வியாழன், 10 அக்டோபர், 2019

ஒரிஜினல் சுப்பர் ஸ்டார் வடிவேலுவுக்கு இன்று பிறந்த நாள்- (அக்டோபர் 10, 1960)

வடிவேலுவுக்கு இன்று பிறந்த நாள் .. 
தமிழ் திரையில் இன்றுள்ள  ஒரே ஒரு சுப்பர்sஸ்டார் வைகை புயல் வடிவேலுதான்!
திரைப்படம் தொலைக்காட்சி எல்லாம் தாண்டி சமுக வலையிலும் கொடி நாட்டிய மாபெரும் தமிழ் கலைஞன் வடிவேலு.
இன்று சுப்பர் ஸ்டார் அல்டிமேட் ஸ்டார் உலகநாயகன் தளபதி சிங்கம் தங்கம் என்றெல்லாம் ஓவர் பில்டப் கொடுக்கப்படும் நடிகர்கள் எல்லோரையும் ஓரங்கட்டி ரசிகர்களின் மனதில் மறக்கவே முடியாதவாறு வடிவேலு அமர்ந்திருக்கிறார். .
ரசிகர்களின் அன்றாட வாழ்வில் ஏதோ ஒரு வழியில் மக்களை தினசரி சிரிக்க வைக்கிறாரே?
இதுவரை எந்த கலைஞன் ரசிகர்களை இப்படி கட்டி போட்டிருக்கிறார்?
அதுவும் பல ஆண்டுகளாக  படங்களில் நடிக்கவே இல்லை .
சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் நடிக்காமல் இருந்தாலே நடிகர்களை ரசிகர்கள்  மறந்து விடுவார்கள் என்று கூறப்படுவதுண்டு. .
அதையெல்லாம் தூக்கி அடித்துவிட்டு வடிவேலு மக்கள் மனதில் அசைக்க முடியாதவாறு  ஒரு சிங்காசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்.
ரஜினி கமல் போன்ற நட்சத்திர நடிகர்களுக்கு கொடுக்கப்படும் ஓவர் பில்டப் விளம்பரத்தில் பத்தில் ஒருபங்கு  விளம்பரம் கொடுத்தாலே வடிவேலுவின் உயரம் எல்லோரையும் பிரமிக்க வைத்துவிடும் .

அது ஒன்றும் இல்லாமலே அவர் உயரேதான் இருக்கிறார் .. அது ஒன்றே போதும் !
வடிவேலுதான் இன்றைய ஒரிஜினல் சுப்பர் ஸ்டார் என்று தாரளமாக கூறலாம் .

கருத்துகள் இல்லை: