

ஒரு புரொஜக்டரை திரையரங்கு உரிமையாளர்தான் தான் வாங்கி வைக்க வேண்டும். இது தான் சட்டம். அந்தத் திரையரங்கிற்கு தான் அரசு லைசென்ஸ் வழங்கும். இது ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கப்படும். இதற்கான வழிமுறைகள் இப்படி இருக்க, புதிய மாற்றத்தை ஏற்றுக்கொண்டு கடந்த 12 ஆண்டுகளாக தயாரிப்பாளர்கள் அந்த VPF எனப்படும் கட்டணத்தைச் செலுத்தி வருகிறார்கள்.
கட்டண விபரம்:
ஒரு தியேட்டருக்கு ஒரு வாரத்திற்கு ரூபாய் 10,000 VPF சராசரியாக (D.cinema & E.cinema) +18% ஜிஎஸ்டி. ஒரு படம் நான்கு வாரம் ஒரு தியேட்டரில் ஓடினால், அதற்கு தயாரிப்பாளர் 10,000×18% ×4=47,200 கட்ட வேண்டும்.
இந்தப் படத்திற்கு 200 தியேட்டரில்(screen) திரையிட 47,200 ×200=94,40,000 கட்ட வேண்டும்.
சரி, மாற்றத்தை ஏற்றுக் கொண்டு கட்டணம் செலுத்துவது நியாமானது ஏற்றுக் கொள்ளலாம். அதே சமயம் எத்தனை வருடம் கட்டமுடியும்? இது தான் கேள்வி.
ஒரு 5 வருடம் தொடா்ந்து கட்டினால் புரொஜக்டர் தியேட்டருக்கு சொந்தமாகி விடும். ஆனால் தயாரிப்பாளர்கள் 12 வருடங்கள் பணம் செலுத்திய பிறகும் இந்தக் கணக்கு முடியாமல், தொடர்ந்து பணம் கட்டவேண்டும் என்று டிஜிட்டல் நிறுவனங்கள் சொல்வதை ஏற்கத் தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை. இந்த நியாயமான கோரிக்கைக்கு திரையரங்குகளும் ஆதரவளிக்கவில்லை. இது தான் பிரச்சினைக்கான காரணம். சரி ஒரு திரையரங்கு உரிமையாளர் ஒரு புரொஜக்டரை(E.cinema) சொந்தமாக வாங்கி வைத்துக்கொண்டால் என்ன செலவாகும் என்று பார்க்கலாம்.
ஒரு புரொஜக்டர் & ஒரு சர்வர்(D.cinema) விலை ரூபாய் 6,00 000 என்று வைத்துக் கொள்வோம். இதை ஜந்து வருடத் தவணையாக செலுத்துவது என்று எடுத்துக் கொண்டால் 6,00,000/5 =1,20,000. ஒரு வருடத்திற்கு ரூபாய் 1,20,000. இதையே மாதமாகக் கொண்டால் 1,20,000/12=10,000. அதாவது மாதம் ரூபாய் பத்தாயிரம் வீதம் செலுத்தினால் தவணை முடிந்துவிடும். இந்த பத்தாயிரத்தைத் தான் தயாரிப்பாளர் மாதம் 47,200ஆக கட்டிக் கொண்டிருக்கின்றனர். இது எந்த விதத்தில் நியாயம்?
மேலும் ஒரு முக்கியமான தகவல். புரொஜக்டரை திரையரங்கு உரிமையாளர் சொந்தமாக வைத்துக் கொண்டால் விளம்பர வருமானம் இதைவிட அதிகமாகவே வர வாய்ப்பு இருக்கிறது. அதாவது புரொஜக்டர் செலவு விளம்பரத்திலேயே வந்துவிடும். இந்தக் கணக்கு ஏன் திரையரங்க உரிமையாளர்களுக்குப் புரியாமல் போனது எனத் தெரியவில்லை.
தயாரிப்பாளர்கள் இனி எங்களால் பணம் செலுத்தமுடியாது என்று சொல்வதின் அர்த்தம், அந்தப் பணத்தைக் கட்ட வழியில்லை என்பது தான். திரையரங்கு உரிமையாளர்கள் இதை உணர்ந்து, எங்கள் நிலையையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேற்கூறியவாறு எஸ்.எஸ்.துரைராஜ் கொடுத்திருக்கும் விளக்கம் தயாரிப்பாளர் சங்கத்தின் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கிறது. தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என இரு தரப்பினரும் பாதிக்கப்பட்டிருப்பதை தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கினாலும், திரையரங்க உரிமையாளர்கள் பாராமுகமாகவே இருக்கின்றனர். தமிழக அமைச்சர்களுடனான சந்திப்புக்குப் பிறகு, இது அதிகரித்திருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக