சனி, 12 அக்டோபர், 2019

தமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்  மாலைமலர் :பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்
சென்னை:
கோவளத்தில் தாஜ் ஓட்டலில் நடந்த இந்தியா- சீனா அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்ற சீன அதிபர் ஜின்பிங் பேசும் போது கூறியதாவது:-
மோடி பீச்சில் குப்பை பொறுக்கும் போட்டோ சூட்
இந்தியா வந்ததில் நான் மிகுந்த மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் எங்களுக்கு மிகவும் சிறப்பான வரவேற்பு கொடுத்தீர்கள். அதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் உண்மையான அன்பை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
இந்தியா-சீனா இடையே நல்லுறவு மேம்பட்டு வருகிறது. இரு நாடுகளும் இதுபோன்று தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.
மாமல்லபுரத்தை என் வாழ்க்கையில் இனி ஒரு நாளும் மறக்க முடியாது. பல இனிமையான நினைவுகளை மாமல்லபுரம் பயணம் எனக்கு தந்துள்ளது. என்னை போன்றே சீன அதிகாரிகளுக்கும் மாமல்லபுரம் மறக்க முடியாதபடி இருக்கும் என்று கருதுகிறேன்.


தமிழகத்தின் விருந்தோம்பல் என்னை நெகிழ வைத்து விட்டது. என்னுடன் வந்த அதிகாரிகளும் இதை உணர்ந்தனர். இதற்காக மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடியும், நானும் நல்ல நண்பர்கள். நாங்கள் இருவரும் நேற்றும், இன்றும் மனம்விட்டு பேசினோம். அது பயனுள்ளதாக இருந்தது. நாங்கள் தொடர்ந்து இரு நாடுகளின் உறவு மேம்படபாடுபடுவோம்.
நாங்கள் இருவரும் மிக ஆழமாக பேச்சு நடத்தி உள்ளோம். இந்த பேச்சு வார்த்தைகள் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த சந்திப்பு நிச்சயம் அமையும்.
மாமல்லபுரத்தின் வருகை எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது. நிச்சயமாக இது ஒரு புதிய தொடக்கமாக அமையும்.
இவ்வாறு சீன அதிபர் ஜின்பிங் பேசினார்.

கருத்துகள் இல்லை: