சனி, 2 டிசம்பர், 2017

கடலுக்கு சென்ற 2,000 மீனவர்களை காணவில்லை என கன்னியாகுமரி மீனவர்கள்....


தண்டோரா குழு :கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 2,000 மீனவர்களை காணவில்லை என கன்னியாகுமரி மீனவர்கள் புகார் தெரிவுத்துள்ளார்.
;கடந்த சில தினங்களுக்கு முன் வழக்கம் போல் கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது ஒகி புயல் வீசியதால் அவர்கள் கடலில் சிக்கிக்கொண்டனர். இதற்கிடையில், கிட்டத்தட்ட புயல் குறித்த முன்னறிவிப்பு ஏதும் இல்லாத காரணத்தினால் கடலில் மாட்டிகொண்ட அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கிட்டதட்ட 2000 மீனவர்கள் கடலில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, குமரி மாவட்டத்தில் இருந்து, விசைப்படகு மூலம் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசின் உதவியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார். மீனவர்கள் மீட்பு நடவடிக்கையில் மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதல் படைகளை அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் வலியுறுத்தினார்.

மேலும், 737 மீனவர்கள் பத்திரமாக இருக்கிறார்கள் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஆனால் அமைச்சர் கூறுவது தவறான தகவல் என மீனவ குடும்பத்தினர் மறுத்துள்ளனர். சின்னத்துறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 2 ஆயிரம் பேர் கடலுக்குள் சென்றுள்ளனர். இதில் ஒருவர் கூட திரும்பவில்லை எனக் கூறியுள்ளனர்.
December 2, 2017 தண்டோரா குழு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 2,000 மீனவர்களை காணவில்லை என கன்னியாகுமரி மீனவர்கள் புகார் தெரிவுத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் வழக்கம் போல் கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது ஒகி புயல் வீசியதால் அவர்கள் கடலில் சிக்கிக்கொண்டனர். இதற்கிடையில், கிட்டத்தட்ட புயல் குறித்த முன்னறிவிப்பு ஏதும் இல்லாத காரணத்தினால் கடலில் மாட்டிகொண்ட அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கிட்டதட்ட 2000 மீனவர்கள் கடலில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, குமரி மாவட்டத்தில் இருந்து, விசைப்படகு மூலம் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசின் உதவியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார். மீனவர்கள் மீட்பு நடவடிக்கையில் மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதல் படைகளை அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் வலியுறுத்தினார்.
மேலும், 737 மீனவர்கள் பத்திரமாக இருக்கிறார்கள் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஆனால் அமைச்சர் கூறுவது தவறான தகவல் என மீனவ குடும்பத்தினர் மறுத்துள்ளனர். சின்னத்துறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 2 ஆயிரம் பேர் கடலுக்குள் சென்றுள்ளனர். இதில் ஒருவர் கூட திரும்பவில்லை எனக் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: