ஞாயிறு, 6 அக்டோபர், 2019

ப.சிதம்பரத்திற்கு வயிற்று வலி ! எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி மறுப்பு !

chidambaram வெப்துனியா :  ஐஎன்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்காத நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவ்வப்போது அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் அவரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். சமீபத்தில் தான் வீட்டு உணவை உண்ணலாம் என அவருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததுள்ளது. இந்நிலையில் இன்று சிறையில் சிதம்பரத்துக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து, சிகிச்சைக்காக அவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டும்கூட அவருக்கு அங்கு அனுமதிக்கவில்லை என தகவல் வெளியாகிறது.

இதனால் சிதம்பரம் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக விமர்சங்களை தெரிவித்து வருகின்றனர். சிதம்பரம் சிறைச்சாலையில் உள்ள சக கைதிகளைப் போல் அங்குள்ள மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகிறது<

கருத்துகள் இல்லை: