்டவருக்கு இதை விட வேறு ஒரு காம்பிளிமென்ட் எவராலும் கொடுத்து விடமுடியாது .
இளங்கோவனின் மென்மையான உள்ளத்திற்கு தலை வணங்குகிறேன்!
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இருந்த திராவிட கோட்பாட்டாளர்கள் வரிசை பெரியார் பேரன் இளங்கோவனோடு முடிந்து விட கூடாது தொடர வேண்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக