சனி, 12 அக்டோபர், 2019

சீனமொழியில் டிரெண்ட் செய்த தமிழர்கள். மோடி #泰米尔纳德邦欢迎习近平 #TN_welcomes_XiJinping #回到莫迪 #Gobackmodi

டிரெண்ட்
மோடி சீன அதிபர் ஆங்கிலம் மட்டுமல்ல.. சீனத்திலும் டிரெண்ட் செய்த தமிழர்கள்.. மோடிக்கு எதிராக வைரலான 3 ஹேஷ்டேக் tamil.oneindia.com-shyamsundar. : மோடிக்கு எதிராக வைரலாகும் 3 ஹேஷ்டேக்
சென்னை: பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக கோ பேக் மோடி டேக் தேசிய அளவில் வைரலாக டிரெண்டாகி வருகிறது. அதேபோல் சீன மொழியிலும் #回到莫迪 என்ற டேக் பிரதமர் மோடிக்கு எதிராக டிரெண்டாகி வருகிறது.
டிவிட்டரில் #GoBackModi டேக் டிரெண்டானால் போதும். கண்ணை மூடிக்கொண்டு பிரதமர் மோடி எங்கே இருக்கிறார் என்று உலகமே சொல்லிவிடும்.
ஆம், பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் #GoBackModi டிரெண்டாவது வழக்கம். இன்றும் அதற்கு குறைவில்லாமல் #GoBackModi தேசிய அளவில் நம்பர் 1 இடத்தில் டிரெண்டாகி வருகிறது.



மோடி சீன அதிபர்

சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று தமிழகம் வருகிறார். இன்று மதியம் சென்னை வரும் அவர், மாலை மாமல்லபுரம் செல்கிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியை அவர் இன்று சென்னையில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு நிகழ்விற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.


டிரெண்ட்

இதனால் தற்போது தேசிய அளவில் #GoBackModi டேக் முதல் இடத்தில் டிரெண்டாகி வருகிறது. தமிழர்கள் பலர் எப்போதும் போல பிரதமர் மோடிக்கு எதிராக இந்த டேக்கில் டிவிட் செய்து வருகிறார்கள். மோடி வருகையை எதிர்த்து இதில் நிறைய டிவிட்கள் பொதுமக்களால் போடப்பட்டு வருகிறது.


சீன மொழி

சீன மொழியிலும் #回到莫迪 என்ற டேக் பிரதமர் மோடிக்கு எதிராக டிரெண்டாகி வருகிறது. திரும்ப போ என்று சீன மொழியில் டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் சீன மொழியில் தவறான அர்த்தத்தில் ''மீண்டும் மோடி'' என்ற இன்னொரு டேக்கும் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.


இப்படியா

பொதுவாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும்தான் தமிழர்கள் டிரெண்ட் செய்து இருக்கிறார்கள். தமிழகம் வரும் சீன அதிபருக்கு புரிய வேண்டும் என்பதற்காக தற்போது சீன மொழியிலும் தமிழர்கள் டிரெண்ட் செய்ய தொடங்கிவிட்டார்கள். இது நாடு முழுக்க வைரலாகி உள்ளது.


என்ன வரவேற்பு

இது இல்லாமல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்கும் வகையில் #TamilNadu_welcomes_XiJinping என்று டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. சீன அதிபர் வருவதில் எங்களுக்கு பிரச்சனையில்லை. அதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம். பிரதமர் மோடி வருவதை எதிர்க்கிறோம் என்று இதில் பலர் டிவிட் செய்து வருகிறார்கள்

கருத்துகள் இல்லை: