செவ்வாய், 27 மார்ச், 2018

100 ரஷ்ய தூதரக அதிகாரிகள் அமெரிக்க ஐரோப்பாவில் இருந்து வெளியேற்றம்

tamilthehindu :அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ரஷ்ய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் முன்னாள் உளவாளி செர்ஜி ஸ்கிரிபால் (66). அவர் பிரிட்டனிடம் ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்காக அவருக்கு சிறை தண்டனை வழங்கிய ரஷ்யா, பின்னர் விடுதலை செய்தது. அவர் பிரிட்டனின் சாலிஸ்பரி நகரில் வசித்து வந்தார். அண்மையில் அவரும் அவரது மகளும் அங்குள்ள ஓட்டலுக்கு சென்றபோது மர்ம நபர் ஒருவர், இருவர் மீதும் ரசாயனத்தை வீசினார். இதில் நிலைகுலைந்த இருவரும் கோமா நிலையில் சிகிச்சை பெறுகின்றனர். ரசாயன தாக்குதல் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக குற்றம் சாட்டிய பிரிட்டன், 23 ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நேற்று 60 ரஷ்ய தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற உத்தரவிட்டார். இதேபோல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட ரஷ்ய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை: