செவ்வாய், 21 செப்டம்பர், 2021

அதானியின் துறைமுக கண்காணிப்பில் வரலாறு காணாத போதை பொருள் கடத்தல் ... பாஜகவின் இருப்புக்கு போதையடிமைகள் தேவை

May be a Twitter screenshot of 1 person and text that says 'Srivatsa @srivatsayb 35m 59 grams of weed got Rhea jailed with NCB, ED, IT, CBI & Media behind her. BJP's Pamela Goswami was caught with 100 grams of Cocaine. But there was no NCB, ED, CBI case! Now, 3000 kg of Heroin worth ₹21,000 crores seized at Adani's Mundra Port. Where is NCB, ED, CBI & Media?! 86 921 2,225'

காஃபி டே சித்தார்த் தற்கொலையே, ஒரிசா துறைமுகத்தின் லாஜிஸ்டிக்ஸ் அவருடைய கண்ட்ரோலில் இருந்ததுதான்! அதானிக்கு துறைமுகம் கைவசமாகியும், 12600 கோடி மதிப்புள்ள லாஜிஸ்டிக்கல் கார்கோ பிஸ்னஸ் சித்தார்த்தின் கையிலிருந்ததாக சொல்லப்படுகிறது.

 புகச்சோவ்  :     போதை ராஜாங்கம்...!
கொலம்பியா, வெனிசுலாவிற்கு ஏற்றுமதியாகிற பாப்பின்ஸ்கள் வெகுகாலமாக விடுதலைப்புலிகளின் உதவியோடுதான் நடந்தது. அதன்பிறகு பாக்கிஸ்தான் மட்டும் தனி ராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்தது. ஹைக்ளாஸ் மாரிஜுவானா பாப்பின்ஸ்கள் பிஸ்னஸில் கொழிக்கும் பணத்தை இப்போது பங்குபோட தயாராகியுள்ளது இந்தியா!
கடந்த ஆறேழு வருடங்களாக, இந்தியாவின் மூலைமுடுக்குகளிலுள்ள குக்ராமங்களில்கூட, உயர்ரக ஹெராயினும், கொக்கெய்னும், பிரவுன்சுகரும், அபினியும் சரளமாக புழக்கத்திலுள்ளதை, நான்காண்டுகள் முன்பே பதிவுசெய்திருந்தேன். இந்த தாராள புழக்கத்திற்கு காரணம் என்ன!?
அரசியலில் மதவாத பாஜக நீடித்திருப்பதற்கு, போதையடிமைகள் தேவை! அதுபோல, பெருமுதலாளிகளின் அரசாதவுடனான கொள்ளையை, மக்கள் உணராதிருக்கவேண்டுமானால், நாட்டில் அதிரடி நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும். அதற்கு, இந்தியர்களை கனமான போதையில் வைத்திருப்பதே சிறந்தவழி!
இந்திய மக்கள் அறியாத வரலாற்று புதைமங்கள், ஏகாதிபத்திய சுடுகாடுகளில் உண்டு,

பெரு
சிலி
பராகுவே
வெனிசுலா
கொலம்பியா
நியூகினியா
மெக்ஸிக்கோ
காங்கோ
ருவாண்டா போன்ற நாடுகள், நமது இந்தியாவைவிட அதிகமான செழிப்புள்ள நாடுகளாகவிருந்தன. அங்கே கனிம, கரிம வளங்களை கொள்ளையிட அமெரிக்கா கண்டெடுத்த, பழைய பிரிட்டீஷாரின் வழிதான்! போதையூட்டுவது.
          ஒவ்வொரு நாடுகளிலும் தனது பொம்மை அரசுகளை நிறுவிவிட்டு, முட்டாள்  மூடர்களுக்கு அதிகாரத்தைக்கொடுத்து, சமூகவிரோத சக்திகளை ஆட்சியிலமர்த்துவதன் மூலமாக, தான் நினைத்ததையெல்லாம் சாதித்தது அமெரிக்கா!
             அதற்கான போதைப்பொருளை அந்தந்த நாடுகளுக்கு கொண்டுசேர்த்து, வளமடைந்த பெருவியாபாரிகள், பாக்கிஸ்தானிலுண்டு, இலங்கையிலுண்டு,  தார்த்தாரிய குரேஷிகளிலுமுண்டு, ஆப்கனிலுண்டு, பங்க்ளாதேஷிலுண்டு, பிலிப்பைன், தாய்லாந்திலுண்டு! இந்த வியாபாரத்தைதான் இப்போது கௌதம்அதானி, மோடியின் துணையோடு கைப்பற்றியுள்ளார்.
அதற்கு தோதாகத்தான், இந்தியாவின் கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், லாஜிஸ்டிக்ஸ் போன்றவையும்! விமானப்போக்குவரத்து, கார்கோ மேனேஜ்மென்டும், குறிப்பிட்ட சில விமானத்தளங்களும்! லாஜிஸ்டிக் மற்றும் கார்கோ கன்டெய்னர்களுக்கான ஸ்பெஷல் சாலைகளும் இங்கு தாரைவார்க்கப்படுகின்றன....!
காஃபி டே சித்தார்த் தற்கொலையே, ஒரிசா துறைமுகத்தின் லாஜிஸ்டிக்ஸ் அவருடைய கண்ட்ரோலில் இருந்ததுதான்! அதானிக்கு துறைமுகம் கைவசமாகியும், 12600 கோடி மதிப்புள்ள லாஜிஸ்டிக்கல் கார்கோ பிஸ்னஸ் சித்தார்த்தின் கையிலிருந்ததாக சொல்லப்படுகிறது.
இனிமேல், துப்பாக்கி கலாச்சாரத்தின் உச்சமான கொலம்பியாவைப்போலவோ! அல்லது, வெனிசுலா, பெரு, நியூகினியா போன்ற போதையும், பெண்வியாபாரமும், ஆயுத கலாச்சாரமுங்கொண்ட நாடாக இந்தியா உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. உங்களில் உயிரோடிருப்பவர் பாக்கியவான்கள் என்பதே நித்தியமான நிதர்சனம்.
ஜெய் மோடி!
ஜெய் அதானி!
ஜெய் மாரிஜூவானா!
                                                                 புகச்சோவ்

கருத்துகள் இல்லை: