ஞாயிறு, 8 டிசம்பர், 2024

எப்போதோ தூக்கியெறிந்திருக்க வேண்டிய ஆதவ் அர்ஜூனாவை இரசித்துக் கொண்டிருந்தவர் திருமா?

 தமிழ் மறவன் :  எப்போதோ தூக்கியெறிந்திருக்க வேண்டிய ஆதவ் அர்ஜூனாவை தொடர்ந்து வைத்துக் கொண்டு, முரண்பாடான அறிக்கைகளை இரசித்துக் கொண்டிருந்தவர் திருமா!
தன் அரசியலுக்கு பாதகமான சூழல் வந்துவிடுமோ என்கிற நிலையில்தான், மிக மென்மையாக சற்று எதிர்க்கிறார்!
திருமாவின் இயக்கத்தினரில் சிலர், அதாவது இரண்டாம் கட்ட தலைவர்கள், இருக்கிற இடத்தில் நேர்மையாக இருக்கமாட்டார்கள்!
நம்பகமான கூட்டாளியாகவும் இருப்பதில்லை, நாணயமான எதிரிகளாகவும் இருப்பதில்லை!!
திருமா பெரியாரை கொண்டாடுவார்,
இரவிக்குமார்கள் விமர்சிப்பதை பேச்சுக்கூட அவர் கண்டித்ததில்லை.
சந்தையூர் தீண்டாமை சுவர் குறித்து இதுவரையில் திருமா பேசியதே இல்லை
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்கு எதிராக சீராய்வு மனு அளித்ததெல்லாம் வரலாற்றுப் பிழை!


மதவாதத்திற்கு எதிராக தீவிரமாக, அரசியல் முன்னெடுப்பு செய்ய வேண்டியவர் மது விலக்கு என "U TURN" போட்டதெல்லாம் தடுமாற்றத்தின் வெளிப்பாடு!
அரசியல்படுத்தப்படாத விசிக இளைஞர்களை குறிவைத்து விஜய்யிடம் தள்ள காய் நகர்த்துகிறார் ஆதவ் அர்ஜூனா.
தன் வினை தன்னைச் சுடும் அல்லவா?
ஆதவ் அர்ஜூனாவின் அரசியல் புரிதல் மிக கேவலமாக இருக்கிறது, இவர் எப்படி விசிகவில் துணைப் பொதுச் செயலாளர் ஆனார்? என்பது திருமாவின் நேர்மைக்குத்தான் கேள்விக்குறி!
ஆதவ் அர்ஜூனாவை இனி நீக்கினாலும், மற்ற இரண்டாம் கட்டத் தலைவர்களை முரண்பாடாக பேச வைக்கிற அரசியலை திருமா அவர்கள் தவிர்க்க வேண்டும்!
ஆதவ் அர்ஜூனாவின் உடல்மொழி அண்ணாமலையை விட கேவலமாக இருக்கிறது!
திருமாவிற்கு பெரும் தலைவலி காலம்தான் இது!
சரி,
அது போகட்டும்...,
விஜய்யின் பேச்சும், உடல்மொழியும் படு கேவலம்!
சிறுபிள்ளைத்தனமான செய்கை!
இந்த நடிகரால் பெரியாரியல் காப்பாற்றப்படும் எனக் கருதி கூப்பாடு போட்ட கருஞ்சட்டைகளை நினைத்துப் பார்க்கிறேன்..!
எப்புட்றா???
யார்ரா நீங்கெல்லாம்???
           - மு.தமிழ் மறவன்

கருத்துகள் இல்லை: