
எனினும் இந்த குற்றச்சாட்டு குறித்து முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அப்போதே வலியுறுத்தினார். இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்வதற்கான இம்பீச்மென்ட் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
ஓரிரு நாளில் நாடாளுமன்றத்தில் ஓரிரு நாளில் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு தற்போது நடந்து வருகிறது. இந்தக் கூட்டத் தொடரிலேயே மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர முயல்கிறது காங்கிரஸ். இதனையடுத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக, இம்பீச்மென்ட் தீர்மானத்தை கொண்டு வருவதற்கான முயற்சியில் அந்த கட்சி ஈடுபட்டுள்ளது.
இதற்காக, கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளது . சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்,திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கட்சியின் எம்பிகள் காங்கிரஸ் கட்சியின் இம்பீச்மென்ட் தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதாக கையெழுத்து போட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் ஓரிருநாளில் தலைமை நீதிபதியை நீக்கம் செய்ய கொண்டுவரப்பட உள்ள இம்பீச்மென்ட் தீர்மானம் தொடர்பாக பிரசாந்த் பூஷணுடன் மமதா பானர்ஜி ஆலோசனை நடத்தி வருகிறார். தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், இடது சாரி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது காங்கிரஸ் கட்சி கொண்டு வரவுள்ள இம்பீச்மென்ட் தீர்மானம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பதவிநீக்க தீர்மானத்தை கொண்டுவர காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.. இந்திய நீதியமைப்பின் மீதான சாமானியர்களின் எஞ்சியிருந்த நம்பிக்கையை முற்றிலுமாக சிதைத்தவர் என்றே இவரது பெயர் வரலாற்றில் எழுதப்படும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக