வியாழன், 23 செப்டம்பர், 2021

ஸ்டாலினுக்கு துரை வைகோ உருக்கமான கோரிக்கை.. உங்க அண்ணன் தான் வைகோ... அவரை நீங்கதான் அரவணைக்கனும்.

  Oneindia Tamil News :   சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரவணைத்துக்கொள்ள வேண்டும் என உருக்கமான கோரிக்கை விடுத்திருக்கிறார் துரை வைகோ.
சென்னையில் நடைபெற்ற மதிமுக முப்பெரும் விழாவுக்கு தலைமை தாங்கி பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், வைகோ பிறந்தநாளை ஆண்டுதோறும் தமிழர் தலை நிமிர்வு நாளாக கொண்டாட வேண்டும் என மதிமுகவினருக்கு துரை வைகோ வேண்டுகோள் விடுத்தார்.
மதிமுக சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் முப்பெரும் விழா இந்தாண்டு சென்னையில் நடைபெற்றது. ஒன் இந்தியா தமிழ் ஏற்கனவே கூறியிருந்தது போல், மதிமுக முப்பெரும் விழாவுக்கு வைகோவின் மகன் துரை வைகோ தான் தலைமை தாங்கியிருந்தார்.
 உடல்நிலை கருதி வைகோ பங்கேற்க வாய்ப்பில்லை என ஏற்கனவே நாம் தெரிவித்திருந்தோம்.
அதேபோல் தான் நடந்தும் உள்ளது. வைகோ பிறந்தநாள் வைகோ பிறந்தநாள் வைகோவின் பிறந்தநாளான இன்று, அதாவது செப்டம்பர் 22-ம் தேதியை தமிழர் தலை நிமிர்வு நாளாக இனி வருடந்தோறும் கட்சியினர் கொண்டாட வேண்டும் என துரை வைகோ கேட்டுக்கொண்டார்.

மேலும், திமுகவும், மதிமுகவும் வேறுவேறல்ல என்றும் வைகோவை பொறுத்தவரை ஸ்டாலினுக்கு அண்ணன் தான் எனவும் தெரிவித்தார். உங்கள் அண்ணன் வைகோவை நீங்க தான் அரவணைக்கனும் என உருக்கமான கோரிக்கை ஒன்றையும் முதல்வருக்கு முன் வைத்தார் துரை.

மதிமுக முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்துகொண்டார். முன்னதாக உதயநிதி ஸ்டாலினை தான் சிறப்பு விருந்தினராக அழைப்பதாக இருந்திருக்கிறது. ஆனால் அவருக்கு இருந்த பரபரப்பான பணிகள் காரணமாக சிறப்பு விருந்தினர் விவகாரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

 வைகோ இடத்தில் துரை வைகோ அமர்ந்தது விழாவில் கலந்துகொண்ட மதிமுகவினரை நெகிழ்ச்சி அடையச் செய்தது. தனக்கு அறிமுகமானவர்கள் அறிமுகமில்லாதவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் அன்பொழுக பேசி அவர்களுடன் புகைப்படம் எடுத்து உடல்நலம் விசாரித்தார் துரை வைகோ. இது மதிமுக நிர்வாகிகளையும், வைகோவின் விசுவாசிகளையும் மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளச் செய்துள்ளது. இதனிடையே விரைவில் நீங்கள் கட்சியில் முக்கியப் பொறுப்புக்கு வர வேண்டும் என முப்பெரும் விழாவுக்கு வந்திருந்தவர்கள் பலரும் துரை வைகோவிடம் வலியுறுத்திச் சென்றனர்

கருத்துகள் இல்லை: