
இதைத் தொடர்ந்து அவருக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. அவரது உறவினரும் வக்கீலுமான அசோகன் சொந்த பொறுப்பில் சசிகலாவை அழைத்து வந்தார். பாதுகாப்பிற்கு போலீசார் யாரையும் அனுப்பவில்லை.
தஞ்சை வந்த அவர் கணவரின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து நடராஜன் வீட்டில் தங்கியிருந்த சசிகலாவை சீமான், வைகோ உள்பட முக்கிய பிரமுகர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் இன்று காலை தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, ஒரத்தநாடு எம்.எல்.ஏ ராமச்சந்திரன் ஆகியோர் நடராஜன் வீட்டிற்கு வந்து சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறினர்.
சசிகலா 15 நாட்கள் பரோலில் வந்தார். ஆனால் தற்போது 12 நாட்களே ஆன நிலையில் திடீரென அவர் இன்றே சிறைக்கு செல்ல முடிவு செய்தார். முன் கூட்டியே சிறைக்கு செல்வது குறித்து பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்தன.
தஞ்சை பரிசுத்தம் நகரில் உள்ள நடராஜனுக்கு சொந்தமான வீட்டில் பரோல் நாட்களில் தங்கி இருந்த சசிகலாவிடம் நடராஜனின் சொத்துக்களை முறையாக பிரித்து தர வேண்டும் என அவரது உறவினர்கள் கேட்டதாகவும், இதற்கிடையில் தினகரனுக்கும், திவாகரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும். அதனை சசிகலாவால் தீர்த்து வைக்க முடியவில்லை என்பதாலும் அவர் முன்னதாக புறப்பட்டார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சசிகலா இன்று காலை 8.50 மணிக்கு தஞ்சையில் இருந்து காரில் புறப்பட்டார். சசிகலாவுடன் எம்.எல்.ஏ பழனியப்பன், ரெங்கசாமி, செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன் உள்பட பலர் சென்றனர். மாலை 4 மணியளவில் பெங்களூரு சென்றடைந்த அவர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு திரும்பினார்.
பரோல் காலம் முடியும் முன்பாகவே அவர் சிறைக்கு திரும்பியதன் மூலம் தண்டனை காலத்தில் இருந்து அவருக்கு சலுகைகள் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக