திங்கள், 26 மார்ச், 2018

கர்நாடகாவில் மீண்டும் காங். ஆட்சி.. வெளியானது பரபரப்பு சர்வே.. பாஜகவுக்கு பெரும் ஏமாற்றம்

Veera Kumar- Oneindia Tamil பெங்களூர்: கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலரப்போகிறது என்று சி-ஃபோர் அமைப்பு நடத்திய சர்வே தெரிவிக்கிறது. இந்த அமைப்பு, கடந்த சட்டசபை தேர்தலின்போது, ஏறத்தாழ மிகவும் துல்லியமாக காங்கிரஸ் வெற்றி குறித்து சர்வே வெளியிட்டு அது அப்படியே பலித்திருந்ததால், அரசியல் கட்சிகளிடையே இந்த சர்வே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 224 சட்டசபை தொகுதிகளை கொண்ட, கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி தனிப்பெரும்பான்மையோடு நடைபெற்று வருகிறது. முதல்வர் வேட்பாளர்கள் முதல்வர் வேட்பாளர்கள் எதிர்க்கட்சியாக பாஜகவும், அதற்கு அடுத்த பெரிய கட்சியாக முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளமும் (ம.ஜ.த) உள்ளன. மூன்று கட்சிகளுமே வரும் தேர்தலில் தங்களது பலத்தை அதிகரிக்க தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. பாஜகவின் முதல்வர் வேட்பாளராக எடியூரப்பாவும், ம.ஜ.த முதல்வர் வேட்பாளராக குமாரசாமியும் முன்னிறுத்தப்படுகிறார்கள்.
பாஜக, காங்கிரஸ் தீவிரம் : அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக கர்நாடக தேர்தலில் வென்றே தீர வேண்டும் என்ற வேகத்தில் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியோ, இருக்கும் 3 மாநிலங்களில் ஒன்றையும் இழந்துவிட கூடாது என்ற தீவிரத்தில் செயல்படுகிறது. இந்த நிலையில் சி-ஃபோர் அமைப்பு, இம்மாதம் 1ம் தேதி முதல், 25ம் தேதிவரை 154 தொகுதிகளில் சர்வே நடத்தியுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி கூடுதலாக 9 சதவீத வாக்குகளை ஈர்த்து மொத்தம் 46 சதவீத வாக்குகளை ஈர்க்கும் என்று அடித்துச் சொல்லியுள்ளது. இது தொடர் தோல்விகளால், சோர்ந்துள்ள அகில இந்திய காங்கிரஸ் மட்டத்தில் கடும் குஷியை ஏற்படுத்தியுள்ளது. 
பாஜக வாக்கு வங்கி:  அதேநேரம், பாஜக 31 சதவீத வாக்குகளைத்தான் பெற முடியும் என்றும், 
ம.ஜ.த 16 சதவீத வாக்குகளை பெறும் என்றும் அந்த சர்வே கூறுகிறது. தொகுதி அடிப்படையில் பார்த்தால், காங்கிரஸ் 126 தொகுதிகளை வென்று அறுதி பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் என்றும், பாஜக தற்போதுள்ள 43 எம்எல்ஏக்கள் என்ற நிலையில் இருந்து சற்று முன்னேறி 70 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், ம.ஜ.த 27 தொகுதிகளை வெல்லும் எனவும் கணித்துள்ளது. கடந்த 2013 தேர்தலில் ம.ஜ.த 40 தொகுதிகளை வென்றிருந்த நிலையில், இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகும். 
சித்தராமையா சூப்பர் :சர்வேயில் பங்கேற்ற 22,357 வாக்காளர்களில், 45 சதவீதம் பேர், சித்தராமையாவை சிறந்த முதல்வர் வேட்பாளர் என கூறியுள்ளனர். 
26 சதவீதம் பேர் எடியூரப்பாவுக்கும், 
13 சதவீதம் பேர் குமாரசாமிக்கும் ஆதரவு அளித்துள்ளனர். 
21 சதவீதம் பேர் சித்தராமையா செயல்பாட்டில் மிகவும் திருப்தியடைந்துள்ளதாக கூறியுள்ளனர். 
54 சதவீதம் பேர் ஏதோ ஒரு வகையில், திருப்தியடைந்துள்ளோம் என்றும், 
25 சதவீதம்பேர் மட்டுமே திருப்தியில்லை எனவும் கூறியுள்ளனர். 

துல்லியமான கணிப்பு: கடந்த கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இதே சி-ஃபோர் அமைப்பு வெளியிட்ட சர்வேயில், காங்கிரஸ் 119-120 தொகுதிகளை வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஏறத்தாழ துல்

கருத்துகள் இல்லை: