திங்கள், 26 மார்ச், 2018

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.க்களும் ராஜினாமா செய்வார்கள் - ஜெகன் மோகன் மிரட்டல்

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.க்களும் ராஜினாமா செய்வார்கள் - ஜெகன் மோகன் மிரட்டல்மாலைமலர் :ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விவகாரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்களும் ராஜினாமா செய்வார்கள் என அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி எச்சரித்துள்ளார். ஆந்திரா:< ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து அளிக்க மறுத்துவரும் விவகாரத்தில் பாரதிய ஜனதாவுக்கும், தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே வெடித்த கருத்து வேறுபாடு காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணி இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது.
பின்னர், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் கொண்டு வர சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடருக்காக பாராளுமன்றம் கூடியதில் இருந்து இரு அவைகளையும் நடத்தவிடாமல் எதிர்க்கட்சி எம்.பி.க்ககள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், இந்த அமளிகளுக்கு இடையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர அனுமதிக்க மாட்டேன் என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறி வருகிறார்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் மற்றொரு பெரிய கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்களும் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: