மாறன் |
nakkheeran.in - செல்வகுமார் : திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடத்த நகைக்கொள்ளை விவகாரத்தில் திருவாரூரில் மேலும் ஒரு அதிமுக பிரமுகரை கைது செய்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளது காவல்துறை.
கடந்த 2 ஆம் தேதி திருச்சியில் உள்ள பிரபலமான லலிதா ஜுவல்லரியின் சுவற்றை துளையிட்டு 13 கோடி மதிப்பீட்டில் உள்ள நகை,வைரம் உள்ளிட்ட ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகனையும், அவனது அக்காமகன் சுரேஷ்யும் தேடி வருகிறது காவல்துறை. கொள்ளையடிக்கப்பட்ட நகையோடு பிடிபட்ட திருவாரூர் அதிமுக பிரமுகரின் மகனும், சசிகலா சகோதரர் திவகரனின் ஆதரவாளருமான மணிகண்டனையும், முருகனின் அக்கா கனகவள்ளி உள்ளிட்டோரை முதற்கட்டமாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பிறகு 6 ம் தேதி மாலை முருகனின் அண்ணன் மகன் முரளியோடு மற்றொருவரையும் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி திருவாரூரை சேர்ந்த மாறன் என்கிற திருமாறனை கைது செய்து விசாரணையில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்," திமுகவின் முன்னாள் நகர செயலாளர் இரா.சங்கரின் அண்ணன் திருமாறன் என்கிற மாறன் இவர் திருமணம் செய்து கொல்லாமல், பஜனைமட தெருவில் கடைசியாக உள்ள தனது வீட்டில் வசித்து வருகின்றார். அதிமுகவில் இருந்தாலும் பலான வேலைகளில் ஈடுபடுவது வழக்கம்.
கட்டப்பஞ்சாயத்து செய்வது, திருட்டு கும்பலுக்கு அடைக்கலம் கொடுப்பது, சொத்துக்களை அபகரித்து மாற்றிக்கொடுப்பது என அன்டர் டீலிங் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். தனக்கென ஒரு குரூப்பை வைத்திருக்கிறார். நேதாஜி சாலையில் உள்ள ஒரு குளத்தை ஆக்கிரமித்து கடை கட்டி தினசரி வாடகைக்கு விட்டிருக்கிறார். அங்குதான் இவருடைய சகாக்கள் கூடி திட்டமிடுதலும், கட்டப்பஞ்சாயத்து செய்தலும் நடக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக