சனி, 25 செப்டம்பர், 2021

அனுமதியின்றி கோவையில் தார் ஆலை: மிரட்டல் விடும் வடமாநிலத்தவர், பீதியில் மக்கள்!


Akash G - Samayam Tamil : கோவை செட்டிபாளையம் பகுதியில் செயல்படத் துவங்கியுள்ள தார் உற்பத்தி ஆலையை மூடக் கோரி கிராம மக்கள் ஆலையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 கோவை செட்டிபாளையம் அருகே உள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் தனியார் தார் உற்பத்தி ஆலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த ஆலை அமைப்பதற்கு பகுதி மக்களிடம் ஆலோசனை எதுவும் நடத்தாமல் ஆலையின் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும் குடியிருப்புக்கு அருகே தார் உற்பத்தி ஆலை செயல்பட்டால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் அதேபோல நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


இந்தநிலையில் அனுமதியின்றி துவங்கப்பட்டுள்ள ஆலை குறித்து கேட்டால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஆலையில் பணியாற்றும் வடமாநில காவலாளிகள் மிரட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை சிக்னலில் பணம் கேட்டும் மிரட்டும் திருநங்கை: பெண் போலீசிடம் நியாயம் கேட்பு!
இப்படியிருக்க இந்த ஆலையை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அவ்வாலையின் முன்பு 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.தொடர்ந்து தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கருத்துகள் இல்லை: