திங்கள், 7 அக்டோபர், 2019

காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சி -சிறப்பு அந்தஸ்து ரத்தால்... பிரகாஷ் ஜவடேக்கர்!

சிறப்பு அந்தஸ்து ரத்தால் காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சி - பிரகாஷ் ஜவடேக்கர்!zeenews.india.com : ஜம்முவின் நிலைமை சீராகி, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டதாக மத்திய தகவல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறியுள்ளார்!! ஜம்முவின் நிலைமை சீராகி, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டதாக மத்திய தகவல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறியுள்ளார்!!
பத்திரிக்கையாளர்களை சந்தித்த மத்திய தகவல்துறை அமைச்சர் பிரகாஷ்
ஜவடேக்கர், "ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறபட்டதை தொடர்ந்து, காஷ்மீர் மக்கள், மத்திய அரசின் இந்த முடிவால் மகிழ்ச்சியாகவே உள்ளனர். பிற மாநில மக்களும், ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுவரை, மத்திய அரசால், காஷ்மீருக்கான பாதுகாப்பு, வெளியுறவு போன்ற ஒரு சில முக்கிய முடிவுகளையே எடுக்க முடிந்த நிலையில், இனி அம்மாநிலத்தின் நலனுக்கான எல்லா முடிவுகளையும் அரசால் எடுக்க முடியும் என்பதும், பிற மாநிலங்கள் பெறும் அனைத்து மானியங்களையும் இனி ஜம்மு காஷ்மீரும் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது" என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்நாள் வரை, பாகிஸ்தானின் மறைமுக தாக்குதல்களினாலும், பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் போன்றவர்களின் தாக்குதல்களினாலும், மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வந்த ஜம்மு காஷ்மீரை, இனி இத்துன்பங்கள் ஏதுமின்றி மிக அமைதியான ஒரு பகுதியாக மாற்ற இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்றது என்பதும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியப் பிரதேசங்களாக பிரித்து புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா அக்டோபர் 31 ஆம் தேதி அமலுக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: