புதன், 9 அக்டோபர், 2019

கீழடியில் ஒரு சாமி சிலையும் இல்லை... சங்கிகளின் வயிற்றில் புளியை கரைத்த வரலாறு

Kandasamy Mariyappan : கீழடிக்கு எனது
நண்பர்கள் பார்த்தசாரதி மற்றும்
சுந்தரேசனுடன் சென்று சுற்றிப் பார்த்தோம்.
இராமாயண, மகாபாரத புகழ் சமஸ்கிருத சங்கிகள், ஏன் பயப்புடுகின்றனர் என்று இப்பொழுது புரிகிறது.
2000 ஆண்டுகளாக அவர்கள் கூறிவந்த பொய்களை, நமது கீழடி ஹீரோ ஒரே நாளில் சிதைத்து விட்டது.
2600 ஆண்டுகளுக்கு முன்பே சுடு செங்கலை வைத்து அழகிய வேலைப்பாடுடன் வீடுகள் கட்டியுள்ளனர் நமது தமிழ் முன்னோர்கள். சுடு செங்கலை வைத்து வாய்க்கால் அமைத்து, தண்ணீர் தொட்டி கட்டி, உறை கிணறு கட்டி வைத்து நீரை சேமித்துள்ளனர்.
ஆனால் பாருங்கள், பாவம், ஒரு கடவுள் கற்சிலைகளும் இல்லை. இதுதான் சங்கிகளின் வயிற்றில் புளியை கரைத்து விட்டது.
எனவே எப்படியாவது அடுத்த கட்ட அகழாய்வுகளை நிறுத்த எல்லா
திட்டங்களையும் தீட்டுகின்றனர். அதற்கு நமது அடிமைகளும் உடந்தையாக இருக்கின்றன.

சமீபத்தில் நடந்த புதிய தலைமுறை வட்ட மேசை விவாதத்தில் கலந்து கொண்ட ராகவன், ஒன்றிய அரசு அனுமதி அளித்ததையே பெருமையாக பேசுகிறார், கிபி 1ம் நூற்றாண்டுக்குப் பிறகு கடவுள் கற்சிலை இருந்ததை கூறி பைத்தியம் பிடித்தவர் போல உளருகிறார். கிருஷ்ணன் என்ற சங்கி ஒருபடி மேலே சென்று, கார்பன் கணிப்பு தவறு என்கிறார்.
ஆரியத்தை அடியோடு அழிக்க, கீழடியே ஆதாரம்.
மாஃபியாக்களை, அடிமைகளை துரத்தி அடித்தால் மட்டுமே ஆரியத்தை எதிர் கொள்ள முடியும்.
மீண்டும் ஒரு முறை நம்மை அடிமைப்படுத்திக் கொள்ளாமல் விழிப்புடன் இருப்போம்.

கருத்துகள் இல்லை: